Lady Voyeur review: அடுத்த வீட்டு பெட்ரூமை பார்த்ததால் வந்த வினை.. பதற வைக்கும் ஹாட் வெப்சீரிஸ்!

Rating:
3.5/5

நடிகர்கள்: டெபோரா நாசிமென்டோ, இம்மானுவேல் அராஜோ

இயக்கம்: லூசியானா ஒலிவெய்ரா, ஃபேப்ரிசியோ பின்டோ, லெட்டிசியா வெய்கா

ஓடிடி: நெட்பிளிக்ஸ்

எபிசோடுகள்: 10 (சுமார் 40 நிமிடங்கள் ஒரு எபிசோடு)

Lady Voyeur adult content web series review in Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியான ஹாட் வெப்சீரிஸான லேடி வோயர் வெப்சீரிஸ் பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத அதே நேரத்தில் அடல்ட் காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸாக உள்ளது.

மிராண்டா எனும் ஹேக்கர் பெண் தனது வீட்டுக்கு எதிரில் உள்ள கண்ணாடி ஃபிளாட்டில் நடக்கும் விஷயங்களை கேமரா வைத்து பார்க்க அங்கிருந்து அவருக்கு கிளம்பும் பிரச்சனைகளும் பணக்கார குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே இருக்கும் கள்ள உறவுகளும், ரகசியங்களும், அதற்காக நடக்கும் கொலைகள் என கடைசி வரை த்ரில்லுக்கும் ட்விஸ்ட்டுக்கும் பஞ்சம் இல்லாமல் உள்ளது.

இயக்குநர்கள் லூசியானா ஒலிவெய்ரா, ஃபேப்ரிசியோ பின்டோ மற்றும் லெட்டிசியா வெய்கா இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த 10 எபிசோடு கொண்ட வெப்சீரிஸ் எப்படி இருக்கு என்கிற

விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

Lady Voyeur adult content web series review in Tamil

என்ன கதை: நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள அடல்ட் வெப்சீரிஸான லேடி வோயர் வெப்சீரிஸில் மிராண்டா எனும் ஹேக்கருக்கு அவங்க பாட்டிக்கு இருப்பதை போன்றே மறதி நோய் வந்து விடும் என்கிற அச்சம் உள்ளது. அதனால் நிறைய பேருடன் பழக தயங்கி வரும் அவர் தனது அடுத்த வீட்டில் உள்ள விலைமாதுவின் வீட்டில் அரங்கேறும் உடலுறவு காட்சிகளை தனது கேமராவில் பார்த்து உச்சம் அடைகிறார்.

அவருக்கு ரீட்டா எனும் ஒரு தோழி உள்ளார். ஒருநாள் எதிர்வீட்டில் இருந்த க்லியோ மிராண்டாவின் வீட்டுக்கு வந்து தனது நாயை பார்த்துக் கொள்ளுமாறும் தான் பெரிய இடத்து கிளைன்ட்டுகளை பார்க்கப் போகிறேன் வர சில நாட்கள் ஆகும் என்கிறார்.

மேலும், தனது நாய் தன் வீட்டில் இருந்தே பழகி விட்டதால் என் வீட்டில் வந்து பார்த்துக் கொள்ள முடியுமா? என கேட்க, அந்த இடத்தின் மீது இருந்த மோகத்தால் மிராண்டாவும் தலையை ஆட்டுகிறார்.

Lady Voyeur adult content web series review in Tamil

மிராண்டா க்லியோவின் வீட்டுக்குச் சென்றதும் க்லியோ பயன்படுத்திய கவர்ச்சி உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு நிற்க அங்கே ஃபெர்னாண்டோ எனும் கஸ்டமர் க்லியோவை தேடி வருகிறார்.

ஃபெர்னாண்டாவுடன் உடலுறவு கொள்ளும் மிராண்டா அவர் சென்ற பின்னர் வயதான நபர் ஒருவர் அங்கே வந்து மிராண்டாவிடம் படுக்க அழைக்க அவர் முடியாது என மறுக்க அங்கே நடக்கும் சண்டையில் அந்த நபர் இறந்து விடுகிறார். வெளியே சென்ற ஃபெர்னாண்டோ என்ன சத்தம் என மீண்டும் மிராண்டாவை பார்க்க வர, அங்கே மிராண்டாவுக்காக அந்த உடலை அப்புறப்படுத்தும் ஃபெர்னாண்டோ தனக்காக நீ வேலை செய்ய முடியுமா எனக் கேட்கிறார்.

கோடீஸ்வரரான ஹெய்ட்டர் ஏகப்பட்ட சட்ட விரோதமான செயல்களை செய்து வருகிறார் அவரது கம்ப்யூட்டரை ஹேக் செய்து குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கேட்க, ஃபெர்னாண்டோ மீது காதலில் விழும் மிராண்டா அவருக்காக ஒத்துக் கொண்டு ஹெய்ட்டரிடம் வேலைக்குச் செல்கிறார்.

Lady Voyeur adult content web series review in Tamil

ஹெய்ட்டரின் மனைவி மர்மமான முறையில் கொல்லப்பட்டு நீச்சல் குளத்தில் நிர்வாணமாக கிடக்க அதே இடத்தில் மிராண்டாவும் போதையாக்கப்பட்டு கிடக்கிறார். அங்கிருந்து தப்பிக்கும் மிராண்டா அந்த கொலையை யார் செய்தார் என ஹேக்கிங் துணையுடன் ஒரு பக்கம் விசாரணை நடத்துகிறார்.

மறுபக்கம் போலீஸாரும் அந்த வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த கொலைகளை யார் செய்வது என விசாரித்து வருகின்றனர். ஹெய்ட்டருக்கு ஒரு பக்கம் மிராண்டா மீது காதல் ஏற்படுகிறது.

மேலும், தனது குழந்தையின் டிஎன்ஏ தன்னுடன் மேட்ச் ஆகவில்லை என்றும் தனது மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் நினைக்கும் ஹெய்ட்டர் அதை கண்டுபிடிக்க நினைக்கிறார்.

மிராண்டாவுக்கு கடைசி வரை யாருதான் வில்லன், யார் இப்படியெல்லாம் செய்கிறார் என்பதே புரியாமல் அந்த சிலந்தி வலையில் சிக்கித் தவிக்கிறார். கடைசியில் எல்லாத்துக்கும் காரணம் யார் என்று தெரிந்ததும் என்ன ஆகிறது என்பது தான் இந்த வெப்சீரிஸின் கிளைமேக்ஸ்.

Lady Voyeur adult content web series review in Tamil

பிளஸ்: ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படத்தின் ஒளிப்பதிவு, இசை, காட்சிகள் என பெரும் பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளனர். மிராண்டாவாக நடித்துள்ள டெபோரா, க்லோவாக நடித்த இம்மானுவேல் அராஜோ, ஹெயிட்டராக நடித்த ஆஞ்சலோ ரோஜர்ஸ் மற்றும் ரோட்ரிகோவாக நடித்த நிக்கோலஸ் ஆண்டுனஸ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் வேற லெவலில் உள்ளது படத்திற்கான பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

8 எபிசோடுகள் வரை யார் இதையெல்லாம் பண்ணுறாங்கன்னு தெரியாமல் மண்டையை போட்டு குழப்பி எடுப்பதும், நிர்வாணக் காட்சிகள் எல்லைமீறி ஏகத்துக்கும் நிறைந்திருப்பது இளைஞர்களை இந்த வெப்சீரிஸை பார்க்கத் தூண்டுகிறது.

மைனஸ்: கடைசி வரை ட்விஸ்ட் வைக்க வேண்டும் ரசிகர்களை போட்டுக் குழப்ப வேண்டும் என்றும் திகிலை கிளப்ப வேண்டும் என்பதற்காக இயக்குநர்கள் பண்ணது எல்லாம் ஓகே. ஆனால், கடைசியில் வில்லனாக காட்டும் நபரையும் அவர் ஏன் மிராண்டாவை பழிவாங்க இப்படியெல்லாம் செய்கிறார். எளிதில் போட்டுத் தள்ளிவிட்டு போயிருக்கலாமே? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

Lady Voyeur adult content web series review in Tamil

அதே போல கொலைகளும் தன்னை சுற்றி அத்தனை பிரச்சனைகள் நடந்தாலும் அடிக்கடி ஃபெர்னாண்டோவுடனும் ஹெய்ட்டருடனும் மாறி மாறி நாயகி மிராண்டா உடலுறவு கொள்ளும் காட்சிகள் கதையின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டு எரோடிக்கா ஃபீலிங்கையே அதிகரிப்பது பெரிய மைனஸ்.

பார்க்கலாமா? வேண்டாமா?: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஆபாசக் காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் என நிறைந்திருக்கும் இந்த வெப்சீரிஸ் கதை ரீதியாகவும் த்ரிலிங்கான இன்வெஸ்டிகேஷன் கதை பிரியர்களுக்கான செம தீனி என்றே சொல்லலாம். கதைக்கு கதையும் இருக்கு கவர்ச்சிக்கு கவர்ச்சியும் இருக்கும் இந்த வெப்சீரிஸை மிஸ் செய்யாமல் பார்க்கலாம். ஒரு எபிசோட் போட்டு விட்டால் அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்காமல் தூங்க மாட்டீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X