Kottukkaali: கொட்டுக்காளி பார்த்தா கண்டிப்பா காண்டாகிடுவீங்க.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான கொட்டுக்காளி படத்தை பார்த்தால் ரசிகர்கள் கண்டிப்பா காண்டாகிடுவாங்க என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் போட்டு புரட்டி எடுத்து விட்டார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்த ப்ளூ சட்டை மாறன் கொட்டுக்காளி படம் புரியவில்லை என்றும் கிளைமேக்ஸ் காட்சியை சரியாக முடிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் விருது படம் எடுக்கிறேன் என தொடர்ந்து அக்கப்போர் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
ஹீரோவான சூரி: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கடந்த ஆண்டு நடிகர் சூரி ஹீரோவாக தமிழ் சினிமாவில் மாறி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த ஆண்டு சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூரியை மிகப்பெரிய ஹீரோவாகவே தமிழ் சினிமாவில் உயர்த்தி விட்டது. இந்நிலையில், அவர் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் தான் கொட்டுக்காளி.
அடிவாங்கிய வசூல்: கருடன் படத்திற்கு கிடைத்த அளவுக்கு சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி படத்துக்கு வரவேற்பும் வசூலும் கிடைக்கவில்லை என்கின்றனர். முதல் நாளில் வெறும் 50 லட்சத்துக்கும் குறைவான வசூலை தான் கொட்டுக்காளி ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். மாரி செல்வராஜின் வாழை படத்துடன் போட்டியாக வெளியான இந்த படத்தை மிஷ்கின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் பாராட்டிய நிலையில், பொதுமக்களுக்கு படம் புரியவில்லை என்கிற விமர்சனங்களே குவிந்து வருகின்றன.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை சொல்றேன் என அவார்டு படங்களை எடுக்கும் பலரும் அந்த மனிதர்களே படத்தை புரிந்துக் கொள்ள முடியாத படியும், இந்த படம் எல்லாம் உனக்கு புரிய வேண்டுமென்றால், நீ சினிமாவில் பல டிகிரி முடித்து விட்டு வரவேண்டும் என சொல்வதெல்லாம் சுத்த பித்தலாட்டம் என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரசிகர்கள் காண்டாகிடுவாங்க: கூழாங்கல் படமே விருது படம் என்பதால் ஸ்லோவாகத்தான் செல்லும். ஆனால், அந்த படத்தின் கதை நகரும். ஆனால், கொட்டுக்காளி படத்தில் ஆட்டோ, ஸ்கூட்டர் தான் நகர்கிறதே தவிர கதை எங்கேயும் நகரவில்லை. கடைசியாக கிளைமேக்ஸில் கிளைமேக்ஸே வைக்காமல், நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க என தீர்ப்பை மக்கள் கையில் கொடுத்து காண்டாக்கி விட்டார் இயக்குநர் வினோத்ராஜ் என விளாசியுள்ளார்.
மிஷ்கினை தான் தேடுறாங்க: கொட்டுக்காளி படத்தை பார்த்து விட்டு காண்டான ரசிகர்கள் நியாயமா சூரி அல்லது வினோத்ராஜை தேடணும். ஆனால், அதற்கு பதிலாக பெரும் பில்டப் கொடுத்து படத்தை புரமோட் செய்த இயக்குநர் மிஷ்கினைத்தான் ரசிகர்கள் பலரும் தேடுறாங்க என பங்கமாக கலாய்த்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் தான் இந்த படத்தை புரமோட் செய்ய நிர்வாணமாக நடனமாட கூட தான் தயார் என்றும் அப்படியொரு அற்புதமான படைப்பு என்றும் பேசியிருந்தார் என நெட்டிசன்களும் கொட்டுக்காளி படத்தை கொட்டி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனுக்கு படம் புரியவில்லை என்றும் அதற்கு எல்லாம் ஞானக் கண் வேண்டும் என்றும் கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











