For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்

|
நீண்ட காலங்களுக்கு பிறகு நல்ல ஒரு குடும்பப்படம் -கடைக்குட்டி சிங்கம்- வீடியோ

Rating:
3.5/5
Star Cast: கார்த்தி, சத்யராஜ், சயீஷா சைகல்
Director: பாண்டிராஜ்

சென்னை : தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கண்ணியமான படம் என்று

சொன்னால் அது கடைக்குட்டி சிங்கம் என்று மார் தட்டி சொல்லலாம். எந்த வித

ஆபாசம் இல்லாமல் குடும்படித்தோடு கட்டாயம் பார்க்கவேண்டிய படம். பாசம்

கூட்டு குடும்பம் எல்லாம் அழிந்து போகும் காலத்துக்கு இது ஒரு

முட்டுக்கட்டை என்றும் சொல்லலாம்.

இது அரசியல் படமா காதல் படமா விவசாயம் படமா இல்லை குடும்ப படமா இல்லை

நகைசுவை படமா என்று கேட்டால் எல்லாம் உள்ள ஒரு தரமான படம் என்று தான்

சொல்ல வேண்டும். காரணம் எல்லா விஷயங்களையும் அளவோடு அழகாக சொல்லி இருக்கிறார்

இயக்குனர் பாண்டிராஜ். படம் ஆரம்பித்த முதல் கடைசி காட்சி வரை மக்களுக்கு

தேவையான விஷயங்களையும் படத்தின் கதைக்கு தேவையான பாதையை விட்டு நகராமல் மிக

சிறப்பாக எல்லா விஷயங்களும் மிக யதார்த்தமாக கூறியுள்ளார்.

 Kadaikutty Singam  review

விவசாயம், விவசாயம் என்று சும்மா கூவாமல் அதை உணர்வு பூர்வமாக

கூறியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதோடு ஜல்லிக்கட்டு ரேக்கலா ரேஸ் என

கிராமவாழ்க்கையை மிக அழகாக படம் பிடித்துள்ளார். படத்தில் துணை நடிகர்களைவிட

முக்கிய நடிகர்கள் அதிகம். காரணம் கதையின் அம்சம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு

கூட்டு குடும்பத்தின் அத்தனை உறவு முறைகள், அந்த பந்தத்தை அனைவரும் உணர்ந்து

வெளிபடுத்தியுள்ளார்கள்

படத்தில் நடித்த அனைவரும் நான் நீ என்று போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு

சரியான கதாபாத்திர தேர்வுகள் அதுக்கும் இயக்குனருக்கு ஒரு பாரட்டு

கொடுத்தே ஆக வேண்டும். ஒரு கிராமத்து கதை எழுதுவதோடு அதற்கு சரியான திரைகதை அமைந்தால் தான் அந்த படம் வெற்றி படமாக அமையும் அந்த வகையில் இந்த படத்தில் எல்லா

அம்சங்களையும் மிக தெளிவாக படம் பிடித்துள்ளார் இயக்குனர்.

 Kadaikutty Singam  review

கார்த்தி இப்படி ஒரு மாமன் இப்படி ஒரு மகன் இப்படி ஒரு அண்ணன் இப்படி தம்பி

நமக்கு கிடைப்பானா என்று ஏங்க வைக்கும் ஒரு கதாபத்திரம். கதைக்கு என்ன

தேவையோ அதை புரிந்து மிக அற்புதமான ஒரு நடிப்பு. கார்த்தி ஒரு யதார்த்தமான

ஹீரோ. எந்த கதைக்கு என்ன தேவையோ அந்த கதைக்கு தன்னை மாற்றி கொள்ளும் திறமை

இவரிடம் அதிகம். அதுவே இவரின் வெற்றி. இவர் நடித்த கிராமப் படங்கள் எல்லாமே மிக

பெரிய வெற்றி அந்த வகையில் கார்த்திக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமையும்.

கார்த்தி நடிப்பு இந்த படத்தில் ஒரு படி மேல் என்று தான் சொல்லணும்

விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும் சரி, கிளைமாக்ஸ் காட்சியிலும்

எங்கு தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று போராடும் போதும் சரி

அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இந்த கதைக்கு மிக பெரிய பலம் வசனம்

அந்த வசனங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் .

சத்யராஜ் சொல்லவா வேணும் அடேங்கப்பா இரண்டு கதாபாத்திரம் இளமை சத்யராஜ்

அப்பா சத்யராஜ் இரண்டிலும் சும்மா விளையாடி இருக்கிறார். இளமை

கதாபாத்திரத்தில் வில்லன் கலந்த ஒரு தோற்றம். 'மகன் தான் வேணும் அதற்கு என்ன

வேணும் என்றாலும் செய்வேன் எத்தனை திருமணம் வேண்டும் என்றாலும் செய்வேன்'

என்ற ஒரு பாத்திரம் அப்பா வேடம் பொறாமை பட வைக்கும் ஒரு பாத்திரம்.

கார்த்தியின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர் மற்றும் பானுப்ரியா இருவரும்

போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு மகனுக்காக சண்டை போடும் விஜி நடிப்பில்

ஒரு படி மேலே நிற்கிறார். பானுப்ரியா என் மகள் வயிற்றுப் பேத்தியைத்

தான் திருமணம் செய்யவேண்டும் என வீம்பு பிடிக்கும் போது மேலும் ரசிக்க வைக்கிறார்.

 Kadaikutty Singam  review

அக்காவாக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மௌனிகா, யுவராணி,தீபா,ஜீவித

கிருஷ்ணன் மாமன்களாக வரும் இளவரசு, சரவணன், ஸ்ரீமன் , மாரிமுத்து மாமனாராக

வரும் பொன்வண்ணன் கணக்கு பிள்ளையாக வரும் மனோஜ்குமார் மற்றும் மனோபாலா,

சௌந்தராஜன் என எல்லோரும் தன் நடிப்பில் அனைவரையும் மிரட்டியுள்ளனர் .

மாமன் மகள்களாக வரும் ப்ரியா பவானி சங்கர். அர்த்தனா பினு இருவரும் தன்

கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் அதோடு கதாபாத்திரத்துக்கு

வலு சேர்த்துள்ளனர்

நாயகி சாயிஷா முதல் படத்தில் மாடன் பெண்ணாக வந்தவர், இப்படத்தில் முழுக்க முழுக்க

கிராமிய பெண்ணாக வலம் வந்துள்ளார். நடிப்பில் ஒரு முழு தேர்ச்சி. கதாநாயகி

என்றால் பொம்மை போல இல்லாமல் ஆடல் பாடல் என்று இல்லாமல் கதைக்கு தேவையான

நடிப்பை மிக அழகாக வெளிபடுத்தியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் படம் ஒட்டுமொத்த தமிழர்கள் பார்க்க வேண்டிய படம். நம் கலாச்சாரம், உறவு முறை, நம் மண், நம் விவசாயம் என்று பல விஷயங்களை கொடுத்துள்ள ஒரு அற்புதமான படம்.

English summary
Karthi's Kadaikutty Singam, directed by Pandiraj is a family drama, which speaks the importance of agriculture and farmers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more