L2 Empuraan X Review: யாருப்பா அந்த டிராகன்?.. மோகன்லாலின் எம்புரான் பட ட்விட்டர் விமர்சனம் இதோ!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மலையாள திரையுலகின் டெமி காடான லாலேட்டன் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எல் 2 எம்புரான்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் திட்டமிட்டபடி வெளியானது.
கேரளாவில் காலையிலேயே காட்சிகள் ஆரம்பித்துவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து என ஓவர்சீஸ்களிலும் படம் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் 9 மணிக்கு சிறப்பு காட்சியாக எம்புரான் படம் ரிலீஸ் ஆகிறது. சியான் விக்ரமின் வீர தீர சூரன் 9 மணி காட்சி வெளியாக வாய்ப்பில்லை என்றும் 11.30 அல்லது 12 மணிக்கு மேல் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு தான் வெளியாகும் என்கின்றனர்.

அதன் காரணமாக ரசிகர்கள் காலையிலேயே மோகன்லாலின் எம்புரான் படத்துக்கு டிக்கெட் போட தொடங்கிவிட்டனர். இந்நிலையில், படம் தொடங்கியதில் இருந்தே சோஷியல் மீடியாவில் மோகன்லால் ரசிகர்கள் எம்புரான் படத்துக்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
மலையாளத்திலும் டிராகன் ஃபீவர்: ப்ரூஸ் லீ காலத்திலேயே அவர் சீனாவின் டிராகனை வைத்து பல படங்களை கொடுத்துவிட்டார். தற்போது டிராகன் ஜூரம் இந்திய சினிமாவையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி 150 கோடி வசூலை வாரி குவித்தது. அடுத்து அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தில் ரெட் டிராகனாக அதகளம் செய்ய காத்திருக்கிறார். இந்நிலையில், எம்புரான் படத்தில் யாரு அந்த டிராகன் என்பதை ரசிகர்கள் ரிவீல் பண்ண வேண்டாம் என படக்குழு சொல்லியிருக்கும் நிலையில், மோகன்லால் தான் டிராகன் என்றும் பசில் ஜோசப் தான் டிராகன் என்றும் ரசிகர்கள் பதிவிட தொடங்கிவிட்டனர்.
லாலேட்டன் கொல மாஸ்: த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்களை போல மோகன்லாலுக்கு வெற்றிப் படமாக கடைசியாக அமைந்த படம் என்றால் அது லூசிஃபர் தான். அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம், மலைக்கோட்டை வாலிபன் அவரே இயக்கி நடித்த பரோஸ் உள்ளிட்ட படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில், அதற்கெல்லாம் கம்பேக் படமாக எம்புரான் உள்ளது என லாலேட்டனின் ஓபனிங் காட்சியின் மாஸை பார்த்தே ரசிகர்கள் விமர்சனம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
50 கோடி ப்ரீ புக்கிங் வசூல்: மலையாள படங்கள் 50 கோடி லைஃப் டைம் வசூல் அள்ளினாலே பெரிய வெற்றியாக பார்க்கப்படும். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 230 கோடி வரை வசூல் ஈட்டியது. இந்நிலையில், அதிரடியாக முதல் நாளே படம் வெளியாவதற்கு முன்பாகவே 50 கோடி ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளதாக படக்குழு நேற்றே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மேலும், ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைத்துள்ளது. முதல் நாள் வசூல் அதிகபட்சமாக 100 கோடியை தாண்டும் என்கின்றனர்.
தீபக் தேவ் பிஜிஎம் மிரட்டல்: இயக்குநராக பிரித்விராஜ் சுகுமாரன் எங்கேயோ போய்விட்டார். அவரது பிரம்மாண்டமான படைப்பாக எம்புரான் 2 எப்போதுமே இருக்கும். அதற்கு பக்க பலமாக தீபக் தேவின் பின்னணி இசை ஒவ்வொரு சீனையும் கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக மாற்ற கை கொடுத்துள்ளது. எம்புரான் மிரட்டலின் உச்சம் என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











