Indian 2 First Review: கமலுக்கு தேசிய விருது கன்பார்ம்.. இந்தியன் 2 முதல் விமர்சனம் இதோ!

சென்னை: இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஈர்க்கும் த்ரில்லிங்காக இருக்கு, உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் சென்சார் போர்டை சேர்ந்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று கூறியதாகவும் தணிக்கை குழுவில் இடம்பெற்றிருக்கும் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியன் திரைப்படம் அடுத்த பாகம் தான் 28 ஆண்டுகள் கழித்து ஜூலை 12ந் தேதி வெளியாக இருக்கிறது.

Indian 2  first review                           2

இந்தியன் 2: கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல பிரச்சனைகளை இப்படம் சந்தித்தது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து ஆண்டுகள் தடைப்பட்டு ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

விதவிதமான கெட்டப்: கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரே வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார். இன்றைய அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே இந்தியன் 2 உருவான பின்னணி என்று படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

கமலுக்கு தேசிய விருது கன்பார்ம்: இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இடம்பெற்றிருக்கும் உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியன் 2" படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஈர்க்கும் த்ரில்லிங்காக இருந்தது. கமல் இதுவரை இல்லாத நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி உள்ளார். பயங்கரமாக நடித்துள்ளார். பின்னணி இசையையும், இயக்கமும் சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டின் ஒரு மெகா பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக இப்படம் இருக்கும். 2025 ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும், "இந்தியன் 2" படத்தில் அவர் அசுரத்தனமான நடிப்பை கொடுத்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ இவர் என உமர் சந்த் இதில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X