Sardar Twitter Review: இன்னொரு இரும்புத்திரையா? ஹீரோவா? கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள கார்த்தியின் அடுத்த படமான சர்தார் கார்த்திக்கு மிகப்பெரிய மைலேஜை கொடுத்துள்ளது.

வாட்டர் மாஃபியா குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இரும்புத்திரை போல ஹிட்டா? இல்லை ஹீரோ போல சொதப்பியதா? என்பது குறித்து ரசிகர்கள் என்ன சொல்லி இருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்..

சர்தார் இண்டர்வெல் பரிதாபங்கள்

சர்தார் இண்டர்வெல் பரிதாபங்கள்

வாட்டர் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் எந்தளவுக்கு குழந்தைகளையும் அடுத்த தலைமுறையும் பாதிக்கும் என்பதை எடுத்துச் சொல்லும் சர்தார் படத்தை பார்த்து விட்டு இடைவேளைக்கு வெளியே வந்தால் அதே வாட்டர் பாட்டிலை பார்க்க நேரிடுகிறது என ரசிகர்கள் போட்டோவுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஹாட்ரிக் அடித்த கார்த்தி

ஹாட்ரிக் அடித்த கார்த்தி


இந்த ஆண்டு வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என தொடர்ந்து 3 மாதங்களில் 3 படங்களை வெளியிட்டு ஹாட்ரிக் அடித்துள்ளார் கார்த்தி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிஜிஎம் தெறிக்குது

பிஜிஎம் தெறிக்குது

நடிப்பை தாண்டி இசை என வந்து விட்டால் ஜிவி பிரகாஷ் குமார் அசுரனாகவே மாறிவிடுகிறார். அசுரன், சூரரைப் போற்று படங்களை தொடர்ந்து சர்தார் படத்திலும் ஜிவி பிரகாஷின் பிஜிஎம் தெறிக்குது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கூஸ்பம்ப்ஸா இருக்கு

கூஸ்பம்ப்ஸா இருக்கு

யெஸ் சர்தார் வந்தாலே ஒவ்வொரு சீனும் கூஸ்பம்ப்ஸா தான் இருக்கு என தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட சர்தார் கார்த்தியின் ஸ்க்ரீஷாட்டை போட்டு இந்த ரசிகர் படத்தை பாராட்டி உள்ளார். மகன் கார்த்தி பிரகாஷின் கதாபாத்திரத்தை விட அப்பா கார்த்தி சர்தாரை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் ஃபைட்

மாஸ் ஃபைட்

இடைவேளையில் சிறையில் இருந்து சர்தார் எஸ்கேப் ஆகும் அந்த காட்சி வேறலெவலில் உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த தீபாவளிக்கு சர்தார் படத்தை தாராளமாக தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணலாம் என்கின்றனர். கருத்து, கமர்ஷியல், ஆக்‌ஷன் என அனைத்தையும் கலந்து கட்டி இயக்குநர் பி.எஸ். மித்ரன் கம்பேக் கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் சர்தார் படத்துக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X