Kara Public Review: கர பப்ளிக் விமர்சனம்.. அப்பா சென்டிமென்ட் கதை.. தனுஷ் நடிப்பு எப்படி?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியாகி உள்ள படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், " படம் நன்றாக உள்ளது. இதுவரை பார்க்காத தனுஷை காட்டி உள்ளார்கள். மிகவும் யதார்த்தமான நடிப்பை மீண்டும் கொடுத்துள்ளார். உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே நன்றாக நடித்துள்ளனர். வங்கியில் திருடுவதை வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர்" என்று தெரிவித்தார்.

மற்றொரு ரசிகரோ, " படத்தின் கதை புதிதாக எல்லாம் தெரியவில்லை. சாதாரண கதையில் பெரிய நடிகர்களை வைத்து எடுத்துள்ளார்கள். படம் நன்றாக உள்ளது. அனைவரும் பார்க்கலாம். குடும்பத்துடன் படத்தைப் பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
சலிப்பு?: ரசிகை ஒருவர் கூறுகையில்," படம் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் நன்றாக உள்ளது. சலிப்புத் தட்டுவது போலத் தெரியவில்லை. தனுஷ் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் நன்றாக இசையமைத்துள்ளார். குடும்பத்துடன் அனைத்து வயதினரும் பார்க்கலாம். ஆனால் ஜென் - சி கிட்ஸ்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அப்பா சென்டிமென்ட்: நான் எதிர்பார்த்து வந்தது படம் முழுக்க திரில்லராக இருக்கும் என்றுதான், ஆனால் படம் திருட்டு அதை ஒட்டிய திரில்லர் என நன்றாக இருந்தது. அப்பா சென்டிமென்ட் கதையாக படம் நல்லா இருக்கு. எல்லாரும் பார்க்கலாம். படம் மக்களுக்கு பிடித்த வகையில் உள்ளது, திரைக்கதை நம்பும் வகையில் இருக்கிறது. இது போன்ற படங்களும் வரட்டும் என்ன தவறு இருக்கிறது?" என்று கூறியுள்ளார்.
திரைக்கதை: மற்றொருவர் கூறுகையில், " முதல் 20 நிமிடங்கள் மட்டும் ஸ்லோவாக போவது போல இருந்தது. ஆனால் அதன் பின்னர் படம் வேகமாக நகர ஆரம்பித்துவிட்டது. இடைவேளை காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை படம் சூப்பர். அதேபோல் கிராமப்புறங்களில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் சிரமப்படுபவர்களை மையமாக கொண்டு படத்தை எடுத்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசை நன்றாக உள்ளது. சுராஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம். படத்தில் இருக்க கூடிய டீட்டைலிங் சிறப்பு. கட்டாயம் படத்தைப் பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.



Click it and Unblock the Notifications