சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு?.. தடையை உடைத்து வந்து வெற்றி பெற்றதா?.. ரசிகர்கள் விமர்சனம் இதோ

சென்னை: சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. இதில் திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நேற்று ரிலீஸாகியிருக்க வேண்டிய இந்தப் படம் சில காரணங்களால் இன்று ரிலீஸானது. சென்னை ரோகிணி திரையரங்கில் ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா, கார்த்தி உள்ளிட்டோர் படத்தை பார்த்து ரசித்தார்கள். இந்நிலையில் படம் பார்த்தவர்களின் விமர்சனத்தை இதில் பார்க்கலாம். இதுவரை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் திரைப்படம் கருப்பு. இதில் பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ஏற்கனவே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன், எல்கேஜி திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதன் காரணமாக ஒரு இயக்குநராக இப்படத்தில் அவர் கண்டிப்பாக தரமான செய்கை செய்திருப்பார் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். அதேபோல் சூர்யாவுக்கும் ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன.

Karuppu Public Review  Fans Call Suriya   s Film a Massive Comeback
Photo Credit:

படத்துக்கு வந்த சிக்கல்: படமானது மே 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு திடீரென ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக நேற்று படம் ரிலீஸாகவில்லை. இது சூர்யா ரசிகர்களுக்கு உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எமோஷனலாகி கண்கள் கலங்கியபடி நேற்று வீடியோவும் வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரத்னகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள் எல்லாம் தங்களது முழு ஆதரவை அவருக்கு கொடுத்தார்கள்.

Also Read
நேற்று ஒரே அழுகை.. இன்று செம சந்தோஷம்.. கருப்பு ஆர்.ஜே. பாலாஜிக்கு உச்சக்கட்ட வரவேற்பு
நேற்று ஒரே அழுகை.. இன்று செம சந்தோஷம்.. கருப்பு ஆர்.ஜே. பாலாஜிக்கு உச்சக்கட்ட வரவேற்பு

இன்று ரிலீஸ்: நேற்று மாலை ஆறு மணிக்கே படம் ரிலீஸாகும் என்றுதான் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால் ஒருவழியாக 15ஆம் தேதியே (இன்று) ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்து; அத்தனை பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு இன்று வெளியாகியிருக்கிறது. படம் பார்க்க வந்த பாலாஜி தியேட்டரில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். படம் பார்த்தவர்களும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் அவர்களில் சிலர் வைத்த விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.

ரசிகர்களின் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர் கூறுகையில், "கண்டிப்பாக மக்கள் பார்க்க வேண்டிய படம். விஜய்க்கு நிறைய விஷயங்கள் செய்திருக்கிறார்கள். படத்தில் சூர்யா தெறிக்க விட்டுவிட்டார்" என்றார். பெண் ரசிகை ஒருவர் பேசுகையில், "கருப்பு படம் சூப்பராக இருக்கிறது. மாஸாக இருந்தது. இதுதான் தரமான கம்பேக். சூர்யா அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். படம் வேற லெவல்" என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர், "படம் சூப்பராக இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது. இது சூர்யா படமா இல்லை ஆர்.ஜே.பாலாஜி படமா என்று குழப்பமாக இருக்கிறது. இரண்டு பேரும் செமயாக போட்டி போட்டிருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

பயங்கர பிளாஸ்ட்: இன்னொரு ரசிகர் கூறுகையில், "கண்டிப்பாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும். சூர்யாவுக்கு இது தரமான கம்பேக். இது சூர்யாவின் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. படம் பயங்கர பிளாஸ்டாக இருக்கிறது. பொதுவான ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும். இரண்டாவது பாதியில் எந்த தொந்தரவும் இல்லாமல் ஸ்க்ரீன் பிளேவை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். படம் செம வொர்த். செம கொண்டாட்டமாக இருந்தது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X