Karuppu Twitter Review: கருப்பு டிவிட்டர் விமர்சனம்.. RJ பாலாஜி அழுதது இருக்கட்டும்.. ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்
சென்னை: இயக்குநர் RJ பாலாஜி எழுதி இயக்கி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கருப்பு. படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பாளராக கமிட் ஆன முதல் படம் இதுதான். படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்த படம், சில பல பிரச்னைகளால் ரிலீஸ் ஆகவில்லை, அதனால் படம் மே 15ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ரசிகர் ஒருவர், " படம் பக்கா கமர்ஷியல் மற்றும் எமோஷன் காட்சிகளால் நிறைந்து உள்ளது. சூர்யா வரும் காட்சிகள், அதிலும் குறிப்பாக கருப்பசாமியாக அவர் வரும் காட்சிகள் எல்லாம் புல்லரிக்க வைக்கிறது. இயக்குநராகவும் கதாசிரியராகவும் அவர் மிக நேர்த்தியாக திரைக்கதையை பிசிறு தட்டாமல் உருவாக்கி உள்ளார். படத்தின் முதல் சண்டை காட்சி மற்றும் இடைவேளை காட்சிகளில் எல்லாம் சாய் அபயங்கரின் இசை நேர்த்தியாக உள்ளது. படத்தின் எல்லா எமோஷன் காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகிறது, இடைவேளை காட்சி எல்லாம் தரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

பக்கா கமர்ஷியல்: அதேபோல் மற்றொரு ரசிகரோ, " அநீதியிடமிருந்து மக்களைக் காக்க 90-களில் அம்மன் இறங்கி வந்த கதைகளை நாம் பார்த்திருப்போம். அதே பாணியில், இங்கு மக்களைக் காக்க கருப்பசாமி வருகிறார். பழக்கப்பட்ட பழைய பாணியிலான கதை என்றாலும், திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் நகர்வது சிறப்பு. சாய் அபயங்கரின் பின்னணி இசை பல இடங்களில் வேற லெவல்! படத்தின் பல காட்சிகளைத் தாங்கிப் பிடிப்பதே இசைதான். சூர்யா அண்ணா எப்போதும் போல தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இந்தரன்ஸ் மற்றும் அனகா ரவி தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக உள்ளனர். ஸ்வாசிகா மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆர்ஜே பாலாஜி நடிப்பு ஓகே என்றாலும், ஒரு பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர் எந்தளவுக்குப் பொருந்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. இடைவேளை சண்டைக்காட்சி தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

சூர்யா என்ட்ரி: மற்றொரு ரசிகரோ, முதல் பாதி கதை ஆரம்பித்து 40 நிமிடங்கள் ஆகிவிட்டது, சூர்யா எங்கடா என்று கேட்டுள்ளார். மற்றொருவரோ, " முதல் பாதி மாஸ் மொமண்ட்ஸ் உடன் தரமாக உள்ளது. இந்திரன்ஸ் மற்றும் அனகா தான் படத்தின் கதையை தொடங்குகிறார்கள். ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு தரமோ தரம். படம் தொடங்கி சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் தான் சூர்யா வருகிறார். ஆனால் அவர் அறிமுகம் ஆகும் காட்சி பக்கா தியேட்டரிக்கல் மொமண்ட். கருப்பசாமியாக அவர் நடித்துள்ள காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.
தரம்: த்ரிஷாவின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. சாயின் இசையும் சிறப்பு, இடைவேளை காட்சிகளில் எல்லாம் பிச்சு உதறி விட்டார்கள். அதுவும் வெறப்பா பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தரமோ தரம்" என்று பதிவிட்டுள்ளார்கள். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications