Japan Review: கல்லா கட்டுமா கார்த்தியின் ஜப்பான்.. ட்விட்டர் விமர்சனம் இதோ?
சென்னை: ஒரு சின்ன திருட்டு மீன் பெரிய திமிங்கல திருட்டு மீனாக யார் காரணம் அதற்கு என்ன ஆனது? என்கிற கதையை ராஜு முருகன் மாஸ் என்டர்டெயின்மென்ட் கலந்து தனது சமூக பார்வையையும் உள்ளே வைத்து இயக்கி உள்ள படம் தான் ஜப்பான்.
கார்த்தி, அனு இம்மானுவேல், கே.எஸ். ரவிகுமார் மற்றும் சுனில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த நிலையில், சோலோவாக நடித்துள்ள ஜப்பான் படம் அவருக்கு வெற்றி கொடுத்ததா? இல்லையா? என்பதை ட்விட்டர் விமர்சனம் மூலம் காணலாம்.
சூப்பரான ஹெயிஸ்ட் படம்: இந்த ஆண்டு ஜனவரியில் அஜித் நடித்த துணிவு படம் பேங்க் ஹெயிஸ்ட் படமாக வந்த நிலையில், நகைக்கடையில் நடந்த கொள்ளையை மையமாக வைத்து ஒரு நல்ல ஹெயிஸ்ட் படமாக கார்த்தியின் ஜப்பான் உருவாகி உள்ளது என்றும் இயக்குநர் ராஜு முருகனின் இயக்கம் மற்றும் கார்த்தியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
காமெடி கியாரண்டி: சிறுத்தை படத்தில் திருடனாக நடித்து கார்த்தி காமெடியிலும் கலக்கியிருப்பார். அதே போல ஜப்பான் படத்தில் காமெடிக்கும் கார்த்தி கியாரண்டி என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஒளிப்பதிவு சூப்பர்: கார்த்தியின் ஜப்பான் படத்தில் டாப் நாட்ச் சினிமேட்டோகிராஃபியை கையாண்டிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன் என்றும் டெக்னிக்கலாக படம் நல்லா இருக்கு என்றும் இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மொக்கை படம்: பழைய கதை, மொக்கை கிரிஞ்ச் காமெடி, கார்த்தியின் மேனரிசம் கொஞ்சம் கூட சகிக்கல, இதெல்லாம் ஒரு படம்னு தயவு செஞ்சு இந்த தீபாவளிக்கு தியேட்டர் பக்கம் போயி உங்க சந்தோஷத்தை வீணடிக்க வேண்டாம் என இந்த நெட்டிசன் அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். கார்த்தியின் ஜப்பான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











