Kanchana Review 3: இது பேயும் இல்ல பிசாசும் இல்ல... அதுக்கும் மேல... காஞ்சனா 3! விமர்சனம்

வழக்கமான பேய் கதையை கொஞ்சம் அப்டேட் செய்து சொல்கிறது காஞ்சனா 3.

Recommended Video

Kanchana 3 Public Review: ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் விமர்சனம்- வீடியோ

Rating:
3.5/5
Star Cast: ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா
Director: ராகவா லாரன்ஸ்

சென்னை: தன்னை அழித்தவர்களை பழிவாங்கும் வழக்கமான பேய் படம் தான் என்றாலும், அதை மிரட்டலாக செய்திருக்கிறது இந்த காஞ்சனா 3.

முனி முதல் பாகத்தில் ஆரம்பித்து, காஞ்சனா 2 வரை என்ன கதை பார்தோமோ, அதே கதை தான் இதிலும். பேய்க்கு பயப்படும் அதே லாரன்ஸ் தான் இதிலும். என்ன கொஞ்சம் அப்டேட்டட் வெர்ஷனாக, படுக்கையை சுற்றி செருப்பு வைத்துக் கொள்ளாமல், ஷூ வடிவிலேயே கட்டிலை வடிவமைத்து தூங்குகிறார்.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

பேய்க்கு பயப்படும் லாரன்ஸை இடுப்பில் தூக்கி வெச்சு கொஞ்சும் அம்மா கோவை சரளா, அண்ணி தேவதர்ஷிணியுடன், எக்ஸ்ட்ரா லக்கேஜாக ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி ஆகிய மூன்று பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள். லாரன்ஸை ரொமான்ஸ் செய்வது மட்டும் தான் இந்த மாமா பொண்ணுங்களின் (அதான் பாஸ் முறைபெண்கள்) வேலை.

முந்தைய பாகங்களை போல தான் இதிலும், வாண்டடாக போய் ஒரு பேய்யை வீட்டிற்கு அழைச்சிக்கிட்டு வந்திடுராரு லாரன்ஸ். இந்த படத்துல குடும்பமே அதுக்கு உதவியா இருக்காங்க. யாரு உடம்புல நுழையலாம்னு காத்திட்டிருக்கும் அந்த பேய், வீட்ல இருக்க எல்லாரையும் பயமுறுத்தி, படம் பார்க்கும் நம்மையும் பயமுறுத்தி பல பிரச்சினைகளை செய்யுது.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

வீட்ல பேய் இருக்காக இல்லையானு கண்டுப்பிடிக்க வழக்கமான பூஜைகளுடன், அதாங்க, பொம்மையில் ஆணி அடிக்கிறது, விளக்கேத்தி எலுமிச்சை பழத்தை பிழிஞ்சி விட்றதுன்னு சில பல வேலைகளை செஞ்சு பாக்குது கோவை சரளா அண்ட் டீம். வழக்கம் போல் இந்த சீன்ல பயந்துகிட்டே, விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

ஒரு வழியாக பேய் இருக்கிறதை கன்பார்ம் செஞ்சதும், அந்த பேய் வழக்கம் போல நம்ம ஹீரோ ராகவன் மேல புகுந்துடுது. அப்புறம் தன்னோட எதிரிகள பழிவாங்க போய்டுது. முந்தைய படங்கள்ல பேய் தான், தன்னோட பிளாஷ் பேக்கை சொல்லும். ஆனா இதுல ஒரு சாமியார் வந்து பிளாஷ் பேக் சொல்றாரு.

நல்ல உருக்கமான பிளாஷ் பேக் தான். ஆனா கொஞ்சம் மசாலா நெடி அதிகம். வழக்கம் போல், ஒரு ஊரில் ஒரு நல்லவன். அவன் பேரு காளி. அந்த காளியையும், அவனோட லவ்வரையும் ஒரு அரசியல்வாதி கொலை செய்யறான். அதற்காக பழிவாங்க தான் ராகவன் உடம்புல அந்த பேய் புகுந்திருக்கு. எப்பயும் போல தான், இந்த படத்துலயும் பேயாட பிளாஷ் பேக்க கேட்டு பரிதாபப்படுறாங்க. தன் பையன் உடம்ப யூஸ் பண்ணி, எதிரிகளை பழிவாங்க, காளி பேய்க்கு, அம்மா கோவை சரளா அனுமதி தர்றாங்க. அப்புறம் என்ன காஞ்சனாவோட பேய் ஆட்டம் தான் ஆரம்பமாகிடுது.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

மொத்த கதையை சொன்னாலும், இதை படிச்சுட்டு போய் படம் பார்த்தாலும் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறையாது. அதுதான் லாரன்ஸ் மாஸ்டரோட திறமை. ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல திரைக்கதை அமைச்சு, பார்வையாளர்களை குதூகலப்படுத்திட்டே இருக்காரு. இயல்பாகவே அவர் டான்ஸர் தான் என்றாலும், இந்த வயசுலயும் என்னாமா டான்ஸ் ஆடுறாரு. சூப்பர் மாஸ்டர்.

பேய்க்கு பயந்து நடுங்குறது, குழந்தைங்களோடு சேர்ந்து பேய் கதை பேசுறது, ஹீரோயின்களோடு ரொன்மான்ஸ் செய்யுறது, பேயா மாறி பின்னி பெடலெடுக்கிறதுன்னு மாஸ் காட்டுறாரு லாரன்ஸ் மாஸ்டர். ஆனா சிங்கள் பசங்களோட வயிற்றெரிச்சல் உங்கள சும்மா விடாது மாஸ்டர். ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின் எல்லாம் டூமச். பார்ட்டுக்கு பார்ட் ஹீரோயினோட எண்ணிக்கை கூடிட்டே போகுதே மாஸ்டர்.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

முனி முதல் பாகத்தில் தொடங்கி முந்தைய படங்களுக்கும், இதற்கும் எட்டு வித்தியாசங்கள் போட்டி வெச்சா சுவாரஸ்யமாக இருக்கும். திரைக்கதையில லைட்டா பட்டி, டிங்கரிங் பார்த்திருக்காரு. பிளாஷ் பேக் காட்சியில இருந்து ஒரு சின்ன பிட்ட எடுத்து டைட்டில் கார்டுக்கு முன்னாடி வெச்சு வித்தியாசம் காட்டியிருக்காரு. அப்புறம், ரஷ்யா, அமெரிக்கால இருந்து எல்லாம் பேயோட்டிங்கள கூட்டிட்டு வந்திருக்கிறார். அநேகமான அடுத்த பார்ட்ல செவ்வாய் கிரகத்துல இருந்து பேயோட்டிங்க வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்ல.

ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி மற்றும் வெள்ளைக்கார பொண்ணு லோமா சைமன் என நான்கு பேர் ஹீரோயினா நடிச்சிருக்காங்க. இதுல வேதிகாவும், லோனா சைமனும் தான் தான் ஓரளவுக்கு கவனம் ஈர்க்கிறார்கள். ஓவியாவும், நிக்கியும் சும்மா கிளாமருக்கு மட்டும் தான்.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

கோவை சரளா, தேவதர்ஷிணி, ஸ்ரீமன் டீமோட காமெடி இந்த படத்துலயும் செமையா ஒர்க்கவுட் ஆகியிருக்கு. இவங்களோட யுவாவும் சேர்ந்து, பிரேமுக்கு, பிரேம் சிரிக்க வைக்கிறாங்க. ஐந்து நிமிஷம் வந்தாலும், தன்னோட உளறு வாயால, ஏதோ கொஞ்சமா சிரிக்க வைக்கிறார் சூரி.

வில்லன்கள் கபிர் துகான் சிங், ஆத்மா பேட்ரிக் உள்பட அனைவருமே 'பேய்' அடி வாங்கறாங்க. இவங்ளோட சாய் தீனா அண்ட் டீமும் செம அடி வாங்குறாங்க. அதென்னமோ தெரியல, இவங்க அடி வாங்கும் போது தியேட்டர்ல குழந்தைகள் அப்படி சிரிக்கிறாங்க.

Kanchana 3 review: Its a roller coaster ride experience

மதன் கார்கியோட டூபோடூ மூலமா ஐந்து இசையமைப்பாளர்கள், ஐந்து பாட்டு கம்போஸ் செஞ்சிருக்காங்க. ஐந்துமே ஐந்து ரகம், நண்பனுக்கு கோயில கட்டு, ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல்கள் செம லோக்கல் குத்து குத்துது. பின்னணி இசையில் உண்மையாகவே மிரட்டியிருக்கிறார் தமன். ஒரு சில இடங்களில் நெஞ்சை பதற வெச்சிருக்கிறார்.

வெற்றி, சுஷில் சௌத்ரியோட ஒளிப்பதிவில் பேய் வரும் இடங்கள் எல்லாம் மரண பீதியை கிளப்புது. அதுவும் காஞ்சனாவோட அறிமுக காட்சி எக்சார்சிஸ்ட் போன்ற படங்களை நினைவுப்படுத்துது. ரூபனோட எடிட்டிங்கில் டக்கு டக்குனு காட்சிகள் நகருது. சீனை கட் பண்ற அவசரத்தில், ரூபன் தன்னோட விரலை வெட்டியிருந்தாலும் அச்சரியமில்ல.

பேயை கலாய்த்து நிறைய படங்கள் வந்துவிட்டதால், காஞ்சனா பேய் சில இடங்களில் சிரிப்பு மூட்டுது. காளி கேரக்டர் போகிற போக்கில் நிறைய பேர போட்டு தள்ளுது. அப்படி பார்த்தா, காளியை பழிவாங்க ஏன் ஒரு பேய் கூட வரவில்லை என்கிற கேள்வி எல்லாம் சில அதிமேதாவிகளுக்கு தோன்றுவது இயல்பு.

ஆனால் காஞ்சனா 3 ஒரு பக்கா கமர்சியல் படம். மரண பீதி, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி, உருக வைக்கும் செண்டிமெண்ட், அதிரடி ஆக்ஷன், ரசிக்க வைக்கும் ரொமான்ஸ், குத்து பாட்டு, சூப்பர் டான்ஸ் என ஒரு ஜனரஞ்சகமான படம். எனவே இதை அப்படியே பார்ப்பது நல்லது.

காஞ்சனா 3 ரசிகர்ளை குதூகலப்படுத்தும் என்பது மட்டும் உறுதி. வெயிட்டிங் பார் காஞ்சனா 4 முனி 5 மாஸ்டர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X