twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘குட்டவும் சிக்‌ஷயும்’ malayalam movie review : தீரன் படத்தின் இன்னொரு மேக்..ஆனால் இது அந்த ரகமல்ல

    |

    Rating:
    3.0/5

    படம் : குட்டவும் சிக்‌ஷயும் (kuttavum sikshayum)
    நடிகர்கள்: அசிப் அலி, சன்னி வேய்ன், அலன்சியர் லோப்,
    இயக்குநர்: ராஜீவ் ரவி
    திரைக்கதை: சிபிதாமஸ், ஸ்ரீஜித் திவாகரன்
    கேமரா: சுரேஷ் ராஜன்
    இசை: டான் வின்சென்ட்

    சென்னை: மலையாளம் என்றாலே யதார்த்த படங்களுக்கு பஞ்சமில்லை எனலாம். வழக்கமான போலீஸ் படங்களைப்பார்த்து சலித்துப்போயிருக்கும் நமக்கு யதார்த்தமான படமாக குட்டவும் சிக்‌ஷயும் அமைந்துள்ளது.

    மலையாளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் தீரன் படம் போல் குற்றவாளிகளை கைது செய்ய வடமாநிலம் நோக்கி போகும் தனிப்படை போலீஸார் சந்திக்கும் பிரச்சினையை கூறுகிறது.

     அப்பாவை பழி வாங்கிய லோகேஷ் கனகராஜ்... எப்படி ஏன் என்ற சுவாரஸ்ய தகவல் தெரியுமா? அப்பாவை பழி வாங்கிய லோகேஷ் கனகராஜ்... எப்படி ஏன் என்ற சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

    இந்தப்படம் அந்தப்படம் அல்ல..

    இந்தப்படம் அந்தப்படம் அல்ல..

    சுரேஷ் கோபி மற்றும் மம்முட்டியின் 90 களின் போலீஸ் படங்களைப் போல பார்த்து பழகிய கேரள ரசிகர்களுக்கும், தீரன், காக்க காக்க, சாமி, சிங்கம் என பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களுக்கும் வித்தியாசமான போலீஸ் படத்தை காட்டுகிறது குட்டவும் சிக்‌ஷயும் மலையாளப்படம். இது தமிழிலும் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.

    சாகச ஹீரோக்களின் பொருந்தாத போலீஸ் வேடம்

    சாகச ஹீரோக்களின் பொருந்தாத போலீஸ் வேடம்

    தமிழ், இந்தி, மலையாளம் குறிப்பாக தெலுங்கு படங்களில் ஹீரோ போலீஸ் அதிகாரியாக இருந்தால் அவர் பெரிய அளவில் சாகசம் செய்வார். மேலதிகாரிக்கு அடங்க மாட்டார், துப்பாக்கியை எடுத்து பொட்டு பொட்டுன்னு சுடுவார் ( ஒவ்வொரு புல்லட்டுக்கும் நிஜத்தில் கணக்கு சொல்லணும், துப்பாக்கி சூடு நடத்த பர்மிஷன் இருக்கணும்) தனியாளாக சண்டை போடுவார், அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு இருக்கும். எந்த ஸ்டேஷனில் குற்றம் நடந்தாலும் இவர் மட்டுமே அங்கு விசாரணை நடத்துவார். இப்படி பல கூத்துகள் படங்களில் இயக்குநர்களின் அறியாமையை அல்லது ரசிகர்களின் அறியாமையை நம்பி கண்டபடி படம் எடுப்பதை பார்த்துள்ளோம்.

    யதார்த்தம் இல்லாத போலீஸ் படங்கள்

    யதார்த்தம் இல்லாத போலீஸ் படங்கள்

    ஆனால் சமீப காலமாக காவல்துறை பற்றி படம் எடுக்கும் இயக்குநர்கள் காவல் அதிகாரிகளின் ஆலோசனைப்பெற்று அதன்படி படம் எடுக்கிறார்கள். இதனால் யதார்த்தம் சற்று கூடுதலாக உள்ளது. ஆனாலும் பல இடங்களில் கோட்டைவிடுதலும் நடக்கிறது. கேட்டால் சினிமாவை சினிமாவாக பாரு என்பார்கள் (தேடிப்பார்த்தால் மூளையை கழற்றி வைத்துவிட்டு என்று அர்த்தம் வரும்). போலீஸை போலீஸாக காட்டும் பல படங்களும் வந்துள்ளன, அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் குட்டவும் சிக்‌ஷயும் (குற்றமும்-தண்டனையும்).

    வடமாநிலத்தில் கொள்ளையர்களை பிடிப்பதில் பலியான ஆய்வாளர் பெரியபாண்டியன்

    வடமாநிலத்தில் கொள்ளையர்களை பிடிப்பதில் பலியான ஆய்வாளர் பெரியபாண்டியன்

    சில ஆண்டுகளுக்கு முன் கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்ற நாதுராம் என்பவனையும், கூட்டாளிகளையும் பிடிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். நள்ளிரவில் நடந்த மோதலில் தவறுதலாக சக ஆய்வாளரே அவரை சுட்ட சோகம் நடந்தது. வடமாநிலங்களிலிருந்து வேலைக்காக தென் மாநிலங்களுக்கு வரும் குற்றவாளிகள் கொள்ளையடித்து நகைகளுடன் தப்பிச் சென்றால் அவர்களை பிடிக்கச் செல்லும் போலீஸார் படும் அவதியைத்தான் குட்டவும் சிக்‌ஷயும் சொல்கிறது.

    இன்னொரு தீரன் படம் ஆனால் வேறு மாதிரி

    இன்னொரு தீரன் படம் ஆனால் வேறு மாதிரி

    வடமாநிலங்களில் தென் மாநிலங்கள் போல் சட்டத்தின் ஆட்சி நடப்பதில்லை. படிக்காத, பின்தங்கிய மாநிலங்களில், ஜாதிய அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் லோக்கல் அரசியல்வாதிகள் செல்வாக்கில் உள்ள மாநிலங்களில் லோக்கல் போலீசார் அனுமதி பெற்றே நுழைய முடியும். போலீஸுக்கு மரியாதை எல்லாம் கிடையாது. பல மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு சொந்த கிராமத்தில் வந்து அடைக்கலமாகிவிடும் குற்றவாளிகளை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாது. வட மாநில போலீஸாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். இதை தீரன் படத்தில் காட்ட்டியிருப்பார்கள்.

    2015 ஆம் ஆண்டு காசர்கோடு நகைக்கடை கொள்ளை

    2015 ஆம் ஆண்டு காசர்கோடு நகைக்கடை கொள்ளை

    இதை வேறுவிதமாக மிகத்தெளிவாக குட்டவும் சிக்‌ஷயும் சொல்கிறது. இயக்குநர் ராஜீவ் ரவி கேரளாவில் 2015 ஆம் ஆண்டு கேரளா காசர்கோடு மாவட்டத்தில் நடந்த நகைக்கடைக் கொள்ளையும் அதை கண்டுபிடிக்க உத்தரபிரதேசம் சென்றபோது அனுபவித்த சிரமங்களை படமாக எடுத்துள்ளார். இதேபோல் தீரன் படத்திலும் எடுத்துள்ளனர். ஆனால் வித்தியாசம் தேவையற்ற வீர தீர காட்சிகள் இந்தப்படத்தில் இல்லை.

    கதை என்ன?

    கதை என்ன?

    இன்ஸ்பெக்டர் சாஜன் (அசிப் அலி) கேரளாவில் நடந்த போராட்டத்தின்போது இளைஞன் ஒருவனை மார்பில் சுட்டுக்கொல்கிறார் அது அவருக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கிறது. இந்நிலையில் காசர்கோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டராக (சி.ஐ) பணியாற்றுகிறார். ஒருநாள் அதிகாலையில் நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. புலன் விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிகிறது.

    வடமாநிலம் செல்லும் தனிப்படை போலீஸாரின் சிரமங்கள்

    வடமாநிலம் செல்லும் தனிப்படை போலீஸாரின் சிரமங்கள்

    வடமாநிலம் சென்று கொள்ளையர்களை பிடிக்க மேலதிகாரியின் அனுமதி பெற்று தனது டீமுடன் அங்குச் செல்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சினைகள், குற்றவாளிகளை பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை. படத்தில் குற்றம் நடந்தப்பின்னர் சி.ஐ சாஜன் புலன் விசாரணை செய்யும் முறை, ஒவ்வொரு கட்டத்திலும் குற்றவாளிகளை நெருங்கும் வழிமுறைகள், போலீஸார் எப்படி இயங்குவார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ராஜீவ் ரவி. போலீஸார் இப்படித்தான் செயல்படுவார்கள் குற்றவாளிகளை அணுகுவது இப்படித்தான் என பக்கத்திலிருந்து பார்ப்பதுபோல் படம் எடுக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்

    பிளஸ்

    படத்தில் சிஐ ஆக வரும் அசீப் அலி போலீஸ் சி.ஐ வேசத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது பார்வையும், மிடுக்கான தோரணையும், சில நேரங்களில் சாதாரணமாக இருப்பதும் அளவாக செய்துள்ளார். போலீஸாக நடிப்பதற்கென்றே அவதாரம் எடுத்துள்ள அலென்சியர் லோப்ஸ் எஸ்.ஐயாக சிறப்பாக நடித்துள்ளார். சிபி தாமஸ் அழகாக கதையை செதுக்கியுள்ளார். போலீஸ் நடைமுறையை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். வட மாநில கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ள காட்சி உயிர்ப்புடன் உள்ளது.

    உயிரைப்பணயம் வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் போலீஸார்

    உயிரைப்பணயம் வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் போலீஸார்

    வடமாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போலீஸாரின் அசிரத்தையான அணுகுமுறை, போலீஸுக்கு போலீஸே லஞ்சம் கொடுப்பது, போலீஸாரே உள்ளே செல்ல அஞ்சும் கிராமங்கள், லோக்கல் அரசியல்வாதிகளின் உதவியுடன் குற்றவாளிகள் தப்பிப்பது, அதை மிரட்டலாகவே அங்குள்ள போலீஸார் சொல்வது, உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் உதவி கிடைப்பது என அழகாக சொல்லியிருப்பார்கள். உயிரைப்பணயம் வைத்து பிடிக்கப்படும் குற்றவாளிக்கு லோக்கல் மேஜிஸ்ட்ரேட் ஜாமீன் வழங்குவதையும் அழகாக சொல்லியிருக்கின்றனர்.

    மைனஸ்

    மைனஸ்

    போராட்டக்காரர்களை சுடும் சாஜன், பின்னர் அதை நினைத்து வருந்தும் காட்சியும் அதுபற்றி எஸ்.ஐயிடம் பேசும் காட்சிகளும் திணிக்கப்பட்டது போல் உள்ளது. படத்தில் சம்பவங்கள் வேகமாக நகர்ந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அழுத்தமில்லாமல் படம் நகர்வதுபோன்ற எண்ணத்தை பார்ப்போருக்கு தருகிறது.

    தீரன் படம் போல் இருந்தாலும் இது தீரன் ரகமல்ல

    தீரன் படம் போல் இருந்தாலும் இது தீரன் ரகமல்ல

    படம் தீரன் கதைபோல் இருந்தாலும் இது அங்கு நடந்த கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் முடிவு வேறு மாதிரி உள்ளது. இப்படம் இப்படித்தான் இருக்க முடியும். சாதாரண கிராமத்து பெண் கோடாலியால் இன்ஸ்பெக்டரை கொல்ல வருவதும் இரண்டு மூன்று பெண்களுக்கு பயந்து இன்ஸ்பெகடர் ஓடுவதும் நிஜத்தில் நடக்கவே வாய்ப்பு அதிகம். குற்றவாளியை கொண்டுவர மொழி தெரியாத உதவி கிடைக்காத ஒரு மாநிலத்தில் எப்படி செயல்பட முடியும் என்பதை அழகாக காட்டியுள்ளனர். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்சில் வெளியாகியுள்ளது.

    English summary
    kuttavum Shikshayum Malayalam Movie Review in Tamil: The Malayalam film Kuttavum Sikshayum beautifully portrays the difficulties faced by the police force when they go to the north in search of criminals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X