Leo First Review: பட்டாசு கடையில நெருப்பு வச்சா எப்படி இருக்கும்.. லியோ பட முதல் விமர்சனம் இதோ!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்னும் 9 நாட்களில் தியேட்டர்களை தெறிக்க விட காத்திருக்கிறது. லியோ படத்தை ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் மற்றொரு பக்கம் ரத்னகுமார் என இருவர் மட்டுமே தீவிரமாக புரமோட் செய்து வருகின்றனர்.

வழக்கமாக விஜய் படங்கள் என்றால் அவரது குட்டி ஸ்டோரி தான் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரும் மெட்டீரியல் ஆக இருந்து வந்தது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள லியோ திரைப்படம் பான் இந்திய அளவில் ஹிட்டடிக்க பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடைபெறும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி கூட நடைபெறாமல் போய்விட்டது.

Leo first Review done by Director Rathnakumar

டிரெய்லர் புரமோஷன் மட்டுமே: ஆனால், லியோ டிரைலர் ரிலீஸ் ஆகி 45 மில்லியன் வியூஸ் கடந்து நான்கு நாட்களாக யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து லியோ படம் குறித்து ஏகப்பட்ட அப்டேட்களை கொடுத்து வருகிறார்.

அதேபோல மேயாத மான் படத்தின் இயக்குநரும் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களின் துணை கதை ஆசிரியருமான ரத்னகுமார் தனது பங்குக்கு பேட்டியளித்து விஜய் ரசிகர்களை ஃபயர் மோடுக்கு கொண்டு வருகிறார்.

பட்டாசு கடையே பத்திக்கிட்டு வெடிச்சா: இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் லியோ படத்துக்கு விஜய் 130 கோடி சம்பளம் வாங்கியதாகவும் படத்தின் முதல் பாதி ஆட்டோ பாமில் பற்ற வைத்தது போல வெடிப்பது போல் இருக்கும், திடீரென அமைதியாகும், ஒழுங்கா பற்ற வைக்கவில்லை என நினைத்து கிட்டே போனால், மீண்டும் வெடிக்க தொடங்கும் அப்படித்தான் முதல் பாதி இருக்கும் என்றும் ஆனால் இரண்டாம் பாதி பட்டாசு கடையில் பற்ற வைத்தால் எப்படி கன்னா பின்னாவென வெடிக்குமோ அப்படி தீயாக இருக்கும் என தனது முதல் விமர்சனத்தை வைத்துள்ளர்.

மேலும், இந்த படத்தில் விஜய் மற்றும் அர்ஜுன் பேசிக் கொள்ளும் காட்சி டாக் ஆஃப் தி டவுனாக மாறும் என்றும், இந்த படத்தில் அனிருத்தின் ரீ ரெக்கார்டிங் இல்லாமலே படம் பிளாக்பஸ்டர் தான் என்றும், அனிருத்தின் இசையும் கலந்து விட்ட பின்னர் டபுள் பிளாக்பஸ்டர் ரெடியென லோகேஷிடம் தான் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

இந்த முறை இந்த இருவர் மட்டுமே பேசி, விஜய் பேசாமல் வெளியாக உள்ள லியோ படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டால், அதன் பின்னர் அஜித் போல விஜய்யும் படத்தின் புரமோஷனுக்காக பேசவே மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X