Kudumbasthan Review: குடும்பஸ்தன் விமர்சனம்.. மணிகண்டன் தான் பலம்.. நக்கலைட்ஸ் டீம் படம் எப்படி?

ரேட்டிங்:

Rating:
2.5/5

நடிகர்கள்: மணிகண்டன், குரு சோமசுந்தரம், சான்வி
இசை: வைசாக்
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி

சென்னை: குட் நைட், லவ்வர் படங்களை தொடர்ந்து மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள குடும்பஸ்தன் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த டீமை சேர்ந்த ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் அந்த யூடியூப் சேனலில் நடித்த பலர் இணைந்து நடித்துள்ள படம் தான் இந்த குடும்பஸ்தன்.

பாட்டல் ராதா படத்தில் ஹீரோவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் இந்த படத்தில் மணிகண்டனுக்கு போட்டியாக கெத்துக் காட்டும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து தூள் கிளப்பியுள்ளார்.

kudumbasthan  kudumbasthan review  manikandan

படத்தின் டைட்டிலை பார்த்தாலே குடும்பத்தில் கடன் வாங்கி கஷ்டப்படும் குடும்பஸ்தனின் கஷ்டம் தான் இந்த படம் என்பது புரிந்துவிடும். அதை எந்தளவுக்கு ரசிக்கும் படி கொடுத்தார்களா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

குடும்பஸ்தன் கதை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கலக்கிய மணிகண்டன் அதன் பின்னர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் பணியாற்றியுள்ளார். காலா, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கிய மணிகண்டனுக்கு ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜெய்பீம் படத்தில் அவர் நடித்ததை பார்த்து அனைவரும் மிரண்டு போனார்கள். குட் நைட் படத்தின் மூலம் சிறு பட்ஜெட் படத்தில் தூள் கிளப்பும் ஹீரோவாகவும் அடுத்த விஜய் சேதுபதி என்கிற ரேஞ்சுக்கு வளர்ந்துள்ள மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

kudumbasthan  kudumbasthan review  manikandan

நவீன் கதாபாத்திரத்தில் கிராபிக் டிசைனராக நடித்துள்ள மணிகண்டன் ஆதிதிராவிடர் பெண்ணான வெண்ணிலாவை (சான்வி மேகனா) காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். சாதி விட்டு சாதி திருமண செய்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த வேலையும் போக, ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் வெண்ணிலா திருமணமான ஜோரில் கர்ப்பமாக குடும்பத்தை நடத்த கடன் வாங்க ஆரம்பிக்கும் ஹீரோவுக்கு நடக்கும் பிரச்சனைகளும் அதை அவர் சரி செய்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

படம் எப்படி இருக்கு?: நடுத்தரவர்க்கத்தினர் குடும்பத்தில் தினம் தினம் சந்திக்கும் கடன் தொல்லை பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யதார்த்தமான இளைஞராக நடித்து அசத்தியிருக்கிறார் மணிகண்டன். அவரது அக்கா கணவராக வரும் குரு சோமசுந்தரம் காசு பணம் இல்லாதவனை இந்த உலகம் புழுவாக நினைக்கும் என்கிற அளவுக்கு இன்சல்ட் செய்வதும், பணம், காசு இல்லையென்றாலும் கவுரவமாக வாழ்ந்து காட்டுவேன் என மணிகண்டன் வாழ முயற்சிக்க அடுத்தடுத்து கடன் தொல்லையில் சிக்குவதும் அவர் தொட்டது எல்லாம் ஃப்ளாப் ஆக கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்பதை சீரியஸாக கொண்டு செல்லாமல் இயக்குநர் தனக்கே உரித்தான பாணியில் ஜாலியாக கொண்டு சென்றுள்ள விதம் சிறப்பு.

kudumbasthan  kudumbasthan review  manikandan

பிளஸ்: மணிகண்டன் மற்றும் குரு சோமசுந்தரத்தின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் இருவரது தேர்ந்த நடிப்பு தான் படத்திற்கு பெரிய பலம். சுந்தர்ராஜன், நாயகியாக நடித்துள்ள சான்வி மேக்னா உள்ளிட்டோர் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். நகைச்சுவை சில இடங்களில் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. வைசாக்கின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மைனஸ்: முதல் பாதி படம் ஓகே ரகமாக செல்ல, இரண்டாம் பாதியில் மீண்டும் அதே இடத்தில் படம் குறும்படம் போலவும் ஒரு யூடியூப் வீடியோ போலவும் அதிகப்படியான வசனங்களை மட்டுமே நம்பி சுற்றிக் கொண்டிருப்பது எரிச்சலை கிளப்புகிறது. இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி முடிந்தவரை ஒரு நீட்டான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். ஆனால், இன்னமும் ஷார்ப்பாக்கி இருந்தால் சிறப்பாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X