Kalamkaval X Review: மம்மூட்டியின் ‘களம் காவல்’ எக்ஸ் விமர்சனம்.. சைக்கோ த்ரில்லர் சூப்பரா? சுமாரா?
சென்னை: பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படம் எதிர்பார்த்தபடி வெளியாகாத நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களும் இன்று ரன்வீர் சிங்கின் துரந்தர் மற்றும் மம்மூட்டியின் களம் காவல் படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
துரந்தர் இந்தியில் மட்டுமே வெளியானதை போலவே களம் காவல் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது. மம்மூட்டியின் படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானாலும்ர் ரசிகர்களை கவருமே என ரசிகர்கள் நினைத்தாலும், படக்குழு உறுதியாக மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் செய்துள்ளனர்.

ஓடிடியிலாவது டப் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் போலீஸ் அதிகாரியாகவும் மம்மூட்டி சைக்கோ கில்லராகவும் நடித்துள்ள களம் காவல் திரைப்படம் எப்படி இருக்கு என எக்ஸ் தள வாசிகள் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
21 நடிகைகள்: துல்கர் சல்மானின் குருப் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் திரைப்படம் இன்று வெளியானது. கடந்த மாதம் வெளியான காந்தா படத்தில் துல்கர் சல்மான் எப்படி நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாரோ அதே போல இந்த படத்தில் மம்மூட்டி நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். 21 நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெண்களை கடத்தி கொடூரமாக கொன்று ரசிக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனின் கதை தான் இந்த களம் காவல் என்கின்றனர்.
4 ரேட்டிங்: சைக்கோ கில்லராக மம்மூட்டியும், போலீஸ் அதிகாரியாக சைக்கோ கில்லரை தேடும் வேட்டையில் விநாயகனும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் ஒரு மலையாள மாஸ்டர்பீஸ் என்றும் 4 ஸ்டார்களே தரலாம் என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
சைனைடு மோகன் கதை: விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தனது விமர்சனத்தில், சைனைடு மோகன் கதையை எடுத்து தான் இயக்குநர் ஜித்தின் கே. ஜோஸ் இப்படியொரு சூப்பரான கிரைம் த்ரில்லர் படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் கண்டிப்பாக இந்த படம் மம்மூட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்றும் மம்மூட்டி மற்றும் விநாயகன் இருவருமே படத்தில் போட்டிப் போட்டு நடித்துள்ளனர் என விமர்சித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











