Kanchana 3: செம, வேற லெவல், தெறி, பிளாக் பஸ்டர்- ட்விட்டர் விமர்சனம்
Recommended Video
சென்னை: ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ராகவா லாரன்ஸ் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த காஞ்சனா 3 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஓவியா, வேதிகா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தை பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ்
#kanchana3 ராகவா லாரன்ஸ் அண்ணா பின்னி பெடல் எடுத்துட்டாரு.. இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக பிளாக்பஸ்டர் என்று விக்னேஷ் தெரிவித்துள்ளர்.
வேற லெவல்
முதல் பாதி முடிந்தது.... காஞ்சனா 3 வேற லெவல்...இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறோம்...என்கிறார் ராம்குமார்.
சான்சே இல்லை
காஞ்சனா 3 முதல் பாதி முடிந்தது..ப்ப்பா... லாரன்ஸ் என்ன ஒரு நடிப்பு, சான்சே இல்ல.. தெறிக்க விட்டுட்டாரு... சன் பிக்சர்ஸுக்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார் சாய் கார்த்திக்.
பக்கா
#kanchana3 முதல் பாதி வேற லெவல்
2ம் பாதி தெறிக்குது பக்கா குடும்ப பொழுதுபோக்கு படம் என்கிறார் சுல்தான்.


Click it and Unblock the Notifications











