Kattalan Review: காட்டாளன் விமர்சனம்.. மார்கோ மாதிரி மிரட்டுச்சா?.. இல்லை உருட்டுச்சா?

Rating:
2.5/5
Star Cast: ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன்
Director: பால் ஜார்ஜ்

சென்னை: லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் ரத்தம் சொட்டச் சொட்ட படங்களை எடுத்து வரும் நிலையில், மலையாள சினிமாவுக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது என்கின்றனர். உன்னி முகுந்தன் நடித்து வெளியான மார்கோ திரைப்படம் ரொம்பவே ப்ரூட்டலாக உருவாகியிருந்தது. பல விமர்சனங்களையும் கடந்து அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அந்த வரிசையில் காட்டாளன் திரைப்படமும் ஏ சான்றிதழ் உடன் கொடூரமான சண்டைக் காட்சிகள் மற்றும் ப்ரூட்டல் சீன்களை வைத்து உருவாக்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் கேமியோவுடன் பல பில்டப்களுடன் மே 28ம் தேதி வெளியானது.

Kattalan Review in Tamil  Heavy Blood and Violence  but lacks in Interesting Screenplay

என்னதான் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும், சரியான கதை மற்றும் எமோஷனல் கனெக்ட் இல்லை என்றால் படம் படுத்துவிடும் என்கிற அதே விமர்சனம் தான் இந்த படத்துக்கும் கிடைத்துள்ளது.

காட்டாளன் கதை: பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், கபிர் துஹான் சிங் நடிப்பில் உருவாகியுள்ள காட்டாளன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பக்கா ட்ரீட் வைத்து வருகிறது. காட்டில் இருந்து யானை தந்தங்களை கடத்தி இலங்கையில் வியாபாரம் செய்யும் கேங்ஸ்டர் மாரி கதாபாத்திரத்தில் சுனில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். கடத்தல் தொழிலில் அவருக்கு கீழே அடிமைகளாக வேலை செய்யும் 40 பேரில் சிலர் மாரியை தீர்த்துக்கட்ட நினைக்கின்றனர். அதே போல அப்போசிட் கேங்கும் மாரியை தீர்த்துக்கட்ட முடிவெடுக்க, மாரியின் ரைட் ஹேண்டாக ஹீரோ ஆண்டனி வர்கீஸ் மாறுகிறார். ஒரு கட்டத்தில் அவரிடமே மாரியை தீர்த்துக்கட்ட பலரும் உதவி கேட்க, அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் காட்டாளன் படத்தின் கதை.

Kattalan Review in Tamil  Heavy Blood and Violence  but lacks in Interesting Screenplay

பிளஸ்: ரவி பஸ்ரூர் கேஜிஎஃப் படத்துக்குப் போட்டது போல இந்த படத்துக்கும் செம பில்டப் பிஜிஎம்களை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை போட்டு நடிகர்களுக்கு பக்கா எலிவேஷனை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரெனாடைவின் கேமரா ஒர்க் காட்டில் செம கிளாஸாகவும் மாஸாகவும் ஹாலிவுட் தரத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் இவரது உழைப்பு அதிகமாகவே தெரிகிறது. ஆண்டனி வர்கீஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்ட்டு காட்டுகிறார். துஷாரா விஜயன் போர்ஷன், சுனில் நடிப்பு என அனைத்துமே படத்திற்கு பாசிட்டிவ் தான்.

மைனஸ்: வெறுமனே ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க கொடூரமான கொலைகளை செய்வதில் மட்டுமே இயக்குநர் அதிக கவனத்தை செலுத்தி ஸ்க்ரீன்பிளேயில் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியிலும் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது. 2வது பாதியிலாவது சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அங்கேயும் படம் சொதப்பி விட்டது. படத்தின் புரொடக்‌ஷன் வேல்யூவுக்கு ஏற்ற அளவுக்கு ஸ்க்ரீன்பிளே இல்லாதது தான் காட்டாளன் வெற்றிக் கோட்டையை கட்டமுடியாமல் போனதற்கு காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X