நள்ளிரவு 12 மணிக்கு ரசிகர்களை அலறவிட்ட பிக் பாஸ் கவின்.. லிப்ட் படம் எப்படி இருக்கு?

சென்னை: ஐடி துறையில் பல அடுக்கு மாடிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தினமும் பயன்படுத்தும் லிப்டில் பேய் வந்தால் எப்படி இருக்கும்? அது ஏன் வருகிறது என மிரட்டலாக உருவாகி உள்ள படம் தான் லிப்ட்.

பிக் பாஸ் கவின், பிகில் அம்ரிதா என இருவர் மட்டுமே தங்களின் ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிக்காட்டி ரசிகர்களை மிரட்டி உள்ளனர்.

பேய் படம் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான லிப்ட் படத்தை ரசிகர்கள் நைட்டே பார்த்து விட்டு தூங்காமல் பயந்து நடுங்கிய இரவு குறித்து ட்விட்டரில் அளித்துள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்.

பிக் பாஸ் கவின்

பிக் பாஸ் கவின்

விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சியில் வேட்டையனாக நடித்த போதே ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்த கவன், பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கான ஒரு தனி ஆர்மியையே உருவாக்கினார். ரம்யா நம்பீசன் உடன் இணைந்து நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் நடித்திருந்த கவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தான் லிப்ட்.

பிகில் தென்றல்

பிகில் தென்றல்

நடிகை அம்ரிதா அய்யரும் காளி, படைவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தாலும், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து அசத்திய பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருவரும் இணைந்து இந்த படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

லிப்ட் கதை

லிப்ட் கதை

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வரும் ஐடி ஊழியர் மற்றும் டீம் லீடர் குரு (கவின்) ஒரு புராஜெக்டை முடித்துக் கொடுக்க அந்த கம்பெனியில் இணைகிறார். அதே கம்பெனியில் எச்.ஆராக வேலை பார்த்து வரும் ஹரினிக்கும் (அம்ரிதா) இவருக்கும் ஏற்கனவே ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ள நிலையில், மோதலில் ஆரம்பித்த இவர்களது சந்திப்பு காதலை நோக்கி செல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்க்க, ஒரு நாள் வேலையை முடித்து கிளம்ப நினைக்கும் குருவுக்கு அர்ஜெண்ட் அசைன்மெண்ட் கொடுக்க அந்த இரவு கவின் சந்திக்கும் அமானுஷ்யங்கள் தான் கதை.

லிப்டில் பேய்

லிப்டில் பேய்

லிப்டில் மாட்டிக் கொள்ளும் கவின் லிப்டை விட்டு காரை எடுத்துக் கிளம்ப கார் சுற்றி சுற்றி அதே இடத்துக்கு வந்து நிற்க, அதன் பின்னர் மீண்டு லிப்டில் ஏறும் கவின் அருகே ஷூ அணிந்த ஒரு கால் மட்டும் நடந்து கிட்டே வர என பேய்த்தனமாக படம் திகிலடைய செய்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் கவின் அதே பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஹரினியை பார்க்க அவரை காப்பாற்ற போராடும் கதை தான் கிளைமேக்ஸ். அந்த அமானுஷ்யம் யார் என படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கவின் அசத்தியிருக்காரு

கவின் அசத்தியிருக்காரு

கவின் செம ஸ்மார்ட்டா இருக்காரு, ஹீரோயின் அம்ரிதா நல்லா நடிச்சிருக்காங்க, காயத்ரி ரெட்டியின் கேமியோ சூப்பர், கவின் ஒரு ஸ்டார் மெட்டீரியல். சமீபத்தில் வெளியான காமெடி பேய் படங்கள் போல இல்லாமல் இந்த படம் ரியல் ஹாரர் படமாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒன் மேன் ஷோ

ஒன் மேன் ஷோ

படத்தின் முதல் பாதி முழுக்க கவின் ஒன் மேன் ஆர்மியாக தனித்துவமாக அந்த ஐடி கம்பெனியின் லிப்டில் மாட்டிக் கொண்டு அத்தனை ரியாக்‌ஷன்களையும் முகத்தில் காட்டி நடித்து அசத்தி உள்ளார். அம்ரிதா தனது பங்கிற்கு அசத்தி இருக்காங்க என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

பேயிடம் இருந்து தப்பித்தார்களா

பேயிடம் இருந்து தப்பித்தார்களா

சமீபத்தில் வெளியான தமிழ் பேய் படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை. இயக்குநர் வினீத் வரபிரசாத் டீசன்ட்டான ஹாரர் படத்தை கொடுத்துள்ளார். கவின் மற்றும் அம்ரிதா லிப்ட்டில் உள்ள பேயிடம் மாட்டிக் கொண்டு தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் கதை. நல்லா இருக்கு என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

இதுதான் மைனஸ்

லிப்ட் படத்தில் நடித்துள்ள கவின் மற்றும் அம்ரிதா சிறப்பாக நடித்துள்ளனர். இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக படம் மிரட்டுது. ஆனால், படம் ரொம்பவே பொறுமையா போவது தான் மைனஸ் என சில நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். தியேட்டரில் வெளியாகி இருக்க வேண்டிய படம் லிப்ட் என்றும் டிவியில் பார்க்க அவ்வளவு எஃபெக்ட்டாக இல்லை என்றும் ஒடிடி ரிலீசாக வந்த லிப்ட் படத்தின் குறையையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X