Vikram First half Review...கமலின் விக்ரம் எப்படி இருக்கு ?
சென்னை : உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கமலின் விக்ரம் படத்தின் முதல் பாதி விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விமர்சனம் படம் பார்க்க வேண்டும் ஆர்வத்தை பல மடங்காக தூண்டி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்துள்ள விக்ரம் படம் நாளை ரிலீசாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் 5000 தியேட்டர்களில் விக்ரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
அதிகாலையில் கமல் தரிசனம்
அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட 900 தியேட்டர்களில் விக்ரம் ரிலீசாக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. சென்னை ரோகினி தியேட்டரில் விக்ரம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதற்காக கமல் வர உள்ளார். இதனால் விக்ரம் படத்துடன், அதிகாலையிலேயே கமலின் தரிசனத்தை காண ரசிகர்கள் உற்சாகம் பொங்க காத்திருக்கிறார்கள்.
விக்ரம் ப்ரீமியர் ஷோ
விக்ரம் ரிலீசாக உள்ளதை முன்னிட்டு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் விக்ரம் ப்ரீமியர் ஷோ இன்று திரையிடப்பட்டுள்ளது. ப்ரீமியர் ஷோ பார்ப்பதற்காக முக்கியமாக சில பிரபலங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சமயத்தில் விக்ரம் படத்தின் முதல் பாதி படம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது.
விக்ரம் படத்தின் முதல் விமர்சனம்
ஏற்கனவே நேற்று, இன்ஸ்டாகிராமில் விக்ரம் படத்தின் முதல் விமர்சனம், Overseas censor review என்ற பெயரில் பெயரில் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சமும் த்ரில்லிங் குறையாகமல் மிக விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கோலிவுட் படங்களிலேயே மிக சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் விக்ரம் தான். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் வரும் காட்சிகள் திரையில் அனல் பறக்கிறது. க்ளைமாக்கில் உச்சபட்ட த்ரில்லிங் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விக்ரம் first half எப்படி இருக்கு
இந்நிலையில் இன்று விக்ரம் first half விமர்சனம் வெளியாகி உள்ளது. இதில், விக்ரம் படத்தில் முதல் பாதி ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டுள்ளது. செம த்ரில்லிங்கான ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் Extraordinary ஆக உள்ளது. கமல் படமும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் படமும் இல்லாமல் வேற லெவலில் படம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











