Kara Blue Sattai Maran Review: ’கர’ கவுந்துடுச்சு.. போர் தொழில் இயக்குநர் ஏமாத்திட்டாரு.. ஒரே போடு!
சென்னை: கமர்ஷியல் படங்களை விடுத்து தனுஷ் கன்டென்ட் படங்களை எடுக்கிறேன் என சென்ற நிலையில், ரசிகர்களுக்கு தியேட்டரில் பெரிதாக ட்ரீட் கிடைக்கவில்லை என தனுஷ் ரசிகர்களே புலம்ப ஆரம்பித்த நிலையில், கர படத்தை வழக்கம் போல கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
கர படத்தின் கதை நல்லாத்தான் இருக்கு என்றும் ஆனால், அதை போர் தொழில் இயக்குநர் திரைக்கதையாக இயக்கிய விதம் தான் போர் அடிக்குது என ப்ளூ சட்டை மாறன் பொளந்துக் கட்டியுள்ளார்.

தனுஷ் தொடர்ந்து திறமையான வெற்றி இயக்குநர்களை தனது அடுத்தடுத்த படங்களுக்கு லாக் செய்து வைத்திருந்தாலும், அவர் நடிக்கும் படங்கள் ஏன் ரசிகர்களை கவர்வதில்லை என்கிற கேள்வியும், அவர் தேர்வு செய்யும் கதைகள் தான் காரணமா? அல்லது அவரே படங்களை டைரக்ட் செய்கிறாரா? என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
'கர' நல்லா இல்லை: தமிழ் சினிமாவில் நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ஒரு படம் நல்லா இருந்தால் நல்லா இருக்கு என்றும் நல்லா இல்லை என்றால் கழுவி ஊற்றுவதுமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் கர படத்தை பார்த்துவிட்டும் கழுவி ஊற்றியுள்ளார். படம் விறுவிறுப்பாகவோ ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் சுவாரஸ்யமாகவோ இல்லை என ஒரே போடாக போட்டுள்ளார்.
பேங்க் மேனேஜரை வில்லனாக்கி: விவசாயிகளுக்கு கடன் கொடுத்து நிலங்களை பிடுங்கிக் கொள்கின்றனர் வங்கி மேலாளர்கள் என படத்தை இயக்குநர் எடுத்து வைத்துள்ளார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருந்தால் தான் படம் ஓடும். ஆனால், போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் சுராஜ் வெஞ்சரமுடு ஒரு சிரிப்பு போலீஸ். பேங்க் மேனேஜராக வரும் ஜெயராமையும் கடைசியில் காமெடியாக்கி விடுகின்றனர் என வெளுத்துள்ளார்
8 ஏக்கர் நிலத்துக்கு ஒரு டிராக்டரா?: ஊரில் பெரிய நிலங்களை வைத்திருப்பவர்கள் தான் டிராக்டர் வாங்குவார்கள். ஆனால், 8 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் வீட்டுக்கு ஒரு டிராக்டர் என வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு வட்டி கட்ட முடியாமல் ஒட்டுமொத்த நிலத்தையே இழந்து நிற்பது எல்லாம் கதையில் நுணுக்கமான ரைட்டப் இல்லாததையே காட்டுகிறது என முடித்து விட்டார்.


Click it and Unblock the Notifications