Lingam Review: லிங்கம் விமர்சனம்.. கதிருக்கு இந்தக் கதாபாத்திரம் எல்லாம்.. எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநர் லக்‌ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் கதிர், திவ்ய பாரதி, போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் வெப் சீரிஸ் லிங்கம். மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்டுள்ள இந்த வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

கபடி வீரராக ஜொலிக்கும் லிங்கம் (கதிர்), காவல்துறை அதிகாரி ஆவதை லட்சியமாகக் கொண்டுள்ளார். ஏற்கனவே இரண்டு ஊர்களுக்கு இடையே இருந்த முன்பகை காரணமாக, அவர் கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவமும் அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. லிங்கம் எப்படி ஒரு ரவுடியாக மாறுகிறார், அதன் பிறகு அவர் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார், அதற்காக அவர் கொடுக்கும் விலை என்ன என்பதுதான் மீதிக்கதை.

80-களில் கதை நடப்பது போல் இருப்பதால், ஒவ்வொரு காட்சியிலும் படக்குழு சிறப்பாக உழைத்துள்ளது. குறிப்பாக ஆர்ட் டைரக்ஷன் குழு தங்களது வேலையை கண்ணும் கருத்துமாக செய்துள்ளது.

Lingam Review  Kathir Shines in a Powerful Role as This Gritty Crime Drama Delivers

கதிர்: மையக் கதாபாத்திரமான லிங்கமாக கதிர் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளார். அதற்கு ஏற்ற வகையில் அவரும் சிறப்பாக நடித்துள்ளார். தனது கேரியரின் தொடக்கத்தில் மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் கனமான கதாபாத்திரங்களை கையாண்ட கதிருக்கு, இந்த வெப் சீரிஸ் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது.

பூர்ணிமா ரவி: போஸ் வெங்கட்டின் தந்திரமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கதிருக்கு ஜோடியாக நடித்துள்ள திவ்ய பாரதி, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டு பாராட்டைப் பெறுகிறார். பூர்ணிமா ரவி ஆங்காங்கே வந்தாலும், ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் தனித்து நிற்கிறது.

பலம்: மொத்தம் 8 எபிசோடுகள். ஒவ்வொரு எபிசோடும் முடியும் போதும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. சில காட்சிகளை முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும், அது வெப் சீரிஸின் சுவாரஸ்யத்தை பாதிக்கும் அளவுக்கு இல்லை. நடிப்பு, எடிட்டிங், குறிப்பாக கலர் கிரேடிங் ஆகியவை இந்த வெப் சீரிஸுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அதேபோல் டோனி பிரிட்டோவின் பாடல்களும் பின்னணி இசையும் கச்சிதமாக கைகொடுத்துள்ளன.

Lingam Review  Kathir Shines in a Powerful Role as This Gritty Crime Drama Delivers

ஒர்த்தா?: கேங் வார், சண்டைக் காட்சிகள், அவற்றுக்கான திரைக்கதை அமைப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் மெனக்கெட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்காக அவருக்குப் பாராட்டுகள். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் சீரிஸ், எதார்த்த உணர்வுடன் கனெக்ட் செய்யக்கூடிய தரமான ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படைப்பைப் பார்க்க விரும்புபவர்களுக்கு லிங்கம் வெப் சீரிஸ் நல்ல தேர்வாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X