Karuppu Review: கருப்பு விமர்சனம்.. ஆர்ஜே பாலாஜி மாஸ்டர் மைண்ட்.. தூக்கி சொருகிய சூர்யா!
சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, மன்சூர் அலி கான், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பேபி கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் பக்கா வில்லனாகவும் ஆர்ஜே பாலாஜி மிரட்டியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை படித்த வழக்கறிஞர்கள் நீதிமான்களாக மாறிய நிலையில் கூட ஊழலுக்கு துணை போவதால் தான் நாட்டில் நிலுவையில் இத்தனை கோடி வழக்குகள் உள்ளது என்றும் தப்பு செய்யும் ஊழல்வாதிகள் தப்பித்து சாமானிய மக்கள் தினமும் போலீஸ் ஸ்டேஷன் படியும் கோர்ட் படியும் ஏறி இறங்கி ஆயுள் முழுவதும் நீதிமன்றத்துக்கு செல்லும் தண்டனையை அனுபவிக்கின்றனர் என்கிற ஆதங்கத்தை கையில் எடுத்து கூடவே கருப்பனை துணைக்கு வைத்துக் கொண்டு ஆர்ஜே பாலாஜி தனது பேனாவால் சாட்டையை சுழற்றியுள்ளார்.

கங்குவா திரைப்படம் எல்லாம் சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இந்தளவுக்கு பிரம்மாண்ட ஆராவையும் கூஸ்பம்ப்ஸையும் கொடுத்திருந்தால் அந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் பாகுபலியாக மாறியிருக்கும். கருப்பு படம் மூக்குத்தி அம்மன் வரிசையில் ஆர்ஜே பாலாஜிக்கு இன்னொரு பட்டாசு படமாக மாறியுள்ளது.
கருப்பு கதை: கேரளத்தில் இருந்து தனது மகளின் ஆப்பரேஷனுக்காக 60 சவரன் நகையுடன் வரும் இந்திரன்ஸிடம் அந்த நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால், திருடர்கள் கூட மனம் திருந்தி 60 சவரன் நகையை கொடுக்க போலீஸ்காரர்கள் அதில் 15 சவரனை ஆட்டையைப் போட்டு 45 சவரன் தான் கிடைத்தது என்றும் நீதிமன்றத்தில் மீதியை வாங்கிக்கோங்க பேபி கண்ணன் வழக்கறிஞரை பாருங்கள் என அனுப்பி வைக்கின்றனர்.
அந்த 45 சவரன் நகையையும் ஆட்டையை போட நீதிபதி நட்டி நட்ராஜ் உடன் கூட்டுச் சேர்ந்து சட்ட ஓட்டைகளை வைத்து ஆர்ஜே பாலாஜி ஏமாற்ற ஒரு கட்டத்தில் எல்லை கருப்பனை மிளகாய் அரைத்து தலையில் தடவி அழைக்கிறார் இந்திரன்ஸ் அவருக்காக கருப்பசாமியே வந்து பேபி கண்ணனை பந்தாட நினைக்கும் போது பேபி கண்ணன் நீதி சாமியே நீதியை தவறலாமா? என்னை கொலை பண்ணாமல் நீதியை நிலைநாட்டு என செக் வைக்க கோட் சூட் போட்டுக் கொண்டு சரவணன் என்னும் வழக்கறிஞராக வரும் கருப்ப சாமி இந்த ஒரு பேபி கண்ணனை மட்டும் தண்டித்தாரா? அல்லது ஒட்டுமொத்த கரப்டட் சிஸ்டத்தை சரி செய்ய என்ன செய்தார் என்பது தான் கருப்பு படத்தின் கதை.

பிளஸ்: சாய் அபயங்கர் படத்துக்கு மிகப்பெரிய தூணாக மாறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அவரது பிஜிஎம் மற்றும் பாடல்கள் தியேட்டரில் ரசிகர்களை சாமியாட வைக்கிறார். சூர்யா கருப்பசாமியாக வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் பக்கா பிளாஸ்ட் ஆகிறது. வழக்கறிஞராக த்ரிஷா வரும் இடங்களில் அழகாக தெரிகிறார். அதே சமயம் அவருக்கான ஸ்பேஸ் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்திரன்ஸ் வழக்கை தொடர்ந்து ஷிவதாவின் வழக்கு என ஏகப்பட்ட வழக்குகளும் மக்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட கதைக்களம் என படம் தெறிக்கிறது. கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க பல சர்ப்ரைஸ் கேமியோக்களையும் படத்தில் வைத்து கடைசி கிளைமேக்ஸ் சீன் வரை ரசிகர்களை கைதட்டவும் விசில் அடித்து கத்தவும் வைத்துவிட்டார் ஆர்ஜே பாலாஜி. காந்தாரா போர்ஷன் மாதிரி வரும் கருப்ப சாமியின் பேய் கருப்பு காட்சியில் சூர்யாவின் நடிப்பு மிரட்டுது.விஜய்யின் லியோ சர்ப்ரைஸ் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. கண்டிப்பாக கருப்பு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் தான்.

மைனஸ்: கருப்பு படத்தில் லாஜிக்கே இல்லை என சிலர் விமர்சனம் செய்யலாம். மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு போலி சாமியாரை திருவிளையாடல் பாணியில் அம்மன் வந்து ஆர்ஜே பாலாஜியை வைத்து எப்படி திருவிளையாடல் ஆடினாரோ அதே பாணி கதையாகவே கருப்பு படத்தின் கதையை கருப்ப சாமியின் திருவிளையாடலாக நடத்தியுள்ளார். சிலருக்கு முதல் பாதியில் இருந்த அளவுக்கு 2வது பாதியில் ஆரம்ப காட்சிகள் தொய்வாக உள்ளது என்றும் நினைக்கத் தூண்டும். ஆனால், ஆர்ஜே பாலாஜி தனது எழுத்தாலும், மேக்கிங்காலும் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிவிட்டார்.


Click it and Unblock the Notifications