Youth Twitter Review: கென் கருணாஸின் யூத் எப்படி இருக்கு? இளசுகள் மத்தியில் எடுபட்டதா? டிவிட்டர் விமர்சனம்
சென்னை: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள படம் யூத். இந்த படத்தை அவரே எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டினர். இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த அவர்களின் விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பிரபல சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " இயக்குநர் மற்றும் நடிகர் என ஒரு ஆல்ரவுண்டராக கென் கருணாஸ் கலக்கி உள்ளார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சுராஜ், அனிஷ்மா மற்றும் தேவதர்ஷினி என மூவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. மிகவும் சிம்பிளான ஸ்டோரிதான். படத்தில் எந்தவிதமான முரண்பாடுகளோ, ஒவ்வாமையோ இல்லை. முதல் பாதி முழுவதுமே அடுத்தடுத்த நகைச்சுவைக் காட்சிகளால் நிறைந்துள்ளது. இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோ என்றாலும் படம் ரசிக்கத்தக்கதாக உள்ளது. படம் நன்றாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

துள்ளலான படம்: அதேபோல் பிரபல விமர்சகர் லக்ஷ்மி காந்த் தனது எக்ஸ் பக்கத்தில், " மிகவும் துள்ளல் நிறைந்த ஒரு அழகான கமர்ஷியல் படம். இரண்டாம் பாதியில் ஒரு நல்ல மெசேஜ் உடன் படத்தை முடித்துள்ளார்கள். கென் கருணாஸ் சிறப்பாக இயக்கி நடித்துள்ளார். கோலிவுட்டுக்கு நம்பிக்கையான இயக்குநர் மற்றும் நாயகன் வந்துள்ளார்.

ஜாலியான: சுராஜ் ஸ்கிரீனில் வரும் போது எல்லாம் ஸ்கோர் செய்கிறார். அதேபோல் தேவதர்ஷ்னியும் சிறப்பாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் இசை சிறப்பு. கென் கருணாஸ் - அனிஷ்மா காட்சிகள் நன்றாக எமோஷனலாக இருந்தது. அதேபோல் படத்தின் கடைசி 30 நிமிடங்களும் மிகவும் டச்சிங்காக இருந்தது. மொத்தத்தில் இது செம்ம ஜாலியான அதேநேரத்தில் நல்ல கருத்தைச் சொல்லக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் " என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நாயகன்: அதேபோல் இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவிந்த் வரிசையில் ஒரு இயக்குநராகவும் நடிகராவும் கென் கருணாஸ் வென்றுவிட்டார். யூத் படம் நன்றாக உள்ளது. இளைஞர்கள் இந்த படத்தை கட்டாயம் கொண்டாடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். இவரது பதிவும் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











