Liger Twitter Review: விஜய் தேவரகொண்டாவின் உழைப்பு வீணாப்போச்சே.. லைகர் எப்படி இருக்கு?

சென்னை: தெலுங்கு, இந்தி பைலிங்குவலாக உருவாகி உள்ள லைகர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

Recommended Video

Liger Review | என்ன வம்புல மாட்டி விடுறீங்களா? - Cool Suresh

கரண் ஜோஹர் தயாரிப்பு, வாரிசு நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார், ஆபாச பாடல் வரிகள் என ஏகப்பட்ட சர்ச்சைகள் காரணமாக லைகர் படத்தையும் பாய்காட் பண்ண வேண்டும் என பாலிவுட்டில் டிரெண்ட் செய்தனர்.

ஆனால், படத்தை பார்த்து அப்செட் ஆன ரசிகர்கள் பாய்காட் எல்லாம் பண்ண வேண்டாம் படமே படுத்துடும் என ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவின் லைகர்

விஜய் தேவரகொண்டாவின் லைகர்

இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி உள்ள லைகர் திரைப்படம் இன்று வெளியானது. MMA ஃபைட்டராக விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் நடித்துள்ளார். திக்குவாய் பிரச்சனை உடன் இருக்கும் அவரை நாயகி வெறுப்பதும், பின்னர் ஹீரோயினை கடத்தி வைக்க ஹீரோ சண்டையிட்டு காப்பாற்றுவதாக படம் பழைய ஃபார்மேட்டில் உள்ளது.

வேஸ்ட் ஆஃப் டைம்

வேஸ்ட் ஆஃப் டைம்

விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை பார்த்து யாரும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், அந்த அளவுக்கு படம் படு மொக்கையாக இருக்கு, வேஸ்ட் ஆஃப் டைம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் காசு கொடுத்து FDFS பார்த்தது வீணாப் போச்சேங்கிற கடுப்பில் புலம்பி வருகின்றனர்.

ரசிகர்களை ஏமாற்றி விட்டனர்

ரசிகர்களை ஏமாற்றி விட்டனர்

முதல்ல லைகர் படம் தெலுங்கு படமே இல்லை. ஒட்டுமொத்த படமும் இந்தியில் எடுக்கப்பட்டு, பின்னர் தெலுங்கில் டப் செய்துள்ளனர். தெலுங்கு ரசிகர்களை சுத்தமா மதிக்காமல் ஏமாற்றி விட்டனர். விஜய் தேவரகொண்டாவின் கடின உழைப்பு மட்டும் தான் படத்தில் பாசிட்டிவ் ஆக உள்ளது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

எக்ஸலண்ட்

எக்ஸலண்ட்

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை அழகாக படமாக்கி உள்ளனர். விஜய் தேவரகொண்டா சண்டைக் காட்சிகளில் பாயும் புலியாகவும் சீறும் சிங்கமாகவும் இருக்கிறார். அனன்யா பாண்டே அழகு பதுமை. படம் ரொம்பவே நல்லா இருக்கு என இந்த விஜய் தேவரகொண்டா ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

பாய்காட்டே பண்ண வேண்டாம்

பாய்காட்டே பண்ண வேண்டாம்

படம் ரொம்ப மோசமாக உள்ளது. பாய்காட் டிரெண்ட் செய்து இந்த படத்துக்கு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். படமே ஒரு டிசாஸ்டர் என இந்த நெட்டிசன் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். லைகர் படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகிறது.

காண்டம் யூஸ் பண்ணியிருக்கலாம்

காண்டம் யூஸ் பண்ணியிருக்கலாம்

அந்த ஆம்பள சிங்கமும் பொம்பள புலியும் காண்டம் யூஸ் பண்ணியிருக்கலாம். இப்படியொரு மோசமான கிராஸ் ப்ரீட் பிறந்திருக்காது. போஜ்பூரியில் எடுக்கப்பட்ட ஸ்பூஃப் மூவி மாதிரி இருக்கு என இந்த நெட்டிசன் லைகர் படத்தை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X