twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Karnan Review: கர்ணன் மாரி செல்வராஜின் பிரம்மாஸ்திரமா? கர்ணன் - திரை விமர்சனம்

    |

    Rating:
    3.0/5
    Star Cast: தனுஷ், ராஜீஷா விஜயன், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம்
    Director: மாரி செல்வராஜ்

    சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் கர்ணன்.

    இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.

    இந்த வருடத்தில் தமிழில் அதிக எதிர்பார்ப்புடனும் மற்றும் முக்கிய படமாகவும் வெளிவந்துள்ள கர்ணன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பேருந்து போராட்டம்

    பேருந்து போராட்டம்

    இரண்டு ஊர்களுக்கு நடுவே இருக்கும் சாதி ஏற்ற தாழ்வு மற்றும் அந்த இரண்டு ஊர்களுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு என்று தான் ஆரம்பத்தில் கதை நகர்கிறது. பேருந்து நிறுத்தம் இல்லாத ஊராக மக்கள் அதிகம் கஷ்டப்பட அந்த ஊருக்காக கர்ணன் ( தனுஷ் ) போராடுகிறார் . பல கால போராட்டம்- பேருந்துக்காக, பேர் உந்து சக்தியாக தனுஷ் தனது ஊர் மக்களின் வாழ்க்கையை நிலைநிறுத்த பல பிரச்சனைகளை தன் தோளில் போட்டுகொண்டு போராடுவது தான் மீதி கதை .

    கதை தேர்வு

    கதை தேர்வு

    பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். முதல் படத்தை காட்டிலும் கர்ணன் படத்தில் பெரிய முன்னேற்றம் காண்பார் என்ற ரசிகர்களின் எண்ணம் வீண்போகவில்லை. அந்த அளவிற்கு ஒரு புரிதலோடு தனக்கென ஒரு தனி பாணியில் படத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்துள்ளார்.பெரும்பாலும் அமைதியான தமிழ்நாட்டில் தீடீர் என்று ரத்த வெள்ளம் ஓடுவது நாம் பார்த்து இருக்கிறோம் .அப்படி பட்ட சில பிரச்சனைகளை மறந்து விட கூடாது என்று நினைத்தாரோ என்னவோ இந்த கதையை தேர்வு செய்து மாரி இயக்கி உள்ளார் . கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிஷன் அமைத்து முடிவுக்கு கொண்டு வருவார்கள் . அதற்கு அப்பாற்பட்டு சொல்லப்படாத பல நிஜ சம்பவங்களை சாட்டையடியாக கர்ணன் படம் மூலம் திரைக்மொழியாக சொல்லி உள்ளார் .

    வியக்கத்தக்க ஆளுமை

    வியக்கத்தக்க ஆளுமை

    கர்ணனாக வரும் படத்தின் நாயகன் தனுஷ் தனது கதாபாத்திரத்தின் ஆளுமையின் மூலம் வியக்கவைக்கிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வலம் வரும் தனுஷ் தான் மகா நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். நீதிக்காக வாள் ஏந்தி நிக்கும் காட்சிகளில் மெய் சிலிர்க்க வைக்கிறார் தனுஷ்.தனது உடல் வாகை கதாபாத்திரங்களுக்கு மிக கட்சிதமாக பொருந்தும் வகையிலும் அவ்வளவு மெனக்கெடல் செய்வதிலும் தனுஷ் பலே கில்லாடி . தனது மெல்லிய உடல் இன்னமும் கொஞ்சம் வெயிட் கூடினால் இன்னும் பல கம்பீரமான கதாபாத்திரங்கள் செய்யலாம் என்பது பல ரசிகர்களின் கருத்தாக ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது .

    முக்கிய கதாபாத்திரங்கள்

    முக்கிய கதாபாத்திரங்கள்

    படத்தின் நாயகி ரஜிஷா விஜயன் சிறப்பாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். ஏமனாக வரும் லால் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதைக்கு மிக பெரிய பக்க பலமாக அமைத்துள்ளார் லால் . யோகி பாபுவிற்கு பரியேறும் பெருமாள் படத்தில் வருவது போல முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரி வர உணர்ந்து நடித்துள்ளார். எந்த இடத்திலும் காமெடியனாக பயன்படுத்தாமல் இருந்தது மிக சிறப்பு. கௌரி கிஷன் மிகவும் நேர்த்தியாக கொடுத்த வேலையை செய்து உள்ளார் . தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பல இடங்களில் எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார் . குறிப்பாக தனுஷை அடிக்கும் போது அம்மாவை ஓங்கி அறையும் போதும் கைதட்டல்கள் வாங்குகிறார் . தனுஷின் அம்மாவாக வரும் ஜானகி இந்த படத்திற்காகவே மொட்டை அடித்து நடித்தது பாராட்டுக்குரியது .

    இசை, ஒளிப்பதிவு

    இசை, ஒளிப்பதிவு

    தொழில்நுட்ப ரீதியாக கர்ணன் படக்குழு நிறைய மெனக்கெட்டுள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் பல நேரங்களில் ஆச்சரிய பட வைப்பது மட்டும் அல்லாமல் மெய்சிலிர்க்கவும் வைக்கிறது . அனைத்து ஃபிரேம்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணின் இசை பல இடங்களில் பக்காவாக மண் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த இசையாக நம்மை பிரமிப்பு ஊட்டுகிறார் . கிராமிய இசையை இசைஞானி இளையராஜாவிற்கு பிறகு அற்புதமாக இசைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன் என்று சொன்னால் மிகையாகாது.குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசை மிரட்டல் . ரஜிஷா மற்றும் தனுஷ் முத்த காட்சிகள் , காதல் சொல்லிய லோகேஷன்ஸ் அதை மிக சரியாக டாப் அங்கிள் மூலம் நம்மை நல்ல இசையுடன் காட்டிய விதம் அனைத்தும் சிம்பலி சூப்பர் .

    ரசிகர்களின் பேராதரவு

    ரசிகர்களின் பேராதரவு

    திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளான இன்று ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தனுஷின் ஜகமே தந்திரம் OTT யில் வெளிவரவுள்ள நிலையில், திரையரங்கில் இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்துள்ளது. துடுக்கு தனமாக இருக்கும் தனுஷ் ஒரு பக்கம் மிலிட்டிரி தேர்வு , இன்னொரு பக்கம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் போராட்டம் என்று எல்லா வகை ரசிகர்களையும் தன் ரசிகனை எப்படி திருப்தி படுத்த வேண்டும் என்பதை நன்கு புரிந்து இந்த திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கம்ப்ளீட் எண்டெர்டைன்மெண்ட் கொடுத்துள்ளார் .

    வெவ்வேறு கோணங்களில்

    வெவ்வேறு கோணங்களில்

    பஸ் ஸ்டாண்ட் இல்லாத ஒரு ஊர் எவ்வளவு கஷ்டப்பட்டது , ஏன் பேருந்து நிற்க மறுக்கிறது என்பதை மேலோட்டமாக ஒரு பக்கம் சொல்லி அதன் பின்னால் இருக்கும் அழுத்தமான மிக ஆழமான அரசியல் பின்னணி மற்றும் சாதி பிரச்சனை என்று யாரையும் புண்படுத்தாத வகையில் காட்சிகளை நகர்த்தி உள்ளார் மாரி . குறிப்பாக பஸ் உடைப்பு சம்பவங்கள் எந்த காரணத்திற்காக பல ஊர்களில் நடந்தது , நடந்து வருகிறது என்பதை நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும் என்ற நோக்கு இந்த படத்தின் மூலம் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது . பஸ் உடைக்கும் காட்சியுடன் வரும் இன்டெர்வல் பிளாக் படத்திற்கு சரியான பிரேக் . அந்த இன்டெர்வல் பிரேக் ஒரு வகை தாக்கத்தை ஏற்படுத்தி அடுத்து வரும் இரண்டாம் பாதீயின் மீதி மிகவும் ஆர்வத்தை தூண்டுகிறது.

    கழுதையும் குதிரையும்

    கழுதையும் குதிரையும்

    மிக அழகாக பல முறை காட்ட பட்ட கழுதையும் குதிரையும் படத்தின் ஒட்டு மொத்த கதையை தூக்கி பிடிக்கிறது. குறியீட்டுக்காக இந்த மிருகங்கங்களை பயன்படுத்தி இருந்தாலும் , பயன் படுத்திய விதம் அருமை . கால்கள் கட்ட பட்ட கழுதை சுதந்திரம் அடைவது ஒடுக்க பட்ட சமுதாயத்தின் வெற்றியாக பார்க்கும் பொழுது அதிகாரவர்க்கத்தின் தாக்கம் இந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது ,இருந்தது என்பதை தெள்ள தெளிவாக காட்டி உள்ளார் மாறி செல்வராஜ் . படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்று சிலர் இச்சு கொட்டி கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் கண்டிப்பாக தேவை தான் என்பதை புரிய வைக்கும் .

    போலீஸ் அடி

    போலீஸ் அடி

    சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவங்கள் நம் நெஞ்சங்களை எப்படி பதபதைக்க வைத்ததோ அது போல இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி வெறித்தனமாக நடந்து கொள்வதும் அதிகார திமிரை காட்டுவதுமாக அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து உள்ளார் . பின்பாதியில் மட்டுமே அதிக காட்சிகள் வரும் நட்டி நாடி நிரம்பெல்லாம் ஜாதி வெறி மற்றும் அதிகார துஷ்ப்ரயோகம் என்று பெண்களிடம் அதிகம் சாபம் வாங்குவார் . போலீசிடம் அடி வாங்கும் ஊர் பெரியவர்கள் , அந்த காட்சி கண்டிப்பாக நம்மை அதிக அளவில் டிஸ்டர்ப் செய்யும். ஒரு பக்கம் அழகம் பெருமாள் இன்னொரு பக்கம் லால் மற்றும் கர்ணனாக தனுஷ் இந்த இரண்டு ஊர் நடுவே போலீசின் அராஜகம் என்று அமர வைத்து அட்டகாசம் செய்கிறார்கள் திரையில் .

    ஊர் மக்கள்

    ஊர் மக்கள்

    கிராமிய கதைகளை மிகவும் நேசிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை மிகவும் ரசித்து பார்க்கலாம்.சில பல காயங்களை கீறிக் காட்டி உரத்தக் குரலில் அழுதபடி திரைக்கதை அமைத்து வெற்றியும் கண்டு உள்ளார் மாரி . அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட போது தென் மாவட்டங்களில் நடந்த கலவரங்களையும் சாதி வெறி ஆட்டத்தையும் அதிகார வர்க்கத்தின் போக்கையும் திரைமொழியில் சொல்லி சுவாரஸ்யங்கள் கூட்டி ரசிக்க வைக்கிறார் . ரஜினி மற்றும் ப்ரஷாந்த் டீ ஷர்டுகள் இந்த கதையில் வர வைத்தது கூட மிக உன்னிப்பான ரீவைண்ட் . ஊர் மக்கள் ,அவர்கள் வாழ்க்கை என்று அவர்களையே நடிக்க வைத்தது தான் இந்த படத்தின் மிக பெரிய வெற்றி . மாரி செல்வராஜ் என்றால் இப்படி தான் படம் எடுப்பார் என்று ஒரு பக்கம் பலமாக பார்த்தாலும் இப்படியே படம் எடுத்து கொண்டு இருந்தால் பலகீனமாகவும் அது மாறிவிடும் என்பதை உணர்ந்து மாரி கொஞ்சம் மாற வேண்டும் அடுத்த படைப்புகளில் . ஜனரஞ்சகமான ஒரு கிராமிய படம் என்பதில் கர்ணன் குறை வைக்காமல் அனைவரையும் ரசிக்க வைப்பான் என்பதில் ரசிகர்கள் பலரும் சந்தோசம் .

    English summary
    Karnan Movie Review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X