twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்!

    நயன்தாரா, யோகி பாபு நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

    |

    Recommended Video

    நயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்- வீடியோ

    Rating:
    3.5/5
    Star Cast: நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், அன்புதாசன்(யு ட்டூப்)
    Director: நெல்சன் திலீப்குமார்
    சென்னை: தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக போதை பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீளும் நாயகியின் திரில்லிங் அனுபவம் தான் கோலமாவு கோகிலா.

    கோகிலாவின் கதை

    சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் கோகிலா (நயன்தாரா). தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி. தாய் சரண்யா, கல்லூரி படிக்கும் தங்கை சோபி (ஜாக்குலின்) ஆகியோருடன் பட்ஜெட் போட்டு வாழ்ந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு எதிரில் பலசரக்கு கடை நடத்தி வரும் யோகி பாபு, நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார்.

    Kolamavu kokila review

    சொற்ப சம்பளத்துக்கு ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் கோகிலாவுக்கு, பட்ஜெட்டில் துண்டு விழ, மேலாளரிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார். ஆனால் அவரோ அட்ஜெஸ்ட் செய்தால், வருமானம் உயரும் என சூசகமாக சொல்ல, அதற்கு வேற ஆளப்பாரு என வேலையை துறக்கிறார்.

    Kolamavu kokila review

    ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட கூடுதலாக ஊதியத்தில் ஒரு மசாஜ் சென்டரில் மேலாளர் வேலை கிடைக்கிறது நயன்தாராவுக்கு. ஆனால் விதி வலியது அல்லவா, தாய் சரண்யாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. தாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடும் நயன்தாராவுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் லிங்க் கிடைக்கிறது. தாயின் சிகிச்சைக்கு பணம் கிடைக்கும் நேரத்தில், அந்த கும்பல் மூலம் நயன்தாராவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார், தாயை காப்பாற்ற முடிந்ததா என்பதை யோகி பாபு அண்ட் கோவின் காமெடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் மீதிக்கதை.

    நயன்தாராவை வைத்து இந்த படத்தை எடுத்த இயக்குனர் நெல்சனுக்கு முதல் பாராட்டுக்கள். ஹீரோயினை வைத்தே ஹீரோயிசம் காட்ட முடியும் என அசால்ட் செய்திருக்கிறார். தாயை காப்பாற்ற எந்த தூரத்துக்கும் செல்லும் பழைய ஹீரோ கதையில் ஹீரோயின். சண்டைக்காட்சிகள் இல்லை. குத்து பாடல் இல்லை. ஹீரோ மாஸ் இல்லை. நயன்தாராவை முன்னிறுத்தி என்ன செய்தால், மக்கள் ஏற்பார்களோ, அதை கச்சிதமாக செய்திருக்கிறார்.

    Kolamavu kokila review

    பெண் என்றாலே செக்ஸ்க்குகான பொருளாக தான் ஆண்கள் பார்ப்பார்கள் என்பதை பல இடங்களில் காட்சிப்படுதியிருக்கிறார். அதே நேரத்தில் அதை ஒரு பெண் எப்படி கையாள வேண்டும் என்பதையும் நயன்தாரா மூலம் சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் திணறி இருப்பதும் தெரிகிறது.

    நெல்சன் மீது நயன்தாரா வைத்த நம்பிக்கையும், நயன்தாரா மீது நெல்சன் வைத்திருக்கும் நம்பிக்கையும் திரையில் தெரிகிறது. சும்மா பேருக்கு கூட நயன்தாராவுக்கு இணையான ஆண் ஜோடி இல்லை.

    Kolamavu kokila review

    அறம் படத்திற்கு பிறகு நயன்தாராவுக்கு மிக முக்கியமான படம் கோலமாவு கோகிலா. தன்னால் தனியாளாக சீரியஸான ரோல் மட்டுமல்ல, காமெடி கலந்து திரில்லிங் படத்தையும் தர முடியும் என நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. வெல்டன் லேடி சூப்பர் ஸ்டார்.

    தாயின் நிலையை நினைத்து உருகுவது, அப்பாவி பெண்ணாக முகத்தை வைத்துக்கொண்டு போதை பொருள் கடத்துவது, பின்னர் எதிரிகளை அதே அப்ரோச்சில் போட்டுத்தள்ளுவது, யோகி பாபுவின் லவ் டார்ச்சரை எதிர்கொள்வது என லைக்குகளை அல்லுகிறார்.

    Kolamavu kokila review

    அதே நேரத்தில் 'நானும் ரவுடி தான் காதும்மாவை' அப்பப்போ நினைவுப்படுத்துகிறார். இருந்தாலும் 'இது ஓகே பேபி'. ஆனால் நயன்தாராவுக்கே உரித்தான காஸ்ட்யும் சென்ஸ் இதில் மிஸ்சிங். படம் முழுக்க ஒரே மாதிரியான லாங் ஸ்கர்ட், கை வெச்ச சட்டையுடன் தோன்றுவது அன்லைக் செய்ய வைக்கிறது. அறம் படத்தில் அந்த வாய்ப்பு இல்லை. ஆனால் இதில் அது இருந்தும் பயன்படுத்தவில்லை.

    நயன்தாராவுக்கு பிறகு இயக்குனர் அதிகம் நம்பிருப்பது யோகி பாபுவை தான். அதற்கு தகுந்த நியாயம் செய்திருக்கிறார். அன்புதாசனுடன் சேர்ந்து யோகி பாபு செய்யும் கலாட்டாக்கள், இரண்டாம் பாதி படத்தை அதிவேக காமெடி எக்ஸ்பிரசாக மாற்றி இருக்கிறது. நீங்க வேற லெவல் புரோ.

    Kolamavu kokila review

    முற்பாதியில் சீரியஸ், பின்பாதியில் காமெடி என தன் வழக்கமான அசத்தல் படிப்பால் நயன்தாராவை தாங்கி நிற்கிறார் சரண்யா பொன்வண்ணன். தங்கை ஜாக்குலின், தந்தை சிவாஜி, மொட்டை ராஜேந்திரன், கோலீஸ் அதிகாரி சரவணன் அவரது மனைவி நிஷாக்கா , வில்லன்கள் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

    ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும் படத்தின் ஹீரோ அனிருத்தான். நயன்தாராவை மனதில் வைத்து டியூன் போட்டிருப்பார் போல, செம இளமையாக இருக்கிறது மியூசிக். கல்யாண வயசு பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட். மற்றப்பாடல்களும் மனதில் நின்று ரீங்காரமிடுகிறது. ஆனால் பின்னணி இசையில் பல புது விஷயங்களை புகுத்தியிருப்பது, அவ்வளவாக செட்டாகவில்லை.

    Kolamavu kokila review

    சிவகுமார் விஜயனின் கேமரா நயன்தாராவை அழகாக காட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறது. முற்பாதி காட்சிகளின் நீளத்தை இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால், நிர்மலின் படத்தொகுப்பும் பேசப்பட்டிருக்கும்.

    காமெடி, பேமிலி, திரில்லர் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது இந்த கோகோ. நயன்தாராவுக்காகவும், யோகி பாபுவுக்காகவும் நிச்சயம் பார்க்கலாம் இந்த கோலமாவு கோகிலாவை.

    English summary
    Actress Nayanthara's Kolamavu kokila is a mixed genre film, one can surely watch in theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X