Just In
- 41 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 54 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Kavalthurai Ungal Nanban Review: காவல்துறை, உங்கள் தோள் மீது கைபோடும் நண்பனாக இருக்கிறதா?
நடிகர்கள்: சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, ஆர்ஜே முன்னா, சூப்பர்குட் சுப்ரமணி,
இயக்குனர்: ஆர்டிஎம்
ரேட்டிங்: 3/5
அதிகார வர்க்கத்தின் ஈகோவிற்கு முன், சாதாரண மனிதனின் குரல் எப்படி நசுக்கப்படுகிறது என்பதுதான், காவல்துறை உங்கள் நண்பன்!
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, சுரேஷ் ரவியும் பிரவீனாவும். சுரேஷ் ரவி, வெளிநாட்டு ஆசையில் இருக்கும் உணவு டெலிவரி பாய். அவர் மனைவியிடம் திருட்டுக் கும்பல் தாலி செயினை மிரட்டிப் பறித்துவிட, தேடிச் செல்கிறார்.
வழியில் டூவீலரை செக்பண்ணும் போலீசிடம் சிக்க, வாக்குவாதம் ஏற்படுகிறது. வார்த்தை மோதல், ஈகோவாக மாற, பிறகு கொடூர அதிகாரக் கரங்கள், சாதாரண மனிதனை எப்படிச் சிதைக்கிறது என்பதை வலியோடு சொல்கிறது, படம்.

நேர்மையான சினிமா
எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான கதை என்றாலும் வலுவானக் கேள்விகளை எழுப்புகிறது, இந்த உண்மைச் சம்பவப் படம்! காவல்துறை, உங்கள் தோள் மீது கைபோடும் நண்பனாக இருக்கிறதா, தோள்களை துளைக்கிற துப்பாக்கிக் குண்டுகளாக இருக்கிறதா என்பதை ஒரு நவீன நாவலைப் போல கேட்டிருக்கிறார், இயக்குனர் ஆர்டிஎம். அவருடைய நேர்மையான சினிமாவுக்கு சொல்லலாம் வாழ்த்தை!

கொடூர போலீஸ்
தனது கோபப் பார்வையாலும் சிரித்துக்கொண்டே கேட்கும் கேள்விகளால் மடக்கும் வஞ்சகத்தாலும் கொடூர போலீசாக குப்பென வாழ்ந்திருக்கிறார், மைம் கோபி. மொத்த படமும் அவரைச் சுற்றியே நடக்கிறது என்பதால் அதை கச்சிதமாகத் தாங்கியிருக்கிறார். அந்தப் பார்வையும் அடுத்தடுத்த நொடியில் மாறுகிற முகமுமே அந்த கொடூர வில்லனத்தை காட்டி விடுகிறது.

இன்னொரு விசாரணை
எவரையும் கோபங்கொள்ளச் செய்யும் கேள்வியை, தான் கேட்டதை விட்டுவிட்டு, சாதாரண ஒருவன் தன்னைக் கேட்டதை மட்டுமே மனதில் வைத்து அவர் நடத்தும் கொடுமை, இன்னொரு, விசாரணை! வாழ்க்கையின் பெருங்கனவில் இருக்கும் சாதாரண இளைஞனை அப்படியே பிரதிபலிக்கிறார், சுரேஷ் ரவி.

தவிக்கிறத் தவிப்பு
நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? என்று அப்பாவியாகக் கேட்பதில் ஆரம்பித்து, எழுகிற தார்மீக கோபத்தை அடக்க முடியாமலும் அதிகார அக்கிரமத்தை தட்டிக்கேட்க முடியாமலும் தவிக்கிறத் தவிப்பை முடிந்தவரை முகத்தில் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் வாங்கும் அடிகளில் நமக்கும் வலி.

கடத்தி விடுகிறார்
அவர் மனைவியாக வரும் பிரவீனா, பக்கத்து வீட்டுப் பெண்ணை ஞாபகப்படுத்துக்கிறார். தன்னால்தான் கணவனுக்குப் பிரச்னை என்றும், டிவியில் அவனை அடிக்கும் காட்சி ஓடும்போது, 'பாப்பா போயிடுச்சு' என்று கதறும்போதும் நமக்குள் அந்த சோகத்தை எளிதாகக் கடத்தி விடுகிறார்.

மனதில் நிற்கவில்லை
நேர்மை மற்றும் அட்வைஸ் போலீஸ், சூப்பர்குட் சுப்ரமணி, தன் இயலாமையை வசனங்களால் காட்டிவிடுகிறார். ஆர்ஜே முன்னா, சரத், ஈ.ராமதாஸ் ஆகியோர் அவரவர் வேலையை செய்கிறார்கள். விஷ்ணுஶ்ரீயின் ஒளிப்பதிவும் ஆதித்யா சூர்யாவின் பின்னணி இசையும் கதையோடு அழைத்துச் செல்கின்றன. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

நிச்சயம் வரவேற்கலாம்
போலீஸ் ஸ்டேஷன் போனால் பிரச்னை என்று தெரிந்தும் கதைக்காக மீண்டும் மீண்டும் சுரேஷ் ரவி அங்கு செல்வது, போலீஸ் ஸ்டேஷன், வீடு ஆகியவற்றிலேயே கதை நகர்வது, இப்படித்தான் நடக்கும் என கணித்துவிடக் கூடிய சில காட்சிகள் போரடித்தாலும், இந்த நண்பனை நிச்சயம் வரவேற்கலாம்.