twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Laal Singh Chaddha Review:தி ஃபாரஸ்ட் கம்ப் இந்தி ரீமேக் எப்படி இருக்கு? லால் சிங் சத்தா விமர்சனம்!

    |

    நடிகர்கள்: அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா

    இசை: தனுஜ் டிகு, ப்ரீதம்

    இயக்கம்: அத்வைன் சந்தன்

    Rating:
    3.5/5

    சென்னை: இயக்குநர் ராபர்ட் ஜெம்மெக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான தி ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் கதையை சுமார் 10 ஆண்டுகள் செலவு செய்து உருவாக்கி உள்ளாராம் அதுல் குல்கர்னி.

    மேலும், அந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராடி இந்த படத்தை எடுத்துள்ளதாக புரமோஷனின் போது அமீர்கான் மற்றும் அதுல் துல்கர்னி கூறியிருந்தனர்.

    இந்நிலையில், 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்திய வெர்ஷனாக உருவாகி உள்ள லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

    என்ன கதை

    என்ன கதை

    தி ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கதை தெரிந்திருக்கும். ஸ்பெஷல் சைல்டாகவும் ஐக்யூ லெவல் குறைவாகவும் உள்ள லால் சிங் சத்தா சரியாக நடக்கக் கூட முடியாமல் அவதிப்படும் நிலையில், அவனது சிறு வயது தோழி ரூபா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ஓடு லால் சிங் ஓடு என ஊக்கம் கொடுக்க, அவனது வாழ்க்கையின் ஓட்டம் தொடங்குகிறது. விளையாட்டில் சாதனை, அப்படியே கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்வது, காதலியை தேடிச் செல்வது, காதலி பிரிந்து செல்ல பல ஆண்டுகள் ஓடுவது இறுதியில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? காதலிக்கு என்ன ஆனது என்பது தான் லால் சிங் சத்தா படத்தின் கதை.

    ரீமேக் எப்படி

    ரீமேக் எப்படி

    தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்கவின் அரசியல் கதையோடு ஒருங்கே நகரும், அடிக்கடி அமெரிக்க அரசியலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம், குடியரசுத் தலைவர்களுடன் கம்ப் உரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போல இந்திய அரசியல் குறித்த காட்சிகளையும் ராணுவத்தில் லால் சிங் சத்தா பணியாற்றிய சம்பவங்கள், கார்கில் போர் உள்ளிட்டவற்றை இந்திய ரசிகர்களுக்காக மாற்றி எழுதியதிலேயே அதுல் குல்கர்னி ஸ்கோர் செய்து விட்டார். அதை படமாக்கிய விதத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் அசத்தி உள்ளார்.

    அமீர்கான் நடிப்பு

    அமீர்கான் நடிப்பு

    அமீர்கான் தலைசிறந்த நடிகர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. லால் சிங் சத்தா படத்தின் ஆரம்பத்தில் ரயிலை பிடித்துக் கொண்டு (அந்த படத்தில் பார்க் பெஞ்ச்) கையில் இருக்கும் பெட்டியில் இருந்து பானிப்பூரியை எடுத்துக் கொடுத்து அருகே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கதையை சொல்வது போல ஆரம்பித்து லால் சிங் சத்தாவின் பயணத்தை சொல்வது சிறப்பு. ஆனால், அவரது இளம் வயது கதாபாத்திர காட்சிகளில் அதிகமாக பிகே அமீர்கான் எட்டிப் பார்ப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

    அங்கே ஜென்னி இங்கே ரூபா

    அங்கே ஜென்னி இங்கே ரூபா

    ஜென்னி என்கிற பெயர் தான் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸியாக மாறியதா? என்றெல்லாம் ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. லால் சிங் சத்தாவில் ரூபாவாக கரீனா கபூர் நடித்துள்ளார். சிறுவயதிலேயே அப்பாவின் தொல்லை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறும் அவர், நாடோடியாக செல்வதும், அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவதும், லால் சிங் சத்தாவின் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் குழம்புவதும் என தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

    பிளஸ்

    பிளஸ்

    தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தை விட அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்துள்ளதே பெரிய பிளஸ் தான். மேலும், அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யாவின் நடிப்பு பலம். அந்த படத்தில் ஷ்ரிம்ப் பிசினஸ் செய்யலாம் என சொல்லிக் கொண்டே இருக்கும் நண்பர் போரில் உயிரிழந்து விடுவார். அதை சற்றே ஜட்டி தயாரிக்கும் பிசினஸாக இங்கே நாக சைதன்யாவுக்கு மாற்றி இருப்பது ரொம்பவே ஃபன்னாகவும் ரசிகர்களை தியேட்டரில் சிரிக்கவும் வைத்துள்ளது. சத்யஜித் பாண்டே எனும் சேதுவின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட. தனுஜ் திக்குவின் பின்னணி இசை மனதுக்கு இதம். மதங்களை விட மனிதம் முக்கியமானது என சொல்லப்பட்டுள்ள கருத்து என படம் முழுக்கவே பாசிட்டிவ் எனர்ஜியை கொடுப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது.

    மைனஸ்

    மைனஸ்

    அதிக பட்ஜெட்டில் எடுத்தாலும், அமீர்கான் மற்றும் கரீனா கபூர் இருவரது இளமைக் கால போர்ஷனுக்கு தலையை ஒட்டவைத்தது போல உள்ள சிஜி ரொம்பவே கொடுமையாக படத்தை கெடுத்து விடுகிறது. தனுஜ் திக்கு பின்னணி இசை நன்றாக இருந்தாலும், இசையமைப்பாளர் ப்ரீதமின் பாடல்கள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை சுமார் ரகமாக உள்ளது. படம் முழுக்க ஹீரோ அமீர்கான் ஓடிக் கொண்டிருப்பது 2கே கிட்ஸ்களை எந்தளவுக்கு கவரும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான்.

    English summary
    Laal Singh Chaddha Review in Tamil (லால் சிங் சத்தா விமர்சனம்): Aamir Khan and Kareena Kapoor different love story drama Laal Singh Chaddha will turn a honest remake of Forrest Gump.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X