Leo Review: லியோ ட்விட்டர் விமர்சனம்.. வெறித்தனத்தின் உச்சம்.. நடிப்பில் பட்டாசு கிளப்பிய விஜய்!

சென்னை: Leo Twitter Review - LCU: லோகேஷ் கனகராஜ் பிராமிஸ் செய்ததை போல இது 100 சதவீதம் அவருடைய படமாக இருந்தாலும், 1000 சதவீதம் தளபதி விஜய்யோட படமாக திரையில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் திரையிடப்பட்டு டிக்கெட் கிடைத்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தியேட்டர்களில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Leo Twitter Review and Reactions are here: A Never seen Thalapathy Vijay stuns with his performance

லியோ திரைப்படம் எல்சியூ தான் என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், ரசிகர்கள் லியோ படத்தை பார்த்து விட்டு பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே காணலாம்.

விஜய்யின் லியோ: கைதி படத்தை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜை நம்பி மாஸ்டர் படத்தை கொடுத்து லோகேஷ் கனகராஜை இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் எங்க அண்ணனுக்கு நானும் தரமா செய்வேன் என லோகேஷ் கனகராஜ் செய்துள்ள சம்பவம் தான் லியோ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் பாதி பட்டாசாக இருப்பதாகவும் இதுவரை பார்த்திராத விஜய்யின் நடிப்பை லியோ படத்தில் ரசிக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.

Leo Twitter Review and Reactions are here: A Never seen Thalapathy Vijay stuns with his performance

இன்டெர்வெலில் டைட்டில்: இது ஸ்பாயிலர் தான்.. ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் டைட்டில் எப்படி இடைவேளையின் போது போடுவார்களோ அதே போலத்தான் லியோ படத்தின் டைட்டில் இடைவேளையில் தான் போடுகின்றனர் என ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

சாண்டி சீன் தெறிக்குது: லியோ படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் மிஸ்கின் நடிகர் விஜய்யின் இடத்துக்கு சென்று அவருடன் பிரச்சனை பண்ணும் போது, சண்டை நடக்கிறது. கடைசியாக பார்த்திபன் விஜய்யின் குழந்தையை சாண்டி மாஸ்டர் வெறித்தனமாக கொல்லப் போக, துப்பாக்கி எடுத்து, மிஷ்கின் மற்றும் சாண்டியை சுட்டுத் தள்ளும் காட்சிகளை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Leo Twitter Review and Reactions are here: A Never seen Thalapathy Vijay stuns with his performance

ஃபர்ஸ்ட் ஹாஃப் ஃபயரு: மாஸ்டர், விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளை விட வேறலெவலில் லியோ படத்தின் ப்ரீ இன்டர்வெல் சீன் ஃபயராக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி கொளுத்தி வருகின்றனர்.

Leo Twitter Review and Reactions are here: A Never seen Thalapathy Vijay stuns with his performance

பாகுபலி, ராக்கி பாய் சண்டைக்கு வாங்க: டேய் பாகுபலி, டேய் ராக்கி பாய் இப்போ வாங்கடா சண்டைக்கு என விஜய் ரசிகர்கள் லியோ படத்தை பார்த்த வெறியில் ட்வீட் போட்டு வருகின்றனர்.

Leo Twitter Review and Reactions are here: A Never seen Thalapathy Vijay stuns with his performance

டிப்பில் மிரட்டிட்டாரு: நடிகர் விஜய் சிறந்த நடிகர் என்று மட்டுமே அவரை பாராட்டும் பலர் அவரது நடிப்பை பெரிதாக பாராட்டியதே இல்லை. அதை உடைத்து விஜய்யின் ரியல் வெறித்தனமான நடிப்பை காட்ட வேண்டும் என துப்பாக்கியை கீழே போட்டு விட்டு விஜய் அழும் காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. லியோ திரைப்படம் முதல் நாள் வசூல் 120 கோடியை தாண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X