Kenatha Kanom Public Review: கேஸ் தட்டுப்பாடுக்கே.. தண்ணி தட்டுப்பாடு வந்தா.. கெணத்த காணோம் எப்படி இருக்கு?

சென்னை: ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா உயிரிழந்த நிலையில், அவரது இயக்கத்தில் கடைசியாக உருவான கெணத்த காணோம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கெணத்த காணோம் படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்துள்ள பப்ளிக் விமர்சனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

Kenatha Kanom Public Review in Tamil  Yogi Babu steals the show completely
Photo Credit:

தாய் கிழவி படத்தை போல: கடந்த மாதம் இறுதியில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய் கிழவி திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அந்த படத்தைப் போலவே கிராமங்களில் நடக்கும் சுவாரஸ்ய விஷயங்களுடன் தண்ணீர் என்பது எந்தளவுக்கு முக்கியமானது என்கிற அருமையான மெசேஜ் உடன் வந்து இருக்கிறது இந்த கெணத்த காணோம் திரைப்படம் என படத்தை பார்த்த பிறகு பொதுமக்கள் விமர்சனம் அளித்துள்ளனர்.

Kenatha Kanom Public Review in Tamil  Yogi Babu steals the show completely
Photo Credit:

டைனோசர் மேட்டர்: சுரேஷ் சங்கையா உயிரிழந்த நிலையில், அவர் இயக்கத்தில் கருத்து படமாக உருவாகியுள்ள கெணத்த காணோம் படத்தில் காமெடி காட்சிகளும், ராம்நாடு பகுதிகளில் நிலவும் வறட்சியையும் தோலுரித்துக் காட்டியுள்ள விதம் சிறப்பு. செவ்வாய் கிரகத்தில் தண்ணி இருக்கான்னு ஆராய்ச்சி நடக்குது. இன்னும் கொஞ்ச நாளில் நம்ம ஊரிலேயே தண்ணியை தேடும் நிலை வந்தாலும் வரும் என பயமாக இருக்கிறது என்றும் அந்த டைனோசர் மேட்டர் செம ஹைலைட் என ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

கேஸ் தட்டுப்பாடு போல தண்ணி தட்டுப்பாடு: கேஸ் தட்டுப்பாடுக்கே தமிழ்நாடு தாங்க முடியாமல் திண்டாட ஆரம்பித்து விட்டது. இன்னும் தண்ணி தட்டுப்பாடு எல்லாம் வந்தால் நாம வாழவே முடியாத நிலை உருவாகி விடும். தண்ணீரை வீணாக செலவு செய்யாமல் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்கிற புத்தி கண்டிப்பா இந்த படத்தை பார்த்தால் வரும் என்றும் எந்தவொரு இடத்திலும் படம் லேக் ஆகவில்லை. ஊர் மக்கள் நல்லாவே நடிச்சிருக்காங்க, யோகி பாபுவுக்கு இது இன்னொரு மண்டேலா என இன்னொரு ரசிகை படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X