Lal Salaam Review: "பம்பாய்ல பாய் ஆளே வேறடா..” ரஜினியின் லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். லால் சலாம் படத்திற்கு நெட்டிசன்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதன்படி லால் சலாம் படத்தின் டிவிட்டர் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம்.
லால் சலாம் டிவிட்டர் விமர்சனம்: லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோவாக அசத்தியுள்ளார். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதால், இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு குறை வைக்காத அளவில் தற்போது லால் சலாம் படத்துக்கு வரவேற்பு காணப்படுகிறது.

லால் சலாம் படத்துக்கு தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ இல்லையென்றாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் லால் சலாம் திரைப்படம் வெளியாகிவிட்டது. இதனையடுத்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை டிவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.
அதன்படி, லால் சலாம் படத்துக்கு டிவிட்டரில் விமர்சனம் கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், வெளிநாடுகளில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லால் சலாம் பக்கா ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது, அப்பா ரஜினியை வைத்து தரமான சம்பவமாக ஐஸ்வர்யா கொடுத்துள்ளார். இடைவேளை காட்சியில் ரஜினியின் என்ட்ரி வேற லெவல், பம்பாய்ல பாய் ஆளே வேற டா என படத்துக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளார்.

இன்னொரு நெட்டிசனோ ரஜினி இன்ட்ரோ சீனை டிவிட்டரில் ஷேர் செய்து எதிர்பார்க்காத தலைவர் என்ட்ரி என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த காட்சியில் ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் தெறிக்க, ரஜினி தனது ஸ்டைலான ஆக்ஷன் மோடில் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுக்கிறார். இந்தக் காட்சிக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. ஆகமொத்தம் லால் சலாம் படத்தில் தலைவரின் கூஸ்பம்ஸ் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அதேபோல், மக்களை ஒன்றிணைக்கும் எந்த ஒரு நேர்மையான முயற்சியும் தோல்வியடையக் கூடாது என நெட்டிசன் ஒருவர் ட்வீட் போட்டுள்ளார். அதில் லால் சலாம் படத்தின் டைட்டில் கார்டில் ரஜினியின் பெயர் வரும் காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

லால் சலாம் இரண்டாம் பாகம் தீயாக இருக்கிறது என ஃபயர் எமோஜி போட்டு ஹைப் கொடுத்துள்ளார் ஒரு நெட்டிசன். தலைவரின் கெட்டப் தாறுமாறு எனக் கூறியுள்ள அவர், லால் சலாம் தனது முஸ்லீம் நண்பர்களுக்கான ட்ரிபியூட் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெயரை டேக் செய்து, நாம் ஜெயித்துவிட்டோம் அக்கா எனவும், மிகச் சிறந்த சோஷியல் மெசேஜ்ஜை கூறியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

லால் சலாம் எதிர்பார்த்ததை போல சூப்பராக இருக்கிறது, படத்துல எல்லாமே பக்கா... ஏஆர் ரஹ்மான் பிஜிஎம் சொல்லவே வேண்டாம், தெறிக்க விட்டுருக்கார்... லால் சலாம் படத்தில் நல்ல மெசேஜ் இருப்பதாகவும் ரஜினிக்காக இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும் நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

லால் சலாம் மிக முக்கியமான சமூக பிரச்சினையை பேசியுள்ளது. இது விருதுகளுக்காக கூட உருவாக்கப் பட்டிருக்கலாம். சீன் பை சீன் திரைப்படம் சிறப்பாக இருந்தாலும் எடிட்டிங் மட்டும் சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ரஜினி ரசிகர்கள் இது தலைவரின் படம் என நினைத்து போக வேண்டாம். ஆனால், மற்ற ரசிகர்களுக்கு லால் சலாம் தரமான ஜாக்பாட் மூவியாக இருக்கும் என டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக லால் சலாம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜெயிலரை தொடர்ந்து லால் சலாமும் தரமான கம்பேக் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











