For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Movie Review : காடன் திரைவிமர்சனம்- யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்

  |

  நடிகர்கள்

  ராணா,
  விஷ்ணு விஷால்
  ஜோயா
  ஷ்ரியா

  இயக்கம் : பிரபு சாலமன்

  இசை : ஷாந்தனு மொய்த்ரா

  ரேட்டிங் : 3/5

  Rating:
  3.0/5

  சென்னை: ராணா, விஷ்ணு விஷால், ஹுஸைன், ஷ்ரியா பில்கோயின்கர் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் காடன்.

  இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பிரபு சாலமன். Eros Internationals நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

  காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

  சாந்தனு மோயிட்றா இசையமைத்துள்ளார், அசோக் குமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார்.

  யானை கூட்டம்

  யானை கூட்டம்

  காடன் எனும் கதாபாத்திரத்தில் படத்தின் நாயகன் ராணா டகுபதி நடித்துள்ளார். தனது மூதாதையர் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டைப் பாதுகாக்கவும், அங்குள்ள யானைக் கூட்டங்களை மனித வேட்டையிலிருந்து காப்பாற்றவும் காட்டுவாசியாகவே வாழ்ந்து வருகிறார். அந்த காட்டின் ஒரு பகுதியை அமைச்சர் ஒருவர் தன் சுய லாபத்துக்காக அழிக்க முயல்கிறார். இதனால் அங்குள்ள யானைகளின் வாழ்வாதாரம் அழியும் நிலைமை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர காட்டுவாசிகளுடன் இணைந்து போராடும் காடன் கடைசியில் எப்படி வென்றார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.

  பிரமிக்க வைக்கிறார்

  பிரமிக்க வைக்கிறார்

  இயற்கை சார்ந்த படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமாக திகழ்ந்தவர் பிரபு சாலமன். மைனா, கும்கி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபு சாலமன் தொடரி படத்திற்கு பிறகு சுமார் 5 வருடம் கழித்து காடன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மைனா, கும்கி போலவே இந்த படமும் காடு சார்ந்த படம் என்பதால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அடர்ந்த காடு, மிக தத்ரூபமான யானை கூட்டம் என நம்மை ஒரு காட்டுக்குள் கொண்டு சென்று பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன்.

  காட்டுவாசியாக வாழ்ந்துள்ளார்

  காட்டுவாசியாக வாழ்ந்துள்ளார்

  பெங்களூரு நாட்கள், பாகுபலி படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ராணா இந்த படத்திலும் அதை தவறாமல் செய்துள்ளார். வழக்கம் போல இல்லாமல் ஒரு காட்டுவாசியகவே தன்னை வருத்தி கொண்டு இந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் மற்றொரு நாயகனாக கும்கி யானையுடன் வரும் விஷ்ணு விஷால் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். எதிர்பார்த்த அளவிற்கு ஸ்க்ரீன் ஸ்பேஸ் இல்லை. படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் பெரிய அளவு பங்கு இல்லை.எல்லோரும் கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்து உள்ளனர் . கும்கி படத்தில் விக்ரம் பிரபு தோன்றிய காட்சிகள் தான் கொஞ்சம் தூசி தட்டி விஷ்ணு விஷாலுக்கு கொடுக்க பட்டு இருக்கிறது .முடிந்தவரை அந்த கதாபாத்திரத்தை நன்றாகவே செய்து உள்ளார் .

  இரண்டாம் பாதியில் தொய்வு

  இரண்டாம் பாதியில் தொய்வு

  படத்தின் முதல் பாதியை சிறப்பாக கையாண்டுள்ள பிரபு சாலமன் இரண்டாம் பாதியில் சில பல இடங்களில் அதை தவறவிட்டுள்ளார். அங்கங்கே லாஜிக் தவறுகள் உள்ளது. அதை தவிர்த்து படத்தின் சிறப்பம்சம்மாக அமைந்துள்ளது ஒளிப்பதிவு. கண்கொள்ளாக்காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் அறிமுக ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார். CG வேலைகள் பெரிதும் இல்லாமல் நிஜ யானைகளை அதிகமாக காட்டி பாராட்டை பெறுகிறது ஒட்டுமொத்த குழு.

   ஒரு மொட்டை மரத்தில்

  ஒரு மொட்டை மரத்தில்

  எடிட்டிங் & பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது. கதையில் வரும் தொய்வு, சில இடங்களில்
  கன்டியூனிட்டி தவறுகளை தவிர்த்திருந்தால் பிரபு சாலமனுக்கு மிகச்சிறப்பான ரீ என்ட்ரியாக அமைந்திருக்கும்.குறிப்பாக ஒரு மொட்டை மரத்தில் ஒரு காவல் துறை அதிகாரியுடன் போடும் சண்டைக்காட்சி எதார்த்தங்களை தாண்டி அமைத்தது சலிப்பை தட்டுகிறது. மைனா ,கும்கி , போன்ற படங்களில் பாடல்கள் ரிப்பீட் மோடில் கேட்ட அளவுக்கு இந்த படத்தில் பாடல்கள் பெரிதும் மனதை ஈர்க்க வில்லை என்பது இன்னொரு பக்கம் சரிவு.

  யானைகளின் ஆர்ப்பரிப்பு

  யானைகளின் ஆர்ப்பரிப்பு

  பொதுவாகவே யானைகளை எங்கு பார்த்தாலும் குழந்தைகளுக்கு ஒரு தனி சந்தோசம் தான். மிக பெரிய மிருகம் , அழகான முகம் , பிரமாண்டமான தந்தங்கள், கம்பீரமான தோற்றம் என்று பலரையும் வசியம் செய்யும் . அப்படி பட்ட யானைகளின் வாழ்க்கையை குறிப்பாக காட்டு யானைகளின் உரிமையை கொண்டாடும் ஒரு படமாக காடன் அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு. நிஜ யானைகளின் ஆர்ப்பரிப்பு மற்றும் அதன் பிளிறல் சத்தம் மனதை மென்மையாக வருடும் ,சில இடங்களில் அச்சுறுத்தும் . இந்த படத்திற்காக பிரபு சாலமன் எடுத்து கொண்ட உழைப்பு மற்றும் யானைகளை பற்றிய ஆராய்ச்சி , காட்டுக்குள் செய்த மெனக்கெடுதல் என்று அத்தனையும் பாராட்டுக்குரியவை. இன்னும் சொல்ல படாத பல யானை கதைகள் நாடு முழுவதும் இருக்க தான் செய்கிறது . மனிதன் புரிந்த கொள்ள நல்ல படங்களை இப்படி அவ்வப்போது வர வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும். கண்டிப்பாக திரையரங்கு சென்று யானை சத்தம் கேட்டு காட்டுக்குள் புகுந்து வந்த ஒரு அனுபவம் நமக்கு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை . குடும்பத்துடன் சென்று சோசியல் டிஸ்டன்சிங் முறையை கடைபிடித்து பார்க்க வேண்டிய படம் . கண்டிப்பாக "காடன் " குழந்தைகளை கவரும் எலிஃபன்ட் கார்டன் .

  English summary
  kadan - movie review
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X