கருப்பு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அடியா?.. பிரபலத்தின் விமர்சனம்.. இப்படி படத்தை அடித்துவிட்டாரே

சென்னை: சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் இன்று வெளியானது. நேற்றே ரிலீஸாகியிருந்திருக்க வேண்டிய படம் சில பிரச்னைகளால் இன்று வந்தது. திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்று படம் பார்த்த ரசிகர்கள் இதுவரை பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு கருப்பு படத்தின் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "கருப்பு படம் நல்லபடியாக இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. முதல் பாதி இடைவேளை காட்சி வரை சூப்பராக எழுதியிருக்கிறார் இயக்குநர். அதேசமயம் அந்நியன் மாதிரி இந்தப் படம் இருக்கிறதே என என் பக்கத்தில் இருந்தவர்கூட சொன்னார். இதை நாமே யோசிக்கும்போது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் சூர்யாவும் யோசித்திருப்பார்கள்தானே. அதனால்தான் இரண்டாவது பாதியை அப்படியே திருப்பி போட்டு ஒன்றை செய்து வைத்திருக்கிறார் இயக்குநர். அதை ஓபனாக சொல்ல வேண்டாம்.

Karuppu Review by Cheyyaru Balu     First Half Superb  Second Half Doesn   t Connect
Photo Credit:

மனித ரூபத்தில் கடவுள்: ஒரு மனிதன் கடவுளாக வந்தால் என்ன நடக்கும்? இது காலங்காலமாக இருக்கக்கூடிய விஷயம்தான். மனித ரூபத்தில் கடவுள் வருகிறார் என்பது பலரது நம்பிக்கை. ஆனால் இந்தப் படத்தில் கருப்பே நேரடியாக வருகிறார். கருப்பு வழக்கறிஞராக வருகிறார். கருப்பே கருப்பு கோட் போடுகிறார். கடைசி வரைக்கும் ஒன்றுமே புரியவில்லை. சாமானியனுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் ஒரு சாமி ஆடி தீர்த்துவிடும்தானே. ஆனால் இதில் அப்படியே ஆர்.ஜே.பாலாஜி மாற்றி போட்டிருக்கிறார்.

Also Read
விஜய்யுடன் ஒரே கலரில் ட்ரெஸ் முதல் திரிஷாவின் பெர்சனல் வாழ்க்கை வரை.. ஸ்டைலிஷ்ட் சொன்ன சீக்ரெட்
விஜய்யுடன் ஒரே கலரில் ட்ரெஸ் முதல் திரிஷாவின் பெர்சனல் வாழ்க்கை வரை.. ஸ்டைலிஷ்ட் சொன்ன சீக்ரெட்

இது என்ன படம்?: இதன் காரணமாக இது சீரியஸ் படமா, காமெடி படமா அல்லது சீரியஸ், காமெடி படமா? இதை எப்படி சூர்யா செலெக்ட் செய்தார். ஆர்.ஜே.பாலாஜி எப்படி இயக்கினார் என எனக்கு பல குழப்பங்கள். இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் டைட்டில் கார்டில் சி.எம் விஜய்க்கு நன்றி என போடுகிறார்கள். அது செமயாக இருந்தது. இந்தப் படத்தில் 50 நிமிடங்களுக்கு பிறகுதான் ஹீரோ வருகிறார். அது உண்மையில் நன்றாக இருந்தது.

ஏற்கனவே பழக்கப்பட்ட கதை: இந்தக் கதை ஏற்கனவே பழக்கப்பட்டத்துதான். எனவே கொஞ்சம் மாற்றி செய்யலாம் என செய்திருக்கிறார்கள். அவற்றில் சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள். நிறைய இடத்தில் கேள்வி கேட்கலாம் என்று தோன்றுகிறது. இந்தப் படத்துக்கு குடும்ப ரசிகர்கள் நிறைய வந்திருந்தார்கள். இது சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்தே தீர வேண்டும் என இருக்கும்போது; இந்தப் படத்தில் வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்க வேண்டாம். இந்தப் படத்தின் வில்லனே ஆர்ஜே பாலாஜி. படத்தில் பாலாஜியின் பெயர் BK. படத்தில் ஒரு சீனில் அவர் கையில் துப்பாக்கி வரும். அப்போது ஒருவர் அவரிடம், 'பிகே கையில் துப்பாக்கி கிடைத்தால் யாரை வேண்டுமானாலும் சுடுவியா?' என கேட்பார். இந்த இடத்தில் பிகேவுக்கு பதில் எஸ்கேவை போட்டுக்கொள்ளுங்கள். அவரை விடமாட்டீர்கள் போல.

வில்லனை மாற்றியிருக்கலாம்: சூர்யா படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது. ஆர்.ஜே.பாலாஜி வழக்கம்போல் கத்துகிறார். சாய் அபயங்கர்தான் இந்தப் படத்தை முக்கால்வாசி காப்பாற்றியிருக்கிறார். அவர் இன்னொரு அனிருத். படத்தில் ஆபாச வசனமோ, காட்சிகளோ, வன்முறை காட்சிகளோ இல்லை. குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.முதல் பாதி சூப்பராக இருந்தது. இரண்டாவது பாதியில் எதுவுமே கனெக்ட் ஆகவில்லைல். வில்லன் கேரக்டருக்கு வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்றுதான் தெரிகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X