Kara First Review: கர முதல் விமர்சனம்.. தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி ஒர்த்தா? சொன்னது யார் தெரியுமா?
சென்னை: இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர. படத்தில் தனுசுடன் கே.எஸ் ரவிக்குமார், மமீதா பைஜு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. தீவிரமாக புரோமோசன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தைப் பார்த்த தனுஷ் தனது விமர்சனத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்த படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இப்படி இருக்கையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் என்பதால் இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு க்ரைம் த்ரில்லர் ட்ராமாவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என கூறலாம்.

நம்பிக்கை: காரணம், படத்தின் கலர் டோன் ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்கள், ஷாட்கள், சில அழுத்தமான காட்சிகள் என அனைத்துமே ரசிகர்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சம காலத்தில் எந்த வகையான படமாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு தரமான இசையை கொடுத்துக் கொண்டிருக்க கூடிய ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி செய்யும் படத்துக்கு மிகப்பெரிய வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. இதற்கு காரணம், ட்ரைலரில் அவர் கொடுத்திருந்த பின்னணி இசை, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

முதல் விமர்சனம்: படம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதால் மொத்த படக்குழுவினரும் படத்தை ரசிகர்கள் மத்தியில் ப்ரோமோசன் செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் படத்தை பார்த்த தனுஷ், இயக்குனர் விக்னேஷ் ராஜாவிடம், "விக்னேஷ், இது நம்ம பிளான் பண்ணி பண்ணது இல்ல. ஆனா, இந்த படம் நடந்ததுல ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இருக்கு, அது என்னன்னா, நாம இப்ப இருக்கக்கூடிய ட்ரெண்ட நோக்கி அது பின்னாடி ஓடாம, இந்த கதை மேல நம்பிக்கை வச்சு இந்த படத்தை பண்ணி இருக்கோம். இந்த படம் மட்டும், எல்லா ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை அடைஞ்சுடுச்சு அப்படின்னா, ஒரு நேர்மையான கதை சொல்லும் போது அது கண்டிப்பா வெற்றி பெறும் அப்படிங்கிற ஒரு விஷயம் திரும்பவும் நிரூபணம் ஆகும். இது நமது திரையுலகத்திற்கு ஒரு புது தெம்பைக் கொடுக்கும். அதாவது ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு ஏமாற்று வேலைகள் செய்யனும்னு அவசியம் கிடையாது. அப்படி என்கிற நம்பிக்கையை மொத்த திரையுலகத்துக்குமே கொடுக்கும். பொருத்திருந்து பார்க்கலாம்" என்று கூறியுள்ளார். தனுஷ் இப்படியான விமர்சனத்தை கொடுத்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீது மொத்த திரையுலகமும் நம்பிக்கையோடும் ஆவலுடனும் ரிலீஸ் காக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications