Lal Salaam Review: லால் சலாம் விமர்சனம்.. தேர் திருவிழாவா?.. காலி மைதானமா?.. ரஜினி கேமியோ எப்படி?

நடிகர்கள்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
நேரம்: 2 மணி நேரம் 32 நிமிடங்கள்
இயக்கம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரேட்டிங்:

Rating:
3.0/5
Star Cast: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
Director: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சென்னை: ’3’ மற்றும் ’வை ராஜா வை’ படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி உள்ளது லால் சலாம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே நடக்கும் மோதல்கள், அவர்களுக்குள் இருக்கும் பகை, ஊர் தேர் திருவிழா முதல் கிரிக்கெட் மைதானம் வரை என்ன என்ன பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதில், மொய்தீன் பாய் பங்கு என்ன? என்கிற கதையுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

Lal Salaam Review in Tamil: Rajinikanth’s powerful extended cameo saves the movie

ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் என்பதால் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என லைகா நிறுவனம் ரொம்பவே நம்பியது. ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நான் கேமியோ தான் பண்ணியிருக்கேன் என ரஜினிகாந்த் சொன்னதை கேட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிய ஓபனிங் கொடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

லால் சலாம் கதை: கிரிக்கெட், மதம், அரசியல், ஊரில் நடக்கும் தேர் திருவிழா, ஊருக்குள் நடக்கும் மதக்கலவரம், அதன் மூலம் நடத்தப்படும் மதநல்லிணக்க பாடம் என இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இடையே ஏற்படும் மோதல் குறித்து வலுவான காட்சி அமைப்புகள் இல்லாதது கதையில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியரான விக்ராந்த் மீது இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் கோபம் கொள்வது போன்ற காட்சிகள் குறியீடாக வைக்கப்பட்டது போலவே தெரிந்தாலும், அதில் சரியான அழுத்தம் இல்லாதது போன்றே திரையில் தெரிகிறது.

ஊரில் உள்ள 3ஸ்டார் அணி கிரிக்கெட் டீமில் விளையாடி வெற்றிப் பெற்று வரும் விஷ்ணு விஷால் இன்னொரு டீமில் சேர்ந்து விடுகிறார். அதன் பின்னர் அந்த டீம் தான் வெற்றி பெறுகிறது. 3ஸ்டார் அணியை வெற்றி பெற வைக்க விக்ராந்தை அந்த அணியில் சேர்க்கின்றனர். சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் ஆகாத நிலையில், விக்ராந்த் தனக்கு எதிராக ஆடுவது விஷ்ணு விஷலுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்குள் நடக்கும் சண்டையை சிலர் பயன்படுத்தி பிரச்சனையை பெரிதுபடுத்த முயலும் போது, தனது மகனுக்கு எதிராக விஷ்ணு விஷால் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் அதே பிரச்சனையுடன் ஊர் மக்கள் ஏன் சண்டை போடுகின்றனர். இது தப்பாச்சே என மொய்தீன் பாய் பாடம் நடத்துவது தான் இந்த படத்தின் கதை.

Lal Salaam Review in Tamil: Rajinikanth’s powerful extended cameo saves the movie

நல்ல கருத்து: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்தை முன் வைத்து படத்தை உருவாக்கி இருப்பதற்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைத்தே தீரும். சொந்த பந்தங்களை மறந்து விட்டு பணத்தை நோக்கி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை, கடவுளை மையப்படுத்தி மனிதர்களே தங்களை பல பிரிவுகளாக பிரித்துக் கொண்டு தேவையில்லாமல் உயர்வு, தாழ்வு கருதி சண்டை போடுவது எல்லாம் முட்டாள்த்தனம் என்பதை கிளைமேக்ஸ் காட்சியில் வசனங்கள் மூலமாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூலமாக கொண்டு சேர்த்து இருப்பது சிறப்பான விஷயம்.

பிளஸ்: மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்துள்ள சிறப்பு தோற்றம் தான் இந்த படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பாடல்கள் படத்திற்கு தேவையான பாடல்களாக உள்ளன. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கபில் தேவ் வரும் காட்சி, செந்தில் நடிப்பு, விஷ்ணு விஷால், விக்ராந்த் மோதல் காட்சிகள் என ஏகப்பட்ட பிளஸ்களை படத்தில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Lal Salaam Review in Tamil: Rajinikanths powerful extended cameo saves the movie

மைனஸ்: பாசிட்டிவ் மெசேஜ் மற்றும் மத நல்லிணக்க கதையை எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதையில் பல இடங்களில் சொதப்பி இருப்பதும், ஒரு டாக்குமென்ட்ரி பட பாணியில் படத்தை உருவாக்கி இருப்பதும் படத்திற்கு பெரிய பலவீனமாக உள்ளது. ஒரு இடத்தில் வசனங்கள் சூப்பராக இருக்கே என ரசிகர்கள் கைதட்டினாலும் ஒரு சில இடங்களில் பிளேடு போடுறாங்கப்பா என்கிற குரல் தான் தியேட்டர்களில் ஒலிக்கின்றன. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இந்த லால் சலாம் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தால் ஒரு முறை கொண்டாடலாம். ரஜினிகாந்த் வர எல்லா சீன்களுமே தெறி மாஸ் தான். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை மிஸ் செய்து விட வேண்டாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X