For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Koogle Kuttappa Review: ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை மிஞ்சியதா? கெஞ்சியதா?கூகுள் குட்டப்பா விமர்சனம் இதோ!

  |

  Rating:
  2.5/5

  நடிகர்கள்: கே.எஸ். ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா

  இசை: ஜிப்ரான்

  இயக்கம்: சபரி - சரவணன்

  ரேட்டிங் - 2.5

  சென்னை: கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள கூகுள் குட்டப்பா இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

  இந்த படத்தை அவருடைய உதவி இயக்குநர்களாக சபரி மற்றும் சரவணன் இயக்கி உள்ளனர். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

  Recommended Video

  Koogle Kuttappa Review | கூகுள் குட்டப்பா | Yessa ? Bussa ? | K. S. Ravikumar | Filmibeat Tamil

  கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். ஆனால், அந்த படம் கொடுத்த தாக்கத்தை இந்த படம் கொடுத்ததா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

  இந்த வார ஓடிடி ரிலீ படங்கள்... பீஸ்ட்.. தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?இந்த வார ஓடிடி ரிலீ படங்கள்... பீஸ்ட்.. தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

  இதுதான் கதை

  ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை பார்த்தவர்களுக்கு படத்தின் கதை என்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வெறுக்கும் ஒரு மனிதனுக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பாசம் தான் படத்தின் கதை. மோதலில் ஆரம்பித்து காதலில் முடிவது போன்ற கதை தான் இறுதியில் தொழில்நுட்ப பாசம் நீடிக்கிறதா? இல்லையா? என்பது தான் கிளைமேக்ஸ். மலையாளத்தில் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சுராஜ், செளபின், கெண்டி ஸிர்டோ நடித்திருப்பார்கள். புதுமையான கதை என்பதால் அங்கே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

  கே.எஸ். ரவிக்குமார் தான் ஹீரோ

  கே.எஸ். ரவிக்குமார் தான் ஹீரோ

  தர்ஷன், லாஸ்லியா நடிக்கின்றனர் என்றதும் அவர்கள் தான் ஹீரோ, ஹீரோயின் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அப்போதே, மலையாள வெர்ஷனை பார்த்தவர்களுக்கு தெரியும் அவர்களது கதாபாத்திரம் டம்மி பீஸ் தான் என்று. இந்த படத்தின் ரியல் ஹீரோவே கே.எஸ். ரவிக்குமார் தான். தனது உதவி இயக்குநர்களை வைத்து, தனது சொந்த தயாரிப்பிலேயே தனக்காக ஒரு கதையை பிடித்து நடித்துள்ளார். ஜாம்பவான் இயக்குநரான கே.எஸ். ரவிக்குமார் சிறப்பாக நடித்தாலும், மலையாளத்தில் சுராஜ் நடித்ததை பல இடங்களில் இவரால் மேட்ச் செய்ய முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

  குழந்தைகளை கவரும் ரோபோ

  குழந்தைகளை கவரும் ரோபோ

  கிராமத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வரும் தந்தைக்கு அவன் மகன் வெளிநாட்டிற்கு ரொபாடிக்ஸ் இன்ஜினியராக வேலை பார்ப்பதே பிடிக்கவில்லை. தனியாக இருக்கும் அப்பாவை பார்த்துக் கொள்ள வேலை ஆட்களும் எல்லாம் செட்டாகாத நேரத்தில் தங்களது லேப்பில் பரிசோதனையில் இருக்கும் ரோபோவை அப்பாவுக்கு துணையாக விட்டுச் செல்கிறார். ஆரம்பத்தில், அதனிடம் வெறுப்பைக் காட்டும் கே.எஸ். ரவிக்குமார், படிப்படியாக எப்படி பாசம் வைத்து சொந்த மகனாகவே அதனை பாவிக்கிறார் என்கிற காட்சிகள் குழந்தைகளை இந்த சம்மர் ஹாலிடேவில் நிச்சயம் கவரும்.

  கொஞ்சம் நடிங்க தர்ஷன்

  கொஞ்சம் நடிங்க தர்ஷன்

  மலையாளத்தில் நடிகர் செளபின் எதார்த்தமாக நடித்திருப்பார். அதே நடிப்பை பிக் பாஸ் தர்ஷன் நடிக்க முயற்சி செய்தாலும், அந்த நடிப்பு அவரிடம் வந்து ஒட்டிக் கொள்ளாமல் ஓடி விடுகிறது. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் இருக்கும் எமோஷனல் கனெக்ட் அழுத்தமாக இருக்கும். ஆனால், இங்கே அது செயற்கையாக தெரிவது தான் படத்திற்கு பெரிய பிரச்சனையையே உண்டாக்கி உள்ளது.

  ஜப்பான் பொண்ணு கிடைக்கல

  ஜப்பான் பொண்ணு கிடைக்கல

  ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தில் கெண்டி ஸிர்டோ எனும் நடிகை ஜப்பானியாக பெண்ணாக நடித்திருப்பார். படத்திற்கு தகுந்தாற் போல டெக்னாலஜி, டைட்டிலில் குஞ்சப்பன், ஜப்பானிய பெண் ஹீரோயின் என அங்கே வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார்கள். ஆனால், இங்கே ஜப்பானிய பெண் கிடைக்கவில்லை என்பதால் இலங்கை பெண் லாஸ்லியாவை ஹீரோயினாக போட்டுள்ளனர். பிரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ள இரண்டாவது படம் வெளியாகி உள்ளது. ஆனால், இதிலும் அவருக்கு ஸ்கோப் இல்லை.

  பலம்

  பலம்

  கே.எஸ். ரவிக்குமாரின் நடிப்பு, ரோபோவுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் காட்சிகள், கே.எஸ். ரவிக்குமாரின் வயதான காலத்து ரொமான்ஸ் டிராக் மற்றும் ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. யோகி பாபு, பிராங்ஸ்டர் ராகுலின் காமெடி ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆர்வியின் ஒளிப்பதிவு ஓகே.

  பலவீனம்

  பலவீனம்

  படத்தை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்ப்பாக எடுத்திருந்தால் நல்லாவே இருந்திருக்கும் என்பதே படம் பார்ப்பவர்களின் கருத்தாக உள்ளது. இரண்டரை மணி நேரத்துக்கு சொல்ல வந்த கதையை சுருக்கமாக சொல்லாமல் சுற்றி வளைத்து தியேட்டரில் பாதி பேரை தூங்கவே வைத்து விட்டனர். ரோபோ காட்சிகளை தவிர குழந்தைகளை மற்ற காட்சிகள் கவர் பண்ணுமா? என்றால் பெரிய 'நோ' தான் பதிலாக உள்ளது.

  பார்க்கலாமா

  பார்க்கலாமா

  படமாக்கிய விதத்தில் ஏகப்பட்ட சொதப்பல்களை இயக்குநர்கள் செய்துள்ள நிலையில், படம் பல இடங்களில் தொய்வடைகிறது. மொத்தத்தில் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், ஒரு முறை அவர்களை கூட்டிக் கொண்டு கூகுள் குட்டப்பா படத்தை பார்க்க செல்லலாம். ஆனால், ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை மிஞ்சவில்லை இந்த கூகுள் குட்டப்பா.. ரொம்ப கஷ்டம்ப்பா!

  English summary
  Koogle Kuttappa Movie Review in Tamil is here. Malayalam movie Android Kunjappan version 5.25 official Tamil remake Koogle Kuttappa released today in theaters.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X