Kannagi Review: கண்ணகி விமர்சனம்.. 4 பெண்கள் கதை.. ஃபயரா இருக்கா.. இல்லை போரடிக்குதா?

Rating:
2.5/5

நடிகர்கள்: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா
இசை: ஷான் ரஹ்மான்
இயக்கம்: யஷ்வந்த் கிஷோர்

சென்னை: கதை நல்லா இருந்தா மட்டும் போதுமா? திரைக்கதை, மேக்கிங் என அனைத்தும் நல்லா இருந்தா தான் அந்த படம் ஒரு நல்ல படம் என அங்கீகரிக்கப்படும். இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகி உள்ள கண்ணகி திரைப்படம் டிசம்பர் 15ம் தேதியான இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் 4 பெண்களை சுற்றிய கதைகளை சிலந்தி வலை போல பின்னி இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகலைன்னாலும் பிரச்சனை, திருமணம் ஆனாலும் பிரச்சனை, லிவிங் டுகெதராக வாழ்ந்தாலும் சிக்கல் என பெண்ணாக பிறந்தாலே பிரச்சனை தான் பாஸ் என்பது போல 4 பெண் கதாபாத்திரத்தில் ஒருத்தர் கூட ஹேப்பியாக இல்லாமல் அழுகாச்சி டிராமாவை எடுத்து எல்லா ஆண்களும் எவ்ளோ மோசமானவங்க தெரியுமா என கண்ணகி என டைட்டில் வைத்து சுட்டெரிக்க முயற்சித்து இருக்கிறார் யஷ்வந்த். ஆனால், அவர் விரும்பிய அளவுக்கு படம் ஃபயரா இருக்கா? இல்லை அய்யோ சாமி முடியல ரகமா என்கிற முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Kannagi Review in Tamil: Keerthi Pandian, Ammu Abhirami, Shalin Zoya and Vidya Pradeep holds well

கண்ணகி கதை: நல்ல மாப்பிள்ளை பார்க்குறேன் என்கிற பெயரில் மகளின் திருமணத்துக்கு அம்மாவே வில்லங்கமாக இருப்பது போல அம்மு அபிராமியின் கதை ஆரம்பம் ஆகிறது. ஒருத்தர் ஒருத்தரா வந்து பார்ப்பதை விட 4,5 பேரா வந்து பார்த்துட்டு போகட்டும் என்கிற வலிமையான வசனம், பீரியட்ஸ் நேரத்தில் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்வது என அவரது போர்ஷன் ஒரு பக்கம் நகர்கிறது.

அடுத்து சுதந்திர பறவை ஃபெமினிஸ்ட் என்கிற அடையாளத்துடன் ஷாலின் ஜோயா லிவிங் டுகெதர் வாழ்க்கை, உள்ளாடையை எடுத்து மேலாடையாக போட்டுத் திரிவது தான் பெண்ணியம் என செய்யும் அலப்பறை இன்னொரு பக்கம்.

மூன்றாவதாக கணவர் விவாகரத்து கேட்ட நிலையில், விவகாரத்து தர முடியாது என கோர்ட்டுக்கு அழைந்து திரியும் வித்யா பிரதீப்பின் கண்ணீர் கதை.

கடைசியாக கீர்த்தி பாண்டியன் படத்தின் இயக்குநரான யஷ்வந்தே ஹீரோவாக நடிக்க அவரால் கர்ப்பமாகி விட்டு அந்த கருவை கலைக்க மருத்துவமனைக்கு அலைவதாக உள்ளார். இந்த 4 பேரின் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து எழுதப்பட்ட விதத்திலும், வசனங்களிலும் இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

பிளஸ்: 4 நடிகைகளும் அவர்களுக்கு துணையாக நடித்துள்ள நடிகர்களும், குணசித்ர கதாபாத்திரத்தில் வரும் மறைந்த நடிகர் மயில்சாமி, நடிகை மெளனிகா என அத்தனை நடிகர்களும் தான் இந்த படத்தை ஓரளவுக்கு நடிப்பால் தாங்கிப் பிடித்துள்ளனர். பின்னணி இசை பலம். பாடல்கள் ஆனால், கைகொடுக்கவில்லை. ஒருத்தருக்கு ஒருத்தி என்பதை விட ஒருத்தருக்கு ஒருத்தர் என்கிற வசனத்துக்கு கைதட்டல்கள் பறக்கிறது.

மைனஸ்: திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் கோட்டை விட்டு இருப்பதும், இரண்டாம் பாதி முழுவதும் ஸ்லோ மோஷனில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்காமல் அதை வைத்தே 3 மணி நேரம் ஓட்ட வேண்டும் என பீச் குதிரை போல ஓட்டி ரசிகர்களை டயர்ட் ஆக்கி விடுகிறார். விஷுவலாக படம் எந்தவொரு பெரிய இம்பேக்ட்டையும் கொடுக்கவில்லை. இயக்குநரின் முயற்சிக்காகவும் நடிகர்களின் உழைப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம். டைட்டில் அளவுக்கு படம் ஃபயராக இல்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X