twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "கைலா" ஒரு சைன்டிபிக் பேய் ஆனால் எல்லாம் பொய்

    |

    Rating:
    1.5/5

    நடிகர்கள்: பாஸ்கர் சீனுவாசன் , தானா நாயுடு, கெளசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் மற்றும் குழந்தை நட்சத்திரம் கைலா.

    இசை : ஸ்ரவன்

    இயக்கம்: பாஸ்கர் சீனுவாசன்.

    இவ்வருடம் வெளியாகும் கடைசி பேய் படம் என்று சொல்ல எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை . படம் ஆரம்பிக்கும் போது ஒரு வீட்டில் பேய் உள்ளது என்று பேசி கொள்கின்றனர். அதனை விசாரிக்க செல்கிறார் ஒரு பெண். வீட்டில் பேய் உள்ளதா அல்ல அது கட்டு கதையா என்றும்- ஏன் பேய் கொலை செய்கிறது என்ற ஆராய்ச்சி தான் படத்தின் ஒட்டுமொத்த சலிப்பு தட்டும் கதை.

     kaila is a science fiction horror movie

    படத்தில் கெளசல்யா மற்றும் அன்பாலயா பிரபாகரன் , குழந்தையாக வரும் கைலா இவர்களது நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது. படத்தில் வரும் அம்மா பாடல் ஓகே. படத்தில் பயம் வரவழைக்கும் வகையில் ஒரு சீன் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .மற்றும் பழி வாங்க துடிக்கும் பேய் அவர்களை ஏன் கொல்ல நினைக்கிறது என்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

     kaila is a science fiction horror movie

    படத்தில் மற்ற நடிகர்கள் நடிப்பு சொல்லும் படி இல்லை. இரண்டாவது பாதி தான் கதை சற்று வேகமாக நகர்கிறது.
    குழந்தையாக வரும் கைலாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள். படத்தில் ஒளிப்பதிவு ரொம்ப சுமார் ஆகவே உள்ளது.
    ஹவாலா பணத்தை இந்தியாவிற்குள் கொண்டு வர நினைக்கும் ஒரு தொழிலதிபர் அதற்கு ஒரு டிரஸ்ட் மூலம் மாற்ற முயலுகிறார் நடந்ததா இல்லையா என்பது மீதி கதை.

     kaila is a science fiction horror movie

    இது போன்ற படங்களை செலவு செய்து எடுப்பதற்கு நல்ல கதையுடன் உள்ள நிறைய குறும் படங்களை இயக்கி வெள்ளித்திரையில் வெளியிடலாம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பாளர் போன்ற எல்லாவற்றையும் கையாண்ட பாலாஜி சீனுவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஆனால் இனிமேல் எல்லா வேலையும் இவரே செய்தால் அவருக்கும் கஷ்டம் மற்றவருக்கும் கஷ்டம்.

     kaila is a science fiction horror movie

    வித்தியாசமான திரைக்கதை எதுவும் இல்லாத பேய் படம், கடைசியில் பேய்யும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆக மொத்தம் சினிமா ரசிகர்கள் தான் பாவம் .
    ஹாரர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு குட்டி பனிஷ்மென்ட் . முடிந்தால் பய படுங்கள் என்பது தான் டாஸ்க்.

    English summary
    its yet another ghost film with usual scenes and boring screenplay. no fresh ideas are there to make the visuals interesting. many of the scenes and ideas of the movie are very old and its very much dragging to sit and watch such movies .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X