Annapoorani Twitter Review: நயன்தாராவின் அன்னபூரணி ருசித்ததா? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா, பூர்ணிமா ரவி என பலர் நடித்துள்ளனர்.
சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

அன்னபூரணி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சமையல் சேவை புரியும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவரான அன்னபூரணி(நயன்தாரா) இவருடைய கனவே நாடு போற்றும் செஃப் ஆக வேண்டும் என்பதுதான். இந்த கனவிற்கு தடையாக குடும்பப் பின்னணியும் கலாச்சாரமும் இருந்ததால், தனது லட்சியத்தை தொடர வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கனவு காணும் நயன்தாரா: வாழ்க்கையில் தனது லட்சியத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் நயன்தாராவால், இன்ஸ்பயர் ஆகி வளர்ந்த செஃப் ஆனந்த் சுந்தரராஜன் (சத்யராஜ்). இதனால், அன்னபூரணிக்கு பல உதவிகளை செய்கிறார். இறுதியில், அன்னபூரணியின் ஆசை நிறைவேறியதா, அவரது குடும்பம் அதை ஏற்றுக்கொண்டதா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மனதை கவர்ந்த வசனம்: மேலும், எந்தக் கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதில்லை என்று ஜெய் பேசும் வசனமும், புடிச்சத பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்று நயன்தாரா சொல்லும் வசனம் ரசிக்கும் படி இருந்தது. தமனின் இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் என்று தோன்றவைத்தது.
பெண்களுக்கான படம்: அன்னபூரணி படம் பார்த்த இணையவாசி ஒருவர், இப்படம் பெண்களுக்கான படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். நயன்தாராவின் 75வது படத்தில் அவர் தனது ரசிகர்களுக்காக குறிப்பாக பெண்களுக்காக ஒரு ஊக்கமூட்டும் திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார். குழந்தைகளுடன் உங்கள் குடும்பத்துடன் திரைப்படத்தை பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











