Leo Review: லியோ விமர்சனம்.. உண்மையாகவே படம் நல்லா இருக்கா? இல்லையா?.. விஜய் நடிப்பு எப்படி?

Rating:
3.5/5

நடிகர்கள்: விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்
இசை: அனிருத்
நேரம்: 2 மணி நேரம் 43 நிமிடங்கள்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தாறுமாறாக எஃபோர்ட் போட்டு நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் விஜய் ரசிகர்களுக்கான செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் கார்த்தியின் கைதி மற்றும் விஜய் நடித்த மாஸ்டர் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து லோகேஷ் கனகராஜை தேடும் ரசிகர்களுக்கு சிறிது அல்ல பெரிய ஏமாற்றம் தான்.

ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் பெயருக்கு நான் ஒரு படத்தை பண்ணிக் காட்டுறேன் என அந்த படத்தின் இயக்குநருக்கே சவால் விட்டு எடுத்தது போல லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட கதையை சீராக செய்துள்ளார். ஆனால், ரஜினிகாந்தின் ஜெயிலர், கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்த கூஸ்பம்ப்ஸ் மிஸ்ஸிங். சரி வாங்க லியோவை மொத்தமாக பிரித்து மேய்ந்து விடுவோம்..

லியோ கதை: ஊருக்குள் அத்துமீறி நுழைந்த ஹைனா ஒன்றை காபி ஷாப் ஓனரும் விலங்கு நல ஆர்வலருமான பார்த்திபன் மடக்கி பிடித்து அதனை தத்தெடுத்து வளர்க்கிறார். மிஷ்கின் மற்றும் சாண்டி இருவரும் ஊரில் பல சம்பவங்களை செய்து விட்டு பார்த்திபன் பேக்கரிக்கு வர, பிக் பாஸ் ஜனனியையும் தனது மகளையும் காப்பாற்ற துப்பாக்கி எடுத்து இருவரை மட்டுமின்றி அவர்களுடன் வந்த பலரை போட்டுத் தள்ளுகிறார். அதற்காக, சிறை, வழக்கு என சில ஜவ்வு சீன்கள் இழுக்கின்றன. அதை தொடர்ந்து விஜய்யின் போட்டோ லீக்காக மகன் லியோ கிடைத்து விட்டான் என ஆண்டனி தாஸ் தனது படையுடன் கிளம்பி வருகிறார்.

Leo Review in Tamil: Lokesh Kanagaraj style of History of Violence with Vijay is a watchable

பார்த்திபன் தான் லியோ இல்லை என பலமுறை சொல்லியும் நம்பாமல் நடக்கும் மோதலில் அனைவரையும் பார்த்திபன் போட்டுத் தள்ளி தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அவர் தான் லியோவா? இல்லையா என்பதை கிளைமேக்ஸ் வரை கொண்டு சென்ற இடத்தில் லோகேஷ் கனகராஜ் ஸ்கோர் செய்துள்ளார்.

விஜய்யின் தி பெஸ்ட் ஆக்டிங்: நடிகர் விஜய் இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் நடிகராக மிரட்டியுள்ளார். மொத்த கண்ணு முழியும் வெளியே பிதுங்கி வந்து அவர் கொடுக்த்திருக்கும் அசத்தலான ஆக்டிங் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கை தட்ட வைக்கிறது. விஜய் இந்த வயதிலும் எந்தளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார் என்பதை முதலில் வரும் ஹைனா சண்டையில் இருந்து கடைசியில் அர்ஜுன் உடன் போடும் சண்டை காட்சி வரை லோகேஷ் கனகராஜ் ஹைலைட் செய்து காட்டியிருப்பது சிறப்பு.

மற்ற நடிகர்கள்: விஜய்யை தொடர்ந்து த்ரிஷா மனைவியாக நடித்திருப்பதை விட இரு குழந்தைகளின் அம்மாவாக அசத்தல் நடிப்பு. ஆனால், மேத்யூ தாமஸுக்கு அம்மா த்ரிஷா என்பதை ஏற்க முடியாத அளவுக்கு படத்திலே ஒரே ஹைட்டில் இருவரையும் காட்டும் சீன் அமைந்திருக்கும். நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜார்ஜ் மரியன் எமோஷனல் கனெக்ட். அப்பா அண்டனி தாஸ் சஞ்சய் தத், சித்தப்பா ஹரோல்ட் தாஸ் அர்ஜுன் எல்லாம் தாறுமாறாக இருந்தாலும், அவர்களுக்கான பேக் கிரவுண்ட் ஸ்டோரி ரொம்பவே வீக்காக உள்ளது ஏமாற்றம்.

பிளஸ்: நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் தான் லியோ படத்தின் பிளஸ் என்று சொல்லலாம். கெளதம் மேனன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, சர்ப்ரைஸாக வரும் மடோனா சபாஸ்டியன் என அனைவரது நடிப்பும் சிறப்பு. பின்னணி இசையில் அனிருத் பட்டையை கிளப்பி குறிப்பாக இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றியுள்ளார். படம் முழுக்க இயக்குநரை தாண்டி பாராட்டுக்களை அள்ளுவது ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் தான். அவர்கள் இல்லை என்றால் லியோ நிச்சயம் மொக்கை வாங்கியிருக்கும்.

மைனஸ்: ஆக்‌ஷன் காட்சிகளை அதகளப்படுத்தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை எடுத்துக் காட்டுகிறேன் என்றும் அதில், எல்சியூவை எப்படி கனெக்ட் செய்வது என லோகேஷ் கனகராஜ் பண்ண விஷயம் பாராட்டுக்களை அள்ளினாலும், முதல் பாதியில் தேவையில்லாத அந்த கைது, கோர்ட் சீன், ஜெயிலில் இருக்கும் காட்சி, பின்னர் வீர தீர விருதுக்கு பரிந்துரை என பல சொதப்பல் சீன்கள் முதல் பாதியிலும் ரசிகர்களை சில இடங்களில் தூங்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் லியோ தாஸை காட்டும் இடத்தில் அப்படியே புஷ்பா படத்தின் வாடை பலமாக அடிக்கிறது. லியோ தாஸின் கோட்டை என அந்த ஃபேக்டரியிலேயே படத்தை காட்டும் நிலையில், அவங்களுக்கெல்லாம் வீடு வாசல் எல்லாம் இருக்காதா? என்கிற ஜெயிலர் படத்தில் வரும் அதே சந்தேகம் இங்கேயும் எழுகிறது.

Leo Review in Tamil: Lokesh Kanagaraj style of History of Violence with Vijay is a watchable

ஸ்பெஷல் கேமியோ: எதிர்பார்த்த படியே கடைசி கிளைமேக்ஸுக்கு பிறகு ஸ்பெஷல் கேமியோ இருக்கிறது. ஆனால், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் செய்த மேஜிக்கை அது செய்யாமல் வெறும் வாய்ஸாகவே மட்டும் வந்து போவது ரசிகர்களை விக்ரம் 3 வரை வெயிட் பண்ண வைத்துள்ளது. மொத்தத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான் இந்த லியோ.. ஆனால், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X