Kerala Crime Files Review: மலையாளத்தில் ரியல் க்ரைம் த்ரில்லர்... கேரளா க்ரைம் ஃபைல்ஸ் விமர்சனம்

Rating:
3.5/5

நடிகர்கள்: அஜு வர்கீஸ், லால்
இயக்குநர் : அஹம்மது கபீர்
வெளியீடு : டிஸ்னி பிளஸ்
எபிசோட்கள் : 6
ஜானர் : க்ரைம் த்ரில்லர்

சென்னை: ஓடிடி தளங்களின் அசுர வளர்ச்சிக்குப் பின்னர் வெப் சீரிஸ்களின் வருகையும் அதிகரித்துவிட்டன.
ஆனாலும் மலையாளத்தில் கொஞ்சம் தாமதமாகவே முதல் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஹமது கபீர் இயக்கத்தில் அஜு வர்கீஸ், லால் நடித்துள்ள 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸ்ஸின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் விமர்சனம்:மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ளது 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்.' செக்ஸ் ஒர்க்கர் ஒருவர் லாட்ஜ் ஒன்றில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார், கொலையாளி யார், அதன் பின்னணி என்ன என்ற மிகச் சாதாரணமான பின்னணியில், மொத்தமே 6 எபிசோட்களில் உருவாகியுள்ளது இந்த வெப் சீரிஸ்.

2011ம் ஆண்டு எர்ணாகுளம் பகுதியில் உள்ள லாட்ஜில் செக்ஸ் ஒர்க்கர் ஸ்வப்னா என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்படுகிறார். எஸ்ஐ மனோஜ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குரியன் ஆகியோர் தலைமையில் போலீஸ் டீம் இந்த கொலை குறித்து விசாரணை நடத்துகிறது. அதில், கொலையாளி கறுப்பு சட்டை, வெள்ளை வேஷ்டி அணிந்திருந்ததும், அவனுக்கு ஒற்றைக் கண் என்பதும் தெரியவருகிறது. மேலும், அவன் பெயர் ஷிஜு என்பதும் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகிறது.

 Kerala Crime Files Review: First Malayalam Web Series Kerala Crime Files Tamil Review

ஆனால், லாட்ஜில் அவன் கொடுத்துள்ள 'பாறையில் வீடு, நீண்டகரை' என்ற அட்ரஸ் போலியானதாக இருக்கிறது. இதனை வைத்துக்கொண்டு 6 நாட்களில் கொலையாளியை எப்படி கைது செய்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் செம்ம த்ரில்லாகவும் விவரிக்கிறது கேரளா க்ரைம் ஃபைல்ஸ். எஸ்.ஐ மனோஜ்ஜாக அஜு வர்கீஸ், இன்ஸ்பெக்டராக லால், இவர்களுடன் ஒரு சீனியர் கான்ஸ்டபிள், இளம் காவலர்கள் இருவர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொலையானது ஒரு செக்ஸ் ஒர்க்கர், அவருக்கென பெரிய பின்னணி கிடையாது, உயர் அதிகாரிகளின் அழுத்தம் எதுவுமே இல்லாத நிலையில், ஒரு கொலைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடக்கிறது என்பதே இந்த சீரிஸின் அடிநாதம். அதேபோல் கொலையாளி பற்றிய எந்தவொரு முக்கியமான அடையாளமும் இல்லாமல் அவனை கண்டுபிடிப்பதில் இருக்கும் சவால்கள் என்னவென்று விவரிக்கிறது.

ஒவ்வொரு முறையும் கொலையாளியை நெருங்கிவிட்டதாக நினைத்து போலீஸார் நிம்மதி பெருமூச்சு விடுவதும், பின்னர் அதில் ஏமாற்றத்தோடு மீண்டும் விசாரணையை தொடங்கும் இடமும் எமோஷனலாக உள்ளன. அதற்காகவே இந்த விசாரணையில் பயணிக்கும் லால், அஜு வர்கீஸ் உட்பட 5 போலீஸாரின் குடும்ப பின்னணியையும் ஆங்காங்கே காட்சிப்படுத்தியுள்ளனர். முக்கியமாக கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு விசாரணைக்கு ஓடுவதும், குழந்தை பிறந்த போதும் கூட இருக்க முடியாமல் தவிப்பதும் யதார்த்தமான காட்சிகள்.

வெப் சீரிஸ் முழுவதுமே திரைக்கதையின் வேகம் சீராகவே பயணிக்கிறது. தேவையில்லாத எந்த டிவிஸ்ட்டும் கொடுக்காமல் கதையை நேர்த்தியாகவும் உண்மையான விசாரணை எப்படி இருக்கும் என்பதையும் ரசிகர்களுக்கு காட்சி வழி அனுபவமாக கடத்துகிறது கேரளா க்ரைம் ஃபைல்ஸ். இதுவரை காமெடி கேரக்டர்களில் மட்டுமே அதிகம் நடித்து வந்த அஜு வர்கீஸ், இதில் சீரிஸ்ஸான முகத்துடன் வலம் வருகிறார். அதுமட்டுமே கொஞ்சம் போரிங்காக இருந்தாலும், அதனையும் தனது நடிப்பால் சரிகட்ட முயற்சித்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக வரும் லால் தனது முதிர்ச்சியான நடிப்பை சரியான விகிதத்தில் கொடுத்துள்ளார். சீனியர் போலீஸ் கான்ஸ்டபிள், இளம் காவலர்கள், கொலையாளி ஷிஜு உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்க்கு பலம் சேர்த்துள்ளன. ஹேஷம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசை, ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு, மகேஷ் புவனானந்த் எடிட்டிங் டெக்னிக்கலாக பலம் சேர்த்துள்ளது.

6 நாட்களில் ஒரு கொலையாளியை தேடும் கதை என்பதால் மொத்தமே ஆறு எபிசோட்களில் வெப் சீரிஸ் முடிந்துவிடுகிறது. ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடுகின்றன. இதனால் ஒரே சிட்டிங்கில் அமர்ந்து பார்த்தால் நிச்சயம் புதிய அனுபவம் கொடுக்கும் வெப் சீரிஸ்ஸாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் காட்சியிலேயே ஒரு கொலையை காட்டிவிட்டு, அதன்பின்னர் பரபரப்பாக நகரும் வெப் சீரிஸ்களுக்கு நடுவில் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' புது அனுபவம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X