மரண மாஸ், செம, விக்ரம் வேற லெவல்: கடாரம் கொண்டான் ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: கடாரம் கொண்டான் படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாஸன், நாசரின் மகன் அபி ஹஸன் உள்ளிட்டோர் நடித்த கடாரம் கொண்டான் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை உலக நாயகன் கமல் ஹாஸன் தயாரித்துள்ளார்.
கடாரம் கொண்டான் தெலுங்கில் டப் செய்யப்பட்டு மிஸ்டர் கே.கே. என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடாரம் கொண்டான் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
கடாரம் கொண்டான்
கடாரம் கொண்டான் ஒரு தனி அனுபவம்... விக்ரம், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் தான் படத்தின் இரண்டு தூண்கள். ஆக்ஷன் காட்சிகள் அருமை. மிஸ் பண்ணிடாதீங்க என்கிறார் டாக்டர் ஜெய். #KadaramKondan
அபி ஹஸன்
கடாரம் கொண்டான் படம் மூலம் நடிகர் அவதாரம் எடுத்துள்ள நாசரின் மகன் அபி ஹஸன் நடிப்பில் அசத்திவிட்டதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?. கடாரம் கொண்டான் பற்றி மக்கள் போடும் ட்வீட்டுகளை நாசரின் மனைவி கமீலா ரீட்வீட் செய்து கொண்டிருக்கிறார்.
சீயான்
கடாரம் கொண்டான் ஒரு அருமையான ஆக்ஷன் படம். ஸ்டண்ட் காட்சிகள், விக்ரமின் லுக் மற்றும் இசை சிறப்பு. ஜிப்ரான் தான் படத்தை தாங்கிப் பிடிக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. விக்ரம் வழக்கமான மசாலா படங்களை தேர்வு செய்யாமல் இது போன்ற கதைகளில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாஸ்
கடாரம் கொண்டான் படம் மாஸ், செம, சான்ஸே இல்லை. தெய்வமே ராஜேஷ் செல்வா எங்க சீயானுக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்துவிட்டீர்கள் என்று விக்ரம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு விக்ரம், ஜிப்ரானை பாராட்டாதாவர்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











