Keeno Review: கீனோ விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? படத்தில் அப்படி என்னதான் இருக்கு?
சென்னை: இயக்குநர் கதிர் மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆர்.கே. திவாகர். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கீனோ. நாளை வெளியாகவுள்ள இந்த படம் குழந்தைகளை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்கியது மட்டும் இல்லாமல் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்.கே. திவாகர். இந்நிலையில் கீனோ படம் எப்படி உள்ளது, படம் சொல்ல வந்த விஷயத்தை சரியாகச் சொல்லி உள்ளதா என்பதை காணலாம்.
தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மனோ பாவத்தையும் அவர்களின் உலகத்தையும் உளவியலையும் புரிந்து கொள்ள பல படங்கள் வந்துள்ளது. அப்படி வெளியான படங்கள் அனைத்தும் குழந்தைகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளது. இப்படியான நிலையில் கீனோ படமும் குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்வதை கொஞ்சம் தில்லராக சொல்ல முயற்சி செய்துள்ளது.

படத்தை பொறுத்தவரையில், படத்தின் மையக் கதாபாத்திரம் 13 வயது சிறுவனை கீனோ என்ற மர்ம உருவம் பின் தொடர்கிறது. இது அந்த சிறுவன் தனிமையில் இருக்கும் போது, இரவில் இருக்கும் போது சிறுவன் கண் முன் தோன்றி, என்னிடம் வா, என்னைக் கட்டிப்பிடி என்று கூறுகிறது. இதனால் சிறுவன் பயப்படுகிறான். மகனை ஏதோ ஒரு உருவம் பின் தொடர்கிறது என்பதை புரிந்து கொண்ட சிறுவனின் அப்பா, அவனை மாந்திரீகம் செய்பவர்களிடம் அழைத்துச் சென்று, தனது மகனை பின் தொடர்வது பேய். அந்த பேயை எப்படியாவது விரட்டி விடுங்கள் என்று கூறுகிறார். உனது மகனை துரத்துவது பேய் இல்லை, அது உனது மகனை தொந்தரவு செய்யவும் இல்லை என்பதை கூறுகிறார்கள். ஆனால் ஏன் அந்த கீனோ அந்த சிறுவனை பின் தொடர்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான் மீதிக் கதை.
பாராட்டு: தமிழ் சினிமாவில் இது வித்தியாசமான சைக்கலாஜிகள் திரில்லர் படம் என்றாலும், படத்தில் சொல்ல வந்த விஷயத்தை ரசிகர்களுக்கு கொஞ்சம் குழப்பியும் கொஞ்சம் நேரடியாகவும் சொல்லியிருப்பது மைனஸாக அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான கதை எடுத்து அதை படமாக்கியதற்காகவே பாராட்டு. ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் சிறந்த படமாக வந்திருக்கும்.
பாடம்: படத்திற்கு கிருத்திகா காந்தியின் எடிட்டிங், ஒலிவர் டெனியின் ஒளிப்பதிவு என அனைத்துமே கை கொடுத்துள்ளது.ஆர்.கே. திவாகரின் இயக்கமும் இசையுமே கை கொடுத்துள்ளது. மொத்தத்தில் கீனோ குழந்தையை மையமாக வைத்து பெற்றோருக்கு எடுக்கப்பட்ட பாடம்.


Click it and Unblock the Notifications











