twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்கில் - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம்!

    சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டமே கார்கில்.

    |

    Rating:
    2.0/5
    சென்னை: படம் முழுக்க ஒரே ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் வித்தியாசமான முயற்சியே கார்கில் திரைப்படம்.

    நடிப்பு - ஜிஷ்னு மேனன், இயக்கம் - ஷிவானி செந்தில், ஒளிப்பதிவு - கணேஷ் பரமஹம்சா, இசை - விக்னேஷ் பாய்

    Kargil movie review

    அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் தனது தந்தையை பிக்கப் செய்து பெங்களூருக்கு அழைத்து வர வேண்டும் என்பது நாயகன் ஜிஷ்னு மேனனுக்கு அவரது காதலி தரும் உத்தரவு. ஆனால் அவரோ வேறொரு வேலையாக, முன்கூட்டியே காரில் பெங்களூரு கிளம்பிவிடுகிறார். இதனால், வருங்கால மாமனாரை அழைத்து வரும் பொறுப்பை தனது மாமாவிடம் ஒப்படைக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் தனது முன்னாள் காதலியும், தற்போதைய கம்பெனி முதலாளியின் துணைவியுமான சிந்து, குறுக்கிடுகிறார்.

    ஜிஷ்னுவின் மாமனாரை அழைத்து வரும் பொறுப்பை ஏற்கும் சிந்து, நாயகனை பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார் ஜிஷ்னு. அவற்றில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், மாமனாரை இம்ப்ரஸ் செய்து காதலியை கரம் பிடித்தாரா என்பது படத்தின் மீதிக்கதை.
    படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே ஒரு கேரக்டர் தான். மற்ற எல்லா கேரக்டரும், ஒலி ஓவியமாக போனிலேயே வருகிறார்கள். சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் தான் முழுக்கதையும் பயணிக்கிறது. ஒரு நபரை மட்டுமே வைத்துக்கொண்டு படம் எடுத்த இயக்குனர் ஷிவானி செந்திலின் தைரியத்தை பாராட்டலாம்.

    தன்னுடைய பொறுப்பை அறிந்து, படத்தை தோளில் சுமந்திருக்கிறார் நாயகன் ஜிஷ்னு மேனன். விதவிதமான ரியாக்ஷன்கள் மூலம் படத்தை நகர்த்தி செல்கிறார். அதுமட்டுமல்ல இன்றைய ஐ.டி. இளைஞர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
    ஒளிப்பதிவாளர் கணேஷ் பரமஹம்சாவும், இசையமைப்பாளர் விக்னேஷ் பாயும் படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள்.

    தொடர்ந்து போன்கால்கள் மட்டுமே வந்து கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் படத்தில் ஹீரோவும் அதே எரிச்சல் ரியாக்ஷன் தந்து சற்று இளைப்பார செய்கிறார். இருந்தாலும் படம் பார்க்கும் போது ஏற்படும் அலுப்பை தவிர்க்க முடியவில்லை.

    சில இடங்களில் ஏற்படும் எரிச்சலை மட்டும் தாங்கிக் கொண்டு பொறுமையோடு படம் பார்க்க வேண்டும். ஒரு சாதாரண கதையை வித்தியாசமான கோணத்தில் பார்த்த திருப்தி கிடைக்கும். இயக்குனர் ஷிவானி செந்திலின் முயற்சிக்காக படத்தை பாராட்டலாம்.

    English summary
    The movie Kargil is a one man show, which tells a normal story in a different perspective.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X