LIK X Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் எப்படி இருக்கு?.. இதோ ட்விட்டர் விமர்சனம் வந்துடுச்சே!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கெளரி கிஷன், ஆனந்தராஜ், சோபா பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany - LIK) உலகம் முழுவதும் இன்று வெளியானது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விக்னேஷ் சிவன் லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்த எல்ஐகே திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று வெளியானது.

Love Insurance Kompany  LIK  X Review in Tamil  Pradeep Ranganathan s another hit is loading

இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படம் குறித்த விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் பார்வையில், விக்னேஷ் சிவன் - பிரதீப் கூட்டணி அடுத்த பிளாக்பஸ்டரா? அல்லது சுமார் மூஞ்சி குமாரா? என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க..

எல்ஐகே வெளியானது: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கு பதிலாக விக்னேஷ் சிவன் படம் வந்திருக்க வேண்டியது. ஆனால், விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித் பேக் டு பேக் 2 படங்களை கொடுத்துவிட்டார். போன தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 18க்கு தள்ளிப்போனது. இந்த ஆண்டு காதலர் தினத்தையும் மிஸ் செய்த எல்ஐகே, கடைசியாக ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் பல தடைகளை தாண்டி வெளியாகி விட்டது.

முதல் பாதி ஜாலி: அமெரிக்காவில் இருந்து காலையிலேயே எல்ஐகே படத்தை பார்த்து விட்ட கிறிஸ்டோபர் கனகராஜ் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் முதல் பாதி செம ஜாலியாக இருக்கு என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். 2040ல் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதை காட்டிய விதம், க்ரித்தி ஷெட்டி இன்ட்ரோ, ஓபன் ஃபிரெண்ட் யோகி பாபு காமெடி, அனிருத் இசையில் தீமா பாடல் மற்றும் பின்னணி இசை என எல்லாமே சூப்பர் என பாராட்டியுள்ளார்.

மொத்த படமும் எப்படி இருக்கு?: எல்ஐகே படத்தின் பலமே படம் 2040ல் நடக்கிறது என்பது தான். அதிலும், பிரதீப் ரங்கநாதன் - எஸ்ஜே சூர்யா ஃபேஸ் ஆஃப் சீன் வேறலெவல். ஆனால், விக்னேஷ் சிவனின் யதார்த்தமே இல்லாத திரைக்கதை மற்றும் நீண்ட இழுவையான காட்சிகள் கடுப்பை கிளப்புகிறது என்றும் ஆனால், பிரதீப் ரங்கநாதன் நடிப்பால் கடைசி வரை படம் ஜாலியாகவே நகர்கிறது. கண்டிப்பாக எல்ஐகே ஒரு எண்டர்டெயினிங் வாட்ச் என்று கிறிஸ்டோபர் கனககராஜ் மொத்த படத்துக்கான விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.

சுமார் ரகம் தான்: 'LIK' என்ற எதிர்கால ரொமாண்டிக் காமெடி திரைப்படம், சுவாரஸ்யமான கருவையும் புதுமையான அமைப்பையும் கொண்டிருந்தது. ஆனால், அதன் செயலாக்கம் எதிர்பார்த்த அளவு ஈர்க்கவில்லை.

இப்படத்தின் தனிச்சிறப்பு அதன் எதிர்கால உலகச் சித்தரிப்புதான். சில சமயங்களில் சற்று விசித்திரமாகத் தோன்றினாலும், முதல் பாதியில் சில வேடிக்கையான தருணங்களை இது வழங்குகிறது. கதைக்கரு கவர்ச்சிகரமானதாகவும், பெரும் சாத்தியக்கூறுகள் கொண்டதாகவும் இருந்தது. அதைச் செயல்படுத்திய விதம் முழுமையாக அமையவில்லை.

இரண்டாம் பாதியில் வீக்கான திரைக்கதை படத்தை சொதப்பி விடுகிறது, பிரதீப் ரங்கநாதன் படம் சலிப்பூட்டும் வகையில் இழுத்தடிக்கப்பட்டது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் சில காமெடி சீன்கள் எடுபட்டன. ஆனால், மொத்த படமாக வெற்றிபெறப் போதுமானவை அல்ல. தயாரிப்புத் தரம் மிகச் சிறப்பாக செலவுகளை அதிகமாகவே செய்திருப்பது தெரிகிறது.

நகைச்சுவை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுபட்டாலும், முழுமையாகப் பார்க்கையில் 'LIK' சராசரிக்கும் குறைவாகவே உள்ள படம் என வெங்கி தனது விமர்சனத்தில் விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X