For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Kutty Story Review : குட்டி ஸ்டோரி விமர்சனம்... எந்த ஸ்டோரி முதலிடத்தில்!

  |

  Rating:
  3.0/5
  Star Cast: விஜய் சேதுபதி, அதிதி பாலன், கெளதம் மேனன், அமலா பால், வருண்
  Director: வெங்கட் பிரபு

  சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் இன்று வெளியானது.
  பல விதமான காதல் , பல தரப்பு அனுபவங்கள் என்று கலந்து கட்டி நான்கு குட்டி கதைகளை முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்த்து வேல்ஸ் இன்டர்நேஷனல் வெளியிடுகிறது .

  வெங்கட்பிரபு,கௌதம் மேனன்,ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி என நான்கு முன்னணி இயக்குனர்கள் இயக்கி இருக்கின்றனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி , அவரவர் ஸ்டைல் மற்றும் டைரெக்டோரியல் டச் கொடுக்கின்றனர் .

  காதல் காமம் என இரண்டையும் ஒவ்வொரு கதைக்கும் தகுந்தவாறு கூறியிருக்கும் இந்த குட்டி ஸ்டோரி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது அதில் எந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பதை வரிசையில் காண்போம்.

  நலன் குமாரசாமி

  நலன் குமாரசாமி

  சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் இந்த ஆடல் பாடல் பகுதியில் விஜய் சேதுபதி அதிதி பாலன் நடித்திருக்க திருமணத்திற்கு பிறகும் தொடரும் இவர்களது காதலை மிக எதார்த்தமாக கூறியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம் குறையாமல் காதலையும் காமத்தையும் கலந்தவாறு இருக்க ஆடல் பாடல் குட்டி ஸ்டோரி படத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக பின்னணி இசை பலரையும் மகிழ்ச்சி படுத்தியதோடு சின்ன சின்ன எதார்த்தமான வசனங்கள் மனதை மயக்கும் கேமரா ஷாட்ஸ் , மொட்ட மாடியில் இருக்கும் குடில் என்று குட்டி குட்டி விஷயங்கள் பெரிய அளவில் ஈர்க்க படுகிறது. கணவன் மனைவி உறவு , இன்றைய செல் போன் சீரழிவு ,டிஜிட்டல் உலகத்தில் ஏற்படும் கஷ்டங்கள் லாபங்கள் எல்லாவற்றையும் ஒன்றி இணைத்து ஒரு மெல்லிய கோட்டில் அழகாக சொல்லி இருக்கிறார் நலன். மீண்டும் மீண்டும் விஜய் சேதுபதி தனக்கு உண்டான ட்ரெண்டிங் ஃபாக்ட்டர்ஸ் புரிந்து செயல் பட்டு இருக்கிறார் . அதிதி பாலனுக்கு இந்த படம் ஒரு நோட் வர்த்தி படமாக என்றென்றும் பேசப்படும் .

  ஏ எல் விஜய்

  ஏ எல் விஜய்

  வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்து அமிதேஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்திருக்கும் இந்த பாகத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருக்க, . இளமை ததும்பும் காட்சிகளோடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. திருமணத்துக்கு முன் ஏற்படும் உடல் உறவு அதன் பின் விளைவுகள் என்று பல படங்களில் இந்த விஷயத்தை சொன்னாலும் இந்த குட்டி ஸ்டோரியில் சொன்ன விதம் கொஞ்சம் அழகு. இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனையாகவும் பார்க்க படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சட் என்று முடிந்து விடுவதால் மனதில் எதோ ஒரு சின்ன தயக்கம் ஏற்படும். இன்னொரு புது அத்தியாத்தை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் என்று பார்வையாளர்களிடம் விட்டு செல்கிறார் இயக்குனர். காமம் , காதல் , தாய்மை , விரக்தி என்று அழகாக நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ் . தோழியாக வரும் ஆயிரா மிகவும் கவனம் ஈர்க்கிறார் .

  வெங்கட் பிரபு

  வெங்கட் பிரபு

  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் "லோகம் " பாகத்தில் வருண் மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் முதல் முறையாக நடித்திருக்க வழக்கமான காதல் கதை இல்லாமல் அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதாக கணிக்க முடியாத அளவுக்கு இன்டர்நெட் கேமிங் என்று ஒரு புது யுத்தியை பயன் படுத்தி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் .இதுவரை பசங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த வெங்கட் பிரபு இந்த முறை காதல் படங்களையும் என்னால் வித்யாசமாக இயக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். குட்டி ஸ்டோரியில் ரசிகர்களின் பார்வையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த குட்டி கதைக்கு அனிமேஷன் செய்ய பெரிய பட்ஜெட் கொடுத்த தயாரிப்பாளர்க்கு ஸ்பெஷல் சல்யூட். அனிமேஷன் சீ ஜி என்று அழகாக கதையை நகர்த்தி இளைஞர்கள் அதிகம் கவரும் கேமிங் என்ற ஒன்றை வைத்து பல ட்விஸ்ட் அண்ட் டர்ன் செய்யும் திரைக்கதை பாராட்டதக்கது . சங்கீதா க்ரிஷ் நடிப்பில் சோகம் இருந்தாலும் அழுத்தம் அழகாக பதிவாகிறது .

  இதுவும் மூன்றாம் இடம் தான்

  இதுவும் மூன்றாம் இடம் தான்

  பொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே அதில் காதல் காட்சிகளுக்கும் ரொமான்டிக் வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது. குட்டி ஸ்டோரியில் எதிர்பாரா முத்தம் என்ற பாகத்தை இயக்கி நடித்துள்ள கௌதம் மேனன் இந்த முறை அமலாபாலுடன் ஜோடி சேர்ந்து இருக்க நண்பர்களுடன் தனது இளமைக்கால காதலை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் மனதை அள்ளுகிறது. காதல் படங்களை இயக்குவதில் நான் வல்லவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். "எதிர்பாரா முத்தம்" பலரையும் எதிர்பார்க்க வைத்திருக்க இந்த பாகமும் மூன்றாம் இடத்தை தான் பிடித்துள்ளது. நான்காம் இடம் என்று எதுவும் இந்த குட்டி ஸ்டோரியில் இல்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு இயக்குனரும் மிகவும் மெனக்கெட்டு செயல் பட்டு இருக்கிறார்கள் . அமலா பால் இளம் கன்னியாகவும் , திருமணமான பெண்ணாகவும் மிகவும் வித்தியாச படுத்தப்பட்டு காட்சிகளில் ஜொலிக்கிறார் . வினோத் கிஷன் இந்த கதைக்கு சரியான தேர்வு , தனது முட்டை கண்கள் மூலம் இளமை வயது ஜீவீம் கதாபாத்திரத்தை மெருகேத்தி இருக்கிறார் . நண்பர்களாக வரும் ரோபோ ஷங்கர் , பாடகர் ஸ்ரீராம் அடிக்கும் கவுண்டர்கள் கொஞ்சம் நிறை சில இடங்களில் அதுவே குறை . கௌதம் மேனன் நடிப்பை சமீப காலங்களில் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இந்த படத்தையும் ரசிப்பார்கள் . "லெட்டர் கிங் " என்று அமலா பால் சொல்லும் வசனம் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் பலரையும் கனெக்ட் செய்யும் .ஒரூ ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா முடியாதா ? என்ற கேள்வியை திரைக்கதையாக மாற்றி காதலை கப்பல் ஏற்றி கௌதம் தனது வழக்கமான பாணியில் ஸ்டைலிஷான ஒரு குட்டி ஸ்டோரி கொடுத்து உள்ளார் .

  English summary
  kutty story is a famous keyword among today's youngsters and the movie titled "kuttystory" got released today with various love and romance subjects with popular directors and versatile actors. four different love stories with different kind of human emotions plus lots of value added to the relationship factors. vels international is releasing this movie as valentines day treat for young minds and to attract the true love of human.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X