Leo Positive Review: கொடுக்குற காசுக்கு லியோ வொர்த் தான்.. படம் முழுக்க இவ்வளவு பாசிட்டிவ் இருக்கே!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு இவ்வளவு கடுமையான விமர்சனங்களும், கலவையான விமர்சனங்களும் வர காரணமே அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் கிளப்பிய பில்டப்புகளும், எதிர்பார்ப்புகளும் தான் என்று தான் சொல்ல வேண்டும்.

லோகேஷ் கனகராஜ் தான் எடுத்துக் கொண்ட ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் கதையை எந்தளவுக்கு மெருகேற்றி ஆக்‌ஷன் படமாக கொடுக்க முடியுமோ அதை கச்சிதமாக செய்துள்ளார்.

Leo Positive Review: Vijay and Lokesh Kanagaraj delivers a feel good action drama

2005ல் வெளியான படம் என்பதால், அதே போன்ற கதையை பல படங்களில் அதற்கு முன்பும் பின்பும் பார்த்த நிலையில், தான் இந்த சிக்கல் எழுந்துள்ளது. ஆனால், லியோ படத்தில் ரசிகர்களுக்காக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள பல பாசிட்டிவான விஷயங்கள் குறித்து இங்கே காணலாம்.

சாண்டி நடிப்பு: குட்டி பவானியாக மாஸ்டர் படத்தில் மகேந்திரன் மிரட்டியதை போலவே இந்த படத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் காஃபி கேட்டு வில்லத்தனத்தில் சாண்டி மாஸ்டர் சிக்ஸர் அடித்துள்ளார். அதிலும், பிக் பாஸ் ஜனனியை அவர் டார்ச்சர் பண்ணும் காட்சிகளும், ஆரம்பத்தில் இருந்தே அசல் சைக்கோ போல நடித்திருப்பதெல்லாம் வேறல் லெவல் மிரட்டல். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் போர்ஷனும் இருந்திருந்தால் லியோவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் துளியும் வந்திருக்காது.

Leo Positive Review: Vijay and Lokesh Kanagaraj delivers a feel good action drama

ஹைனா சீன்: படத்தின் முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க என லோகேஷ் கனகராஜ் சொன்னதற்கு முக்கிய காரணமே ஆரம்பமே அந்த ஹைனா சீன் தான். சிஜி காட்சியில் நிஜ ஹைனாவையே நடிக்க வைத்தது போல உருவாக்கி இருப்பதும், கடைசி கிளைமேக்ஸில் ஒரு செம என்ட்ரியை வைத்து கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அழகான ஃபேமிலி டிராமா: எந்தவொரு சூழ்நிலையிலும் தனது குடும்பத்துக்காக போராட வேண்டும் என்கிற குடும்பத் தலைவனாக விஜய் நடித்து மிரட்டியிருக்கிறார். மனைவியாக த்ரிஷா, மகனாக மேத்யூ தாமஸ் மற்றும் மகளாக இயல் என ஓவியமாக இருக்கிறது. நண்பராக கெளதம் மேனன் அவரது மனைவியாக பிரியா ஆனந்தும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். குழந்தையிடம் நீயாவது நம்புறீயாம்மான்னு கேட்பது, மனைவியிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மகனுடன் டீலிங் செய்வது என எல்லாமே சூப்பர் தான்.

Leo Positive Review: Vijay and Lokesh Kanagaraj delivers a feel good action drama

போதைப்பொருள் எதிர்ப்பு: விஜய் சிகரெட் பிடிக்கிறார், சரக்கடிக்கிறார் என சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், படத்தின் மைய கருவே போதைப் பொருளை மொத்தமாக ஒழிப்பது தான். கிளைமேக்ஸில் போதைப் பொருள் குடோவுனை காலி செய்வதும், எல்சியூ கனெக்ட்டில் இணைவதுமாக லோகி தனது சமூக அக்கறையை அழகாக காட்டியிருக்கிறார்.

தளபதி விஜய்: விக்ரம் படத்தில் ஏகப்பட்ட ஏஜென்ட்டுகள், பகத் ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என பலரும் பலமாக அமைந்தனர். அதே போல ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் சூப்பர்ஸ்டாருக்கு உதவிக்கரம் நீட்டினர். ஆனால், இங்கே சிங்கிள் சிங்கமாக விஜய் ஒட்டுமொத்த எதிரிகளையும் துவம்சம் செய்வது, அடிவாங்கி, அடி கொடுப்பது, குளிர் பனியில் விழுந்து புரண்டு நடிப்பது, சட்டையை கழட்டி தனது ஃபிட்டான பாடியை காட்டுவது, நா ரெடி தான் பாடலில் நடனமாடி அசத்துவது என தனது ரசிகர்களுக்காக ஒட்டுமொத்த எனர்ஜியையும் இறக்கி உள்ளார். கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பார்ப்பவர்களுக்கு குறைகள் ஆங்காங்கே தென்பட்டாலும், கொடுத்த காசுக்கு நிறைவான படம் என்கிற திருப்தியுடனே லியோ திருப்பி அனுப்பும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X