Kanguva X Review: கங்குவா ட்விட்டர் விமர்சனம்.. கர்ஜித்தாரா சூர்யா?.. படம் எப்படி இருக்கு?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் கார்த்தி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை தவிர்த்து கேரளா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை 4 மணிக்கே கங்குவா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

கங்குவா படத்தை பார்த்த பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். கங்குவா படத்தின் முதல் பாதி சிறப்பாக செல்கிறது என்றும் சூர்யாவின் நடிப்பு மிரள வைப்பதாகவும் சிறுத்தை சிவா உருவாக்கியுள்ள இந்த புது உலகத்தை பார்க்கலாம் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

kanguva  review  suriya

தமிழ் சினிமாவில் ஒரு பாகுபலி படம் போல கங்குவா வரும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்த சூர்யா ரசிகர்களை எந்தளவுக்கு கங்குவா திரைப்படம் திருப்திப்படுத்தியது என்பது குறித்து ரசிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

வெளியானது கங்குவா: ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி கிளைமேக்ஸில் இரண்டாவது பாகத்துக்கு லீடு கொடுக்கும் கார்த்தி என ஒட்டுமொத்த பேக்கேஜாக வெளியாகி உள்ளது கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் யோலோ பாடலும் ஆதி நெருப்பே பாடலும் ரசிகர்களை தியேட்டர்களில் உற்சாகப்படுத்தி வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சூர்யா இந்த படத்தில் பீரியட் போர்ஷனில் வரும் கங்குவாவாகவும் நிகழ்காலத்தில் ஃபிரான்சிஸ் எனும் ஸ்டைலிஷ்ஷான லுக்கிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

கங்குவா ட்விட்டர் விமர்சனம்: கங்குவா படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டுமே செம சூப்பராக உள்ளது. சூர்யா தனது மிரட்டலான நடிப்பால் செம ஸ்கோர் செய்துள்ளார். சில இடங்களில் மட்டும் சில குறைகள் தெரிகிறது. ஆனால், படத்திற்காக உழைத்த VFX டீமை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என இந்த ரசிகர் பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

kanguva  review  suriya

கதை சொதப்பிடுச்சு: கங்குவாவின் முதல் பாதி டீசன்ட்டாகவே செல்கிறது. நடிப்பின் நாயகன் சூர்யா தனி மனிதாக ஒட்டுமொத்த படத்தையும் தனது தோள்களில் சுமந்துள்ளார். சிறுத்தை சிவாவின் கதை மற்றும் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள சில குறைகள் படத்தில் சில இடங்களை தொய்வாக மாற்றியுள்ளது. சிஜி மற்றும் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம் என இந்த நெட்டிசன் கலவையான விமர்சனத்தை கங்குவா படத்துக்கு கொடுத்துள்ளார்.

kanguva  review  suriya

மிரட்டிட்டாரு சூர்யா: சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இப்படியொரு விஷுவல் ட்ரீட்டான படத்தைக் கொடுத்து பிரம்மிக்க வைத்துள்ளார். பீரியட் போர்ஷனில் கங்குவா கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டிட்டாரு. கங்குவா படம் மைண்ட் ப்ளோயிங்காக உள்ளது. எபிக் விஷுவல்ஸ் என இந்த நெட்டிசன் படத்தைக் கொண்டாடியுள்ளார்.

kanguva  review  suriya

சூர்யாவின் வெறியாட்டம்: கங்குவா... சூரியாவின் வெறியாட்டம். தியேட்டர்ல பாருங்க..
பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதல், கிராபிக்ஸ்தான்னு நினைக்க வைக்காத விதம், எல்லாத்துக்கும் மேல கங்குவாவா வர்ற சூரியா.. வெறியாட்டம் ஆடிருக்காரு.. நடிப்பு மற்றும் அதற்கான உழைப்பு.. fantasy kinda hero எப்படி எல்லாத்தையும் சாதிக்கனுமோ, அதை சரியா சுமந்திருக்கார். வெல்டன் சூரியா.

ஆரம்பத்துல கொஞ்சம் வேதாளம் துவக்க சீன்கள், விவேகம் மாதிரி காட்சிகள் வந்ததும், கொஞ்சம் கெதக்குன்னு ஆனது உண்மைதான்.. ஆனா கங்குவா போர்சன்ஸ் ஆரம்பிச்சதும், அந்த சிவா மறைஞ்சிட்டாப்ள. நிறைய நடிகர் நடிகைகள் இருக்காங்க. ஆனா அந்த கெட்டப்னால அடையாளம் காண முடியல.. கருணாஸ், போகுமிடம் வெகுதூரமில்லை படம், அடுத்து இதுன்னு அருமையா பண்ணிருக்கார்.. போஸ் வெங்கட்.. பாபி தியோல் நல்லா மிரட்டுகிறார்.

kanguva  review  suriya

காடு, மலை, கடல், போர்க்காட்சிகள்னு எல்லா பிரம்மாண்டத்தையும் அழகா காட்டியிருக்கு ஒளிப்பதிவு. படத்திற்கு பெரும் பலம். DSP பில்டப் மற்றும் goosebump மொமண்டுக்கெல்லாம் நல்லா workout ஆகிருக்கு. 3D elements நிறையவே இருக்கும்னு உணர முடிஞ்சிது. நான் 2Dலதான் பாத்தேன். அடுத்த கவுண்ட் 3Dல பாக்கனும். Siva has very well exhibited what he is capable of. அவருக்கே உரித்தான பில்டப் டயலாக்ஸ்லாம் இருந்தாலும், இதுல சரியா செட்டாகியிருக்கு கதையமைப்புனால. இறுதியில் அந்த ட்விஸ்ட்டு, இரண்டாம் பாகத்துக்கான லீட் நல்லாருந்துச்சி..

தமிழ் சினிமாவின் அருமையான fantasy movie படைப்பா வந்திருக்குன்னு சொல்லலாம். Pride of Tamil Cinema in this category. We should encourage such attempts. ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்.." என இந்த ரசிகர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X