For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  movie review : அம்மா பாசத்துடன் மீண்டும் விஜய் ஆண்டனி. கோடியில் ஒருவன் திரைவிமர்சனம்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள் :

  விஜய் அன்டனி,
  ஆத்மீகா,

  இயக்கம் : ஆனந்த் கிருஷ்ணன்

  சென்னை : ட்யூஷன் டீச்சராக கலெக்டர் ஆகும் கனவில் கிராமத்தில் இருந்து கிளம்பி அம்மா கொடுத்த தைரியம் சத்தியமான பல வார்த்தைகள் என்று மனதிற்குள் வைத்துக்கொண்டு சென்னை வந்து சேருகிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி.

  தமிழ் சினிமாவுக்கே உரித்தான முரட்டுத்தனமான ஒரு ரவுடி கும்பல் மற்றும் அராஜகம் செய்து வரும் அரசியல்வாதிகள் என்று காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்கிறது. இவர்கள் எல்லோரும் வசிக்கும் சென்னை மாநகரத்தில் ஒரு குறிப்பிட்ட ஹவுஸிங் போர்ட் பகுதியில் விஜய் ஆண்டனி பல சவால்களை சந்திக்கிறார்.

  Recommended Video

  Kodiyil Oruvan Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil

  கல்வி எந்த அளவுக்கு நம் வாழ்வுக்கும் சமுதாயத்திற்கும் முக்கியம் என்பதை வலியுறுத்தி ஒரு டியூஷன் டீச்சராக களமிறங்கி ரவுடிகளாக மாறிய பல சிறுவர்களையும் அந்தப் பகுதி மக்களையும் மாற்ற முயற்சி செய்கிறார்.தவறான வழியில் செல்லும் சின்ன வயசு பசங்களை திருத்தும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எதார்த்தம். அந்த காட்சிகளை பார்க்கும் போது விஜய்யின் மாஸ்டர் படமும் நினைவுக்கு வருகிறது.

  அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ் அதர்வா நடித்த த்ரில்லர் திரைப்படம் டிவி யில் ஒளிபரப்பு ...பல புதிய மாற்றங்களுடன் கலர்ஸ் தமிழ்

  சென்னைக்கு வரும் விஜயராகவன்

  அம்மா மகன் செண்டிமெண்ட் இந்த படத்திலும் இருக்கின்றது. சொல்லப்போனால் அந்த செண்டிமெண்ட் மட்டும் தான் இந்த படத்தை காப்பாற்றி இருக்கின்றது. படிப்பதற்காக சென்னைக்கு வரும் விஜயராகவன் (விஜய் ஆண்டனி ) அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கோடியில் ஒருவன் கதை. கே ஜீ ஃப் பட ஸ்டைலில் வசனங்கள் நம் நினைவுக்கு பல காட்சிகளில் வந்து போகும்

  ரொமான்ஸ்

  ரொமான்ஸ்

  ஆக்‌ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் விஜய் ஆண்டனி ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் காட்சிகளில் அழகு, நளினம் , கவர்ச்சி என்று ரசிகர்களை குஷி படுத்துகிறார் .

  சமாளித்து ஜெயித்தாரா

  சமாளித்து ஜெயித்தாரா

  படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. சென்னையில் அக்கம் பக்கத்தினரிடம் நல்ல பெயர் வாங்கும் விஜய் ஆண்டனி, அந்த ஏரியாவின் கவுன்சிலர் போன்ற அரசியல் வாதிகளிடம் பிரச்சனையில் சிக்குகிறார். அதனை சமாளித்து ஜெயித்தாரா என்பது தான் மீதி கதை. வழக்கமாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார் விஜய் ஆண்டனி.

  முக்கியத்துவம் கொடுத்து

  முக்கியத்துவம் கொடுத்து

  முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரியான உணர்வு. முதல் பாதியில் விருவிருப்பு, நடிப்பு, திரைக்கதை, ஏற்ற வில்லத்தனம் என்று எல்லாம் கலந்த மசாலா படமாக இருக்க, இரண்டாம் பாதியில் அவை அனைத்தும் எங்கே போனது என்று தெரியவில்லை. விஜய் ஆண்டனி மட்டுமே படத்தில் இருக்கிறார். அனை த்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்து இருக்கலாம்.

  மக்களின் நியாயங்கள்

  மக்களின் நியாயங்கள்

  அரசியல்ரீதியான பல நல்ல வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. சமூகத்தின் சாடல் சமுதாயத்தின் மீது கொண்ட கோபம், அடித்தட்டு மக்களின் நியாயங்கள் என்று நிறைய விஷயங்களை ஒன்றாக இணைத்து ஒரு டியூஷன் டீச்சராக பாடம் எடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த்.

  நம்பகத்தன்மை ஏற்படும்

  நம்பகத்தன்மை ஏற்படும்

  எம்எல்ஏ எலக்ஷன் கவுன்சிலர் எலக்ஷன் முதலமைச்சர் பதவி என்று ஒரு சாமானியன் படிப்படியாக முன்னுக்கு வந்தால் எப்படி பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை அதிகப்படியான கற்பனைகளுடன் திரைக்கதை அமைத்து வெரைட்டி காட்டியுள்ளார் இயக்குனர். இருப்பினும் சில விஷயங்களில் நம்பகத்தன்மை ஏற்படும் விதம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை அமைத்திருந்தால் மிகவும் பிரம்மாண்டமான ஒரு நல்ல கதையாக கோடியில் ஒருவன் அமைந்திருக்கும். சிலபல லாஜிக் மிஸ்டேக்ஸ் இருப்பதினால் கோடியில் ஒருவன் நம் தெருக்களில் ஒருவனாக மட்டுமே மனதில் படுகிறது. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆங்காங்கே திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது. குடும்பத்துடன் சென்று சமூக கருத்துக்களையும் சின்ன சின்ன பாடங்களையும் எளிதில் கற்றுணர "கோடியில் ஒருவன்" படத்தை பார்க்கலாம்.

  English summary
  Vijay antony acted movie, "kodiyil oruvan" got released in theaters and with lots of political scenario many scenes have been potrayed by director anand. aathmika plays the heroine role and the entire script revolves around a common man who becomes a leader with unbelevieble political powers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X