Kanguva Public Review: வேறலெவல்.. பாகுபலி, கேஜிஎஃப் வசூலை முந்தும்.. கங்குவா பப்ளிக் விமர்சனம்!

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை அதிகாலையிலேயே கேரளா, ஆந்திரா ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி படத்தை பார்த்து உற்சாகமடைந்துள்ளனர். "உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா" என சூர்யா கையை அறுத்துக் கொண்டு பேசும் வசனம் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் என படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட நல்ல படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகின. கடைசியாக சூர்யா நடித்து தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

kanguva  review  suriya

இந்நிலையில், சூர்யாவை நம்பி 300 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு பிரம்மாண்ட படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவா இப்படியொரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பப்ளிக் ரிவ்யூ கொடுத்து வருகின்றனர்.

ஒரே கூஸ்பம்ப்ஸ் தான்: சூர்யா கங்குவா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். குழந்தையை வைத்து இடம்பெற்றுள்ள எமோஷனல் கனெக்ட் நல்லாவே செட்டாகியிருக்கிறது. 700 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை ஒளிப்பதிவாளர் வெற்றியும் மறைந்த கலை இயக்குநர் மிலனும் உருவாக்கியுள்ள விதம் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் தியேட்டரில் 3டி காட்சிகள் மிரட்டுகின்றன. படத்தை தாராளமாக பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பாகுபலி, கேஜிஎஃப் வசூலை முந்தும்: தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளக்கூடிய ஒரு படம் கூட இல்லை என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில், அப்படியொரு படைப்பாக சூர்யாவின் கங்குவா வந்துள்ளது என்றும் கட்டாயம் பாகுபலி, கேஜிஎஃப் வசூலை எல்லாம் கங்குவா முறியடிக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் நாள் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை என்றாலும் மக்களின் பாசிட்டிவ் விமர்சனத்திற்கு பிறகு கங்குவா நிச்சயம் சூடு பிடிக்கும் என்கின்றனர்.

சிறுத்தை சிவா இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல: கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சிறுத்தை சிவா அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களையும் கடைசியாக ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தையும் இயக்கி உள்ளார். அவர் இப்படியொரு பீரியட் படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யாவுக்கு ஸ்ட்ராங் கம்பேக்: இந்திய சினிமாவிலேயே இப்படியொரு படத்தை பார்த்திருக்க மாட்டார்கள். ஹாலிவுட் லெவலுக்கு படத்தை சிறுத்தை சிவா கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சில இடங்களில் படம் ஸ்லோவாக பிக்கப் ஆனாலும், கங்குவா கதாபாத்திரம் அறிமுகத்திற்கு பிறகு படம் ஃபயராக செல்கிறது. இடைவேளை காட்சி மற்றும் கிளைமேக்ஸ் சர்ப்ரைஸ் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்கிறது என இன்னொரு ரசிகரும் கங்குவா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X